எந்த ஒரு தகவலுமின்றி மாறாக ஆட்சியை கையகபடுத்தும் நோக்கில் அல்லதுமக்களை துண்புருத்தும் நோக்கில் நடுவணரசு செயல்படும் என்கிற பட்சத்தில்.. அந்த நிலை ஏற்படும் பட்சத்தில் நாங்கள் எல்லாவற்றிருக்கும் குறித்தஏற்பாட்டுடன் இருக்கிறோம். தமிழகம் தன்னை தற்காத்துகொள்ளும் தகுதியுடன், உறுதியுடன் இருக்கிறது.
வெற்றிமாறனின் செவ்வி எந்த ஒரு மாறுதலையும், சலனத்தையும்கொடுக்கவில்லை, மாறாக வடநாட்டு செய்திதாற்க்களில் ஒரு மூலையில்நகைச்சுவையை போல், எள்ளி நகையாடி எழுதியிருந்தார்கள். ஆனால், ஒரே ஒருஇந்தியத்துவா நாளிதழ் மட்டும் எச்சரிக்கை உணர்வுடன் கடுமையாக அரசை சாடிஎழுதியிருந்தது. உலகத்தின் வரலாற்றை ஒருவனின் புத்தி மாற்றப்போகிறதுஎன்பது தெரிந்திருக்குமோ என்னவோ. அதேபோல் தமிழகத்திலும் பெரிய ஒருசலமும் பெரிதாக இல்லை., இல்லை காட்டிக்கொள்ளவில்லை என்பதுதான்உண்மை. இந்த அமைதி ஒரு அரைக்கோடி மக்களின் இறுக்கிவைத்த அழுத்தம்என்பது யாருக்கும் தெரியாது, ஆம், நான் கக்கிவிடபோகிறேன் என்றுசொல்லிவிட்டா கொட்டுகிறது எரிமலைகள்.
ஐயா வணக்கம். எட்டி நோக்கினார் தாமரைகண்ணன். வணக்கத்தை கண்அசைவில் இயம்பினார். நீங்கள் சொல்லியனுப்பிய கைத்தடியும், சாய்நாற்காலியும் ... சரிபார்த்துகொள்ளுங்கள் ஐயா. நீ எந்தகடைகாரனப்பா... ஐயாநான் குருசாமி நாடார் கடைக்காரன். சரி தம்பி.. தண்ணி ஏதாவதுசாப்பிடுகிறாயா...அம்மா கவிதா.. குடிக்க கொண்டுவாம்மா... ஆமாட.. நான் கூடஏதோ சேட்டுக்கடையல வாங்கியாந்துட்டன்னுநெனச்சிட்டேன்..தாமரைக்கண்ணன்.. அசையும் சாய்நாற்காலியில் தானும் சிறிதுஅசை போட்டார்.
ஏறக்குறைய முப்பத்தி ஐந்து ஆண்டுகளிருக்கும்... பள்ளிக்கூட வாசலில் தன்மகிழுந்தை திறக்கும் தருவாயில் கேட்டது ஒரு குரல் "ஐயா வணக்கம்", வணக்கம். சாலமன் மாணிக்கம் என்னை அனுப்பிவைத்தார். ஆமா.. ஆமா எனமுகமலர கூப்பிட்டார்... மின்மடல் பார்த்தேன்... நீங்கள் வீட்டுக்கேவந்திருக்கலாம். ஆமா, வாங்க வீட்டுல போய் சாவகசமா பேசலாம். மாணிக்கம்ஐயா எப்பிடி இருக்காக.. வயசுவேற கூப்பிடுது.. இன்னும் வேலைய குறைக்கவேஇல்லை. கூடவே ஒரு இளங்கன்றை கூட்டிவந்திருந்தார். அது தன் வயதை மீறிஅறிவுத்திமிர் காண்பித்தது. ஐயா.. என் பெயர் பேரறிவாளன், இது மகன்வெற்றிமாறன். வசதி வாய்ப்புக்கு ஒன்னும் கொறை வைக்கல.. ஏதாவது நான்செய்யணுமுன்னு தோனுச்சு...என்னால முடியல..அதேன்..என் மகனைகூட்டியாந்திரிக்கேன்..அறிஞர் குணா புத்தகம், அரிமாவளவன் எழுத்து, இன்னும்சில வலைப்பூக்கள் அறிவு, அப்பறம் கொஞ்சம் மின்மடல் தகவல்கள். இதுமட்டுந்தான் எனக்கு தெரிந்த தமிழ்தேசம், புண்ணிய பூமி. உங்களுக்கு தெரியாததுஇல்ல... காமராசருக்கு அப்பறம்... தமிழனை ஒக்காரவைக்காத ஒதாவாகறைகள்... ஆமா அதுக்கு இந்த வாத்தியார் என்ன செய்யனும் புரியாமல் கேட்டார்தாமரைக்கண்ணன். உங்கள் எழுத்தும், உணர்வும் செயலுக்கு வரணும். அதுக்குஎன் மகன் ஒங்ககிட்ட படிக்கணும். சற்று நேரே உட்கார்ந்து ஆராய்ந்து கேட்டார்.... உங்கள் உணர்வையும், அறிவையும் நீங்கள் கொடுங்கள் நான் என் மகனைதருகிறேன். வரலாற்று ஆசிரியருக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. தொடர்ந்தார்பேரறிவாளன்.. என்னிடம் பணம் இருக்கு... எவ்வளவு வேணுமென்றாலும் தன்குரலை சற்று தாழ்த்தி பேசினார்... நான் சொல்லவரது... என்னன்னா.... தோட்டாவோ..... துப்பாக்கியோ...அத நான் பாத்துகிறேன்....அழகாகமுடித்தார்...பெயருக்கேற்ற சாயலில். ஒரு பெரிய சிரிப்புடன் தாமரைக்கண்ணன்தொடர்ந்தார்... என்னடா குட்டிப்பையா.. நீ ஈக்கிமதிரி இருக்க ஒங்க அப்பாதுப்பாக்கி.. தோட்டான்னு பேசுறாரு. கத்தி செய்யாததை புத்தி செய்யும். அதற்காககத்தி எடுத்த நம் முன்னவர்களை நான் பலிக்கவில்லை. அந்த நாட்டுக்கு, அந்தநேரத்தில் அது சரியாக இருந்தது.. நாம் புத்தியில் ஆரம்பிப்போம்... காலமும், களமும் முடியு செய்யட்டும் எதை பயன்படுத்தவேண்டும் என்பதை. அன்றுவெற்றிமாறனுக்கு முதல் பாடம் கற்றுத்தரப்பட்டது "பிரபாகரனின் வாழ்க்கைவரலாறு". அவன் அங்கேயே ஒரு மாணவர் விடுதியில் தங்கினான் என்பதைவிடஅன்று முதல் தாரைக்கண்ணன் வீட்டிலேயே பெரும்பாலும் கழித்தான்.
வெற்றிமாறன் தான் சார்ந்திருந்த அரசியல் கட்சி தலைவர் தில்லியிலிருந்துகூப்பிட்டார், நம்ம கட்சிதான் மேலயும், கீழயும்... நீ எதுக்குப்பா இந்தமாதிரிபேசிக்கிட்டு திரியிற... எதிர்க்கட்சிக்காரன் ஏதாவது பேசித்தொழய போரானப்பா... டில்லிக்கு வேற தேர்தல் வருது... அப்பறம் வடக்க ஒரு பயலும் ஓட்டுபோடமாட்டங்க... அப்பறம் நீ சென்னையில இருந்து கட்டபஞ்சாயத்து கூட பண்ணமுடியாது... சரி சரி நான் பாத்துகிறேன்..ஒரு பயலும் ஒன்னும் பேசல.. அதஅப்பிடியே விட்டுரு. மாறனும் சரி என்றோ மாட்டேன் என்று பதில்சொல்லவில்லை. இன்னும் சரியாக இருபது நாட்கள் எஞ்சிவுள்ளன.
மாறன் அனைத்து மட்ட தலைவர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் எனஅனைவரையும் அவசரமாக கூப்பிட்டார். அடுத்த நான்கே மணிநேரத்தில் கூட்டம்தொடங்கியது. வணக்கம். இன்னும் இருபது நாட்களே உள்ளன. நாம் எந்தஇலக்கில் இருக்கிறோம். கட்டுபாடுகள் எந்த அளவில் இருக்கிறது என்பதில்தொடங்கி.. சிக்கல்கள்... தீர்வுகள் என ஆலோசனை செய்யப்பட்டது. இங்கேஇன்னும் இரண்டு சிங்கங்களை அறிமுகபடுத்தவேண்டும். ஒருவர் திலீபன். மூத்த கட்டளை தலைவர், வயது வெற்றிமாரனைவிட இரண்டு ஆண்டுகள்மூத்தவர். இரும்பு மனிதர். செயலில் புலி. அரசு அலுவலல்கள் எதிலேயும்இல்லாதவர், ஆனால் கட்சியின் ஆணிவேர். அடுத்து கக்கன்கட்டளைத்தலைவன். முப்பத்தஞ்சு வயது இளம் கன்று. பயமறியாது. கோவக்காரன் என்று பெயரெடுத்தவன். கட்சியின் செல்லப்பிள்ளை. இவனுக்கும்அமைச்சரவையிலோ, அரசு அலுவல்களிலோ எந்த பொறுப்பும் கிடையாது.
இப்பொழுது இருக்கும் நிலவரத்தை பார்க்கும்பொழுது டில்லிக்காரர்கள் மிகவும்சாதரணமாக எடுத்துகொண்டதுபோல் தான் தெரிகிறது, எனவே தி.பி 2139 ம்ஆண்டு, சுறவம் மாதத்தின் கடைசி நாள், நாம் கண்டிப்பாக தனித்தமிழக அறிவிப்புசெய்துவிடும் கட்டயத்திற்கு தள்ளப்படுவோம் என்று தான் தோன்றுகிறது. எனவே என் புலிநிகர் வேங்கைகளே... ஆயத்தப்படுத்திகொள்வோம். நமக்குஎப்படியும் ஈராயிரம் டாங்கிகள், ஆயிரம் மிதுரக போர்விமானங்கள், இருபதாயிரம் துப்ப்பக்கிகாரகள் என தேவைப்படும் என்று நினைக்கிறேன். மேலும் தெளிவான விவரங்களை தம்பி கக்கன் தேவையான ஆட்களுக்கு ஆயத்தபணிகளை முடுக்கிவிடுவான் என்று நான் அறிவிக்கிறேன். இப்போதைக்கு இந்தவிவரங்கள் போதுமானது. இங்கே நடக்கும் விவரங்கள் மற்றும் பேச்சுக்கள்ரகசியம் காக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
தொடர்வோம்.....................
அன்புடன்,
மாசிலான்
தமிழன் என்பதற்கு சான்று குலம் மட்டுமே
Tuesday, February 15, 2011
Monday, February 14, 2011
அடையாளம் வாரம்-1
கி.பி. 2012 மற்றும் சில பின்நோக்கிய வரலாற்று படங்களை பார்த்துவிட்டு நாமும் கி.பி.2100 ல் தமிழகம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்ததில் சிறு கரு பிறந்தது. வானம் தொட்டு பார்ப்பதும், சிகரம் எட்டி தொடுவதும், கற்பனை தாண்டி சிந்திப்பதும் புதிய கண்டுபிடிப்பதின் காரணியாகவும், புதிய நாடுகள் பிறப்பதின் விதையாகவும் இருந்திருக்கமுடியும் என்பதில் ஐயம் ஒன்றும் இருக்கமுடியாது. இக்கதை விதையாகவோ, வேராகவோ இல்லாவிட்டாலும் கூட மண்ணின் விளிம்பில் ஒட்டியிருக்கும் உரத்தின் ஒரு துளியாக இருந்தாலே போதும் என நினைக்கிறேன். கதையின் களமாக கீழ் ஆசிய நாடுகள் வரை தலைநகரமாக இருந்த தஞ்சை மாநகரமும், கதை கருவாக தமிழகமும், தமிழ் மக்களும். கதையையும், நாட்டினையும் ஆட்சி செய்பவனாக வெற்றிமாறன்.
மஞ்சளும் சிவப்பும் கலந்த கதிரவன் எட்டிப்பார்க்கும் கதிரின்.... ஒரே ஒரு ஒளிக்கோடு கண்ணாடியை ஒடித்து நீட்டியது போல்...... ஓடிவந்து மலரின் முணையில் உட்கார்திருக்கும் பணிதிவலையின் மீது பட்டதில்...... மீள்கதிரை கண்டவுடன் கனாகண்ட குட்டிபூனை பதறி எழுவதைபோல் விழித்தான், அந்த மூன்றேமுக்கால் வயதுச்சிறுவன்....திடு திடென்று ஓடியவன் பட்டென விழுந்த "விடுதலை" செய்தித்தாளை வெகுண்டென பற்றி... தாத்தா.. உங்கள் செய்தித்தாள் என்று நீட்டினான். ஓடிய ஆறு சட்டென நின்றதுபோல்... நெஞ்சை விரித்து வாங்கினார் தொண்ணூறு வயதையும், நீண்ட கணவுகளையும் சுமந்துகொண்டிருந்த தாமரைக்கண்ணன்.
தி.பி.2139 ம் ஆண்டு சுறவம் மாதம் அறிவன் தினம் தலைப்பு செய்தியே சுட்டது.. தத்தா தேநீர் சுடுது... சீக்கிரம் வாங்குறீங்களா. அவருக்கு தேநீரைவிட செய்தி சுட்டது. ஒருமுறை தன்னை கிள்ளிபார்த்துகொண்டார். இவ்வளவு நாட்களா.. ஆண்டுகளா.. இருந்தாலும் சரி... என்று சகிக்காமல் சலித்துகொண்டார். தாத்தா... அம்மா கூபிட்றாங்க... குளிச்சிட்டு வருவீங்களாம். அப்பா சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க... இன்னிக்கி உங்க பொறந்தநாள். வெள்ளைவேட்டியும், வெள்ளை நரையுடனும் கொஞ்சம் கூட கூனாமல் குறுகாமல் 91 வயதை தொட்டிருந்த கிழட்டு வாத்தியார். என்னத்தையோ இறக்கி வைத்ததைப்போல் இளகினார்.. தான் வாழ்த்த தருணங்கள் போதுமென நினைக்கதூண்டியது.. ஓட்டபோட்டியில் தன் குச்சியை அடுத்தாமாவனுக்கு கொடுத்துவிட்டு இளைப்பாறுவானே.. எட்டிப்பார்த்த குட்டிவாழையை பார்த்தவுடன் விழிமிளிருமே கிழிந்த வாழைஇலை... அதிமிஞ்சிய ஒரு உணர்வு. ஆம்.. இனி மாணவன் பார்த்துக்கொள்வான் என்று சொல்லிக்கொண்டே சுடாத தேநீரை மருமகளை திட்டாமல் குடித்தார். குனவாளா.. கைத்தடியும், சாய்நாற்காலியும் வாங்கியாட.. வயசாகுதுள்ள.....
தஞ்சை மாநகரம்.
நந்தியார் காதில் ஒரு குட்டிச்சிறுவன் எதோ பேசிக்கொண்டிருந்தான். அவன் எந்த தாளில் மறுதேர்வு எழுதனுமோ... யாருக்கு தெரியும். கட்டி 5 ஆண்டுகள் ஆனாலும் அப்படியே பூரித்திருக்கும் "தஞ்சை ஆட்சி நகரம்" எப்பொழுதும் சாலை பரபரப்பாக இருக்கும் காலை எட்டுமணி.... சரேலென்று அழுத்தி இருக்கிபிடித்து சட்டென்று நின்றது அந்த மகிழுந்து.... 30 ம் தலைமுறை தொழிநுட்பம், 3 மணித்துளி நேரத்தில் 500 மைல் வேகமெடுக்கும், 16 .5 லிட்டர் 1235 குதிரைத்திறன் பலம் வாய்ந்த வாகனம், வள்ளுவன் வாகன நிறுவனம் தயாரிப்பின் விலைஉயர்ந்த வாகனம் இதுவே. நின்றதன் காரணம்..ஒரு செய்தியாளன் குறுக்கே விழுந்து நின்றான்..... அய்யா வணக்கம்..என்னப்பா இப்பிடியா வர்றது...அய்யா நான் தினசரி நாளேடு...உங்கள் பேட்டி உண்மையா வதந்தியா.. பதில் சொல்லாமல் அந்த வாகனம் விரைந்தது சட்டசபையை நோக்கி.....
வெற்றிமாறன். தமிழகத்தின் முதல்வர். வயது 43 பிறந்தது வாடிப்பட்டி என்னும் சிறிய ஊர். மதுரையிலிருந்து வத்தலக்குண்டு போய், அங்கிருந்து 5 மைல் தூரம். அப்பா நெடுஞ்செழியன், நெசவாளர் குடும்பம், சாலியர் குலம், அம்மா சாந்தி. இந்த நூற்றாண்டில் இன்னும் கைத்தறி வைத்துகொண்டு ஏதாவது ஒன்றை நூற்றுகொண்டிருப்பது நெடுஞ்செழியன் மட்டும்தான். அதற்காக நெசவு செய்தாதான் பொழப்பு என்பதில்லை. அவன் வளர்க்கபட்டதே ஆள்வதற்க்காகத்தான் என்றால் மிகையாகது. அப்பா நெடுஞ்செழியனுக்கு சொந்தமாக ஒரு பெரிய நூற்பு ஆலை பழனிக்கு அருகே இருக்கிறது. வெற்றிமாறன் படித்தது 20 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த மதுரை தியாகராயர் கல்லூரி. கற்றது இயந்திரவியல். வெற்றிமாறனின் அமைச்சரவையை உலகின் தலைசிறந்த கட்டமைப்புடைய ஆட்சிமுறை வடிவமைப்பு என்று சொல்லலாம். தமிழகத்தின் சிற்றூரினில் கடைசி வீட்டில் இருக்கும் நாய் குட்டியின் விவரம் வரை இந்த கட்டிடம் சொல்லும். இரண்டு துணை முதல்வர்கள். முத்துக்குமார் உள்த்துறை, மதிவாணன் சட்டம். பத்து மூத்த அமைச்சர்கள் முக்கிய நிர்வாகங்களை பார்பதற்க்கென்று. இருபது அமைச்சர்கள். இருபது துணை அமைச்சர்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் இ.ஆ.ப. நிர்வாக அலுவலர் மற்றும் ஒரு துறை சார்ந்த நிர்வாக அலுவலர். அவ்வளவு பெரிய நிர்வாக அலுவலக கட்டிடத்தை இந்த தமிழகம் பார்த்தது இல்லை, தஞ்சை பெரிய கோவிலைவிட உயரமாக இருந்தால் நன்றாக இருக்காது என்பதற்காக பரப்பளவை கூட்டி கட்டிய கட்டிடம். எந்த ஒரு தாக்குதலையும் தாக்குபிடிக்கும் கட்டிடம். உலகின் மிகசரியாக பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஒரே நேரத்தில் ஒரு மில்லியன் மக்கள் நடமாடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடம்.
இன்று மிக முக்கியமான நாள். சுமார் முன்னுற்று ஐம்பது ஆண்டுகளாக தமிழன் அல்லாத ஆட்சியை மட்டுமே பார்த்து பழகிய தமிழகம் முதன்முறையாக வெற்றிமாறனை பார்த்திருக்கிறது. அந்த காலத்தில் யாரோ காமராசர் என்பவர் இருந்தாராம் என்பது மட்டுமே இன்றைய தமிழகம் படித்த வரலாறு. முதல் ஐந்து ஆண்டு காலம் பதவிகாலம் முடிந்து மீண்டும் அரியணை ஏறி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. இன்னும் இரண்டு நிமிடங்களில் துணை முதல்வர்களுடன் கலந்தாலோசனை, பின் மூத்த அமைச்சர்கள் அதனை தொடர்ந்து அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், கடைசியாக சட்டமன்ற உறுபினர்கள். மூத்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர்கள் தவிர மற்றவர்களிடம் தொலைதூர ஒளி அலைபேசி கலந்துரையாடல் மட்டுமே.
செய்தியாளர்கள் கூட்டம்:
நன்றாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுதான். துளியும் அவசரம் இன்றி எடுக்கப்பட்ட முடிவு. அனைத்து தரப்பு உறுப்பினர்களிடையே கலந்து தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான். இன்னும் சொல்லப்போனால் இந்தமுடிவுக்கு நாங்களும், என் இன மக்களும் தள்ளப்பட்டதுதான் உண்மையிலும் உண்மை. இதற்க்கு சான்று நானும், என்னை போன்ற முந்தைய முதல்வர்கலும், வரலாறும், புவியியல் அமைப்பும், தவறான சமூக பார்வையும் தான் காரணம். நாங்கள் அவசரகதியாக முடிவு எடுக்கவில்லை என்பதற்கு, ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வஞ்சிக்கப்பட்டதும், ஒதுக்கப்பட்டதும் தான் சாட்சி. காலமே மிகபெரிய வரலாறு. இங்கே, உங்கள் முன்வைக்கும் தீராத உயிர் ஆதார சிக்கல்களை, நீங்களும் தில்லியும் அருகருகே இருக்கும் மாநிலங்களும் எவ்வாறு கையாண்டன, எப்படி நடந்துகொண்டன என்பனவற்றை சொல்லி என் நேரத்தையும், உங்கள் மேலான நேரத்தையும் செலவழிக்க விரும்பவில்லை, மேலும் என் இன மக்களின் பொறுமையை சோதிக்கவிரும்பவில்லை.
ஒன்று: தமிழக நீராதாரம் சிக்கல். காவிரி, பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் நீர் சிக்கல்
இரண்டு: கனிம ஆதாரங்கள் - பங்கிடபடுவதும், பின்பெறுவனவும் (நிலக்கரி, சுண்ணாம்புக்கள், கிரானைட் கற்கள், தங்கம், பெட்ரோலிய வகை பொருட்கள்)
மூன்று: கைவிட்டுப்போன கச்சதீவு மற்றும் மீன்பிடிக்கும் உரிமைகள்
நான்கு: நடுவணரசுக்கு சரியாக செலுத்திய வரிகள் (சரியாக மக்கள் விகிதாசாரப்படி பங்கிடப்படுகிறதா?)
ஐந்து: தொப்புள்கொடி உறவான தமிழீழ மக்களின்பால் எடுக்கும் நடுவணரசின் கொள்கைகள்
ஆறு: சொல்லிக்கொண்டே போகலாம்... விடியாது.
எனவே, கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகாலமாக இந்திய கூட்டாசியில் எங்களையும், எங்கள் ரத்தத்தையும் கலந்து ஒருங்கிணைத்து, எங்கள் இனத்தின் பெயரையே இந்தியர்கள் என்று மாற்றிக்கொண்டு வாழ்ந்த நாங்கள் ஏன் தனியாக பிரிந்துகொள்ளும் உரிமையை நடுவணரசு கொடுக்ககூடாது என கோருகிறோம். இது வெறும் அறிக்கை மட்டும் அல்ல. இன்று முதல் நாங்கள் ஒரு மாதம் மௌனித்து மனிதர்களாக காத்திருக்கிறோம். அதற்குமுன் நடுவணரசு தங்களின் மேலான முடிவையும், அதற்க்குண்டான செயற்திட்டத்தையும், ஆக்கபூர்வமான அணுசரனையும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். இக்கடிதம் இன்னும் சில வினாடிகளில் நடுவரசிற்கு அலுவலகரீதியாக கிடைக்கும், இது வெற்றிமாறனின், தமிழக மக்களின் ஆகமுதற்பிரதிநிதியாக நின்று நான் விடுக்கும் கோரிக்கை.
எந்த ஒரு தகவலுமின்றி மாறாக ஆட்சியை கையகபடுத்தும் நோக்கில் அல்லது மக்களை துண்புருத்தும் நோக்கில் நடுவணரசு செயல்படும் என்கிற பட்சத்தில்.........
தொடர்வோம்.................
அன்புடன்,
மாசிலான்
தமிழன் என்பதற்கு அவன் குலமே அடையாளம்

ஒரு ரூபாய்க்கு அரிசி..அழியும் உழைக்கும் குடிகள்..நாளை அடிமைகளாகும் நம் குடிகள்...
உழைப்பே உயர்வு என்பதே தமிழனின் தாரக மந்திரமாக இருந்தது, இன்று உழைப்பை மறந்து இலவச அரிசிக்கும், இலவச வெட்டி சேலைகளுக்கும் பின்னால் திரியும் வேதனை தமிழகம் முழுவதும் பரவிவருகிறது. இது ஒரு வியாபார அரசியில் தந்திரம் என்று மட்டும் எளிதாக எடுத்துகொள்ளமுடியாது. ஏனென்றால், காமராஜர் நாடார் முதலில் இலவச மதிய உணவு திட்டம் கொண்டுவந்ததில் ஒரு சமூக பின்னணி இருந்தது, சாப்பாட்டுக்கே வழி இல்லாத காலத்தில், ஒரு கிலோ அரிசி 1970 களில் 16-18 ரூபாயாக இருந்தபோது சாதாரண பொதுமக்களால் அரிசி வாங்கமுடியாத நிலைகண்டு மணம் வருந்தி, மாணவ கண்மணிகளுக்கு சாப்பாடு போட்டாவது படிக்கவைக்கவேண்டும் என்ற வீராப்பில் பிறந்தது மதிய உணவுத்திட்டம்.
ஆனால் அதன் பின் வந்த தமிழரல்லாத முதல்வர்கள் அரசிலாக்கி இலவச.................... (நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் நிரப்பிக்கொள்ளலாம்) என்ற நிலை போய், உழைக்கும் இனத்தை முடக்கிவிட்டது இன்றைய இலவச அரிசி திட்டம். விவசாய தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், உற்பத்தி தொழிலாளர்கள் என ஒரு தொழிற்க்குடும்பமே வேலை செய்வதை நிறுத்திவிட்டது. காரணம், நான் ஏன் வேலை செய்யவேண்டும் 25 ருபாய் கொடுத்தால் 20 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு சாதாரண குடும்பத்திற்கு பத்து நாட்களுக்கு போதுமானது. இதனால் அழிந்தது விவசாயம், உற்பத்தி, கட்டுமான வளர்ச்சி மட்டுமல்லாமல் நம் இனமும் சேர்ந்துதான். ஒரு சின்ன எ.கா. திருப்பூரில் நண்பரின் ஆயத்த ஆடை குருந்த்தொழில் நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் வேலை செய்பவர்கள் நேபாளிகள், பீகாரிகள் மற்றும் வடவமார்கள்.... அவர்கள் என்ன தமிழர்களா என்ன வந்தோமா வேலை செய்தோமா பணத்தை பார்த்துவிட்டு வீட்டை நோக்கி ஓடிவிட.. இங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் இங்கேயே இருந்து தங்கி, தானும் ஒரு குருந்த்தொழில் தொடங்கி, பெருந்தொகை பார்த்திட்டதோடு நின்றுவிடாமல் தேர்தல், அரசியல், தலைவர் என்று ஆட்சியை கைகொள்ள ஆரம்பித்துவிடுவான். இல்லையில்லை இது மிகைபடுத்தப்பட்ட எண்ணம் என வழக்கம்போல் வந்தேறிகளும், போர்வைத்தமிழர்களும் பட்டும்படாமலும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இது மிகைபடுத்தப்பட்ட எண்ணம் இல்லை என ஆணித்தரமாக நாம் சொல்லமுடியும், இல்லை இல்லை தமிழனின் 300 கால அடிமைவாழ்கை காண்பிக்கும் (திரும்பிபார்க்கவேண்டும் என நினைத்தால்).

இதில், இன்னொரு கூட்டம்.. மேல்சாதிக்காரர்களுக்கு நாங்கள் கூலிவேலை செய்தே இத்தனை நாளும் அடிமைகளைப்போல் இருந்துவிட்டோம், இப்பொழுதாவது எங்களை சும்மா இருக்கவிடுங்கள் என்று தூண்டிவிட்டு வேடிக்கைகாட்டும் வேற்று இன கீழ்சாதி போராட்டவாதிகள். இந்த சிக்கலுக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும் இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். இங்கே ஒரு இனம் சிதைக்கப்படுகிறது... சோம்பேறி ஆடுகளாக மாற்றபடுகிறார்கள்., பெண்கள் இருட்டறையிலும், அடுப்படியிலும் குத்தவைக்கப்பட்டு இருந்தவர்கள், நவநாகரீக மங்கைகளாக படித்துவிட்டு, திருமணமானவுடன் தொல்லைகாட்சிபெட்டியின் முன் குடும்பத்தையும், பிள்ளைகளையும், தான் என்ன செய்கிறோம் என்பதையும் மறக்கும் உதவாக்கரைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எத்தைனையோ பெண்கள் தையல் தைத்தும், ஆடைகளுக்கு படமிட்டும் (எம்ப்ராடரி என்ற சொல்லுக்கு யாரேனும் அழகிய தமிழ் வார்த்தை கூறி உதவவும்), தோசை மாவு ஆட்டிகொடுத்தும் பிள்ளைகளை படிக்கவைத்த மனைவிமார்கள் உண்டு, இன்றைய பெண்களில் பகுதிநேர வேலைசெய்பவர்களை மிக அரிதாக மட்டுமே காணமுடிகிறது.
இங்கே என் கருத்துகளை திறுபு செய்ய வாய்ப்புகள் நிறைய இருப்பதால் சொல்கிறேன், பெண்கள் ஏதாவது பகுதிநேர வேலை செய்ததுதான் ஆகவேண்டும் என்பது என் வாதம் இல்லை, அதேபோல் மக்கள் அனைவரும் கூலிவேலை செய்துதான் ஆகவேண்டும் என்பதும் என் வாதம் இல்லை. ஏனென்றால் கூலி வேலை செய்வது அனைவருமே கீழ்சாதியினர் என்பது போலவும், அவர்களை அடிமைபடுத்தவேண்டும் என்பது சாதி தமிழர்களின் எண்ணம் என்பதுபோல் ஒரு மாயையை ஒரு கூட்டம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. ஒரு வாலிபன் பத்தாவது மட்டுமே படிக்கமுடிந்தது, அதற்குமேல் தேறவில்லை, சரிவர படிப்புவரவில்லை என்றால் ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நம் வழக்கம். ஆனால் இன்றைய இளையர், கையில் அழுக்குபடாத வேலை மட்டுமே நாகரீகமான வேலை என்றும் அழுக்குபடும் வேலை அனைத்தும் கூலி வேலை என்ற கீழ்நோக்கிய எண்ணங்களுக்கு இழுத்துசெல்லப்பட்டுவிட்டார்கள். இது அவர்களின் தவறு இல்லை. அவர்களுக்கு எந்த திசையை காண்பித்தோம். எந்திரன் படம், கிரிகெட்டு விளையாட்டு, பெண்களுக்கு மெட்டி ஒலி நாடகம். நம் இன அடையாளங்கள் எல்லாம் கேவலம் என திசை மாற்றப்பட்டோம். கூத்து, கரகாட்டம், கபடி, பல்லாங்குழி, வெள்ளை வேட்டி, தாவணி இதில் எதாவது ஒன்றை நம் இளையோரிடம் கேட்டால், நம்மை உற்றுநோக்கும். அதற்க்கு காரணம், இவன் நல்லாத்தானே இருந்தான்...என்ன ஆச்சு இவனுக்கு....என்கிற ஒரு கேவலமான பார்வை. ஆனால், இலவசத்தின் பின் ஓடுவதை கேவலமாக நினைக்கவில்லையே.
நாம் கால்கள் இருந்தும் நொண்டிகளாக மாற்றப்படுவோம், கையிருந்தும் ஊனனாக ஆக்கபடுவோம், எல்லாம் இருந்தும் பிட்சைகாரர்களாக இருக்கப்போகிறோம்...... நன்றாக நம் கண் முன் தென்படுகிறது. அதன்பின், திராவிட கோமாளிகள் எல்லாம் நம்மை நிரந்தர அடிமைகளாக ஆக்கிவிடும். போதும் தூக்கம்.. விழித்திடு..உழைத்திடு தமிழா. உழைப்பில் கேவலமென்று ஒன்று இல்லை. தமிழன் உழைப்பில் உயர்ந்தவன்.
அன்புடன்,
மாசிலான்
கடவுள் இல்லை என்று சொல்லி என் சுவடுகளை குப்பைதொட்டியில் போட்டவர்கள்......
திராவிட..... பார்பனிய எதிர்ப்பு... கடவுள் இல்லை... கூற்றுகளில் எப்பொழுதும் பாதிக்கபடுவது தமிழர்கள் மட்டுமே. சுமார் 60 ஆண்டுகளாக, ஒரே ஒரு மேல்நோக்கு நாமத்தை கருப்பு சட்டை மாட்ட வைத்திருப்பீர்களா என்றால் இல்லை தான். மாறிய அனைவரும் என் இன தமிழன். உங்கள் பின்னாலே வந்து வந்து திராவிடனாக மாற்றினீர்கள், தமிழன் என்று சொன்னால் சிறை. ஆரியர்களை வந்தேறி என்றால் உங்கள் திராவிட இயக்கத் தலைவர்கள் அத்தனை பெரும் தமிழர் அல்லாதவர்கள், வந்தேறி கூட்டம்.. கன்னடன், மலையாளி, தெலுங்கன் அல்லாத வேறு யாரும் இல்லை. நீ இந்து, ஆரியன் உன் எதிரி என்று முறையிட்ட உங்களுக்கு நீ தமிழன் என்றோ, நான் ஆந்திராவில் இருந்து பிழைக்க வந்தவன், என் இனம் நாயக்கர், என்று ஏன் சொல்லிக்கொள்ளவில்லை. முடியாது, உங்களுக்கு நாம் எல்லோரும் என்று சொல்ல ஒரு போர்வை வேணும், அதற்காக நீங்கள் எடுத்துகொண்டதுதான் ""திராவிடன்"" என்ற இல்லாத இனம்.
அன்புடன்,
மாசிலான்
தமிழன் முதலில் காவல் தெய்வங்களையும், பின்னாளில் சைவத்தையும் கடைபிடித்தவர்கள் என சுமார் 2000 ஆண்டு கால சுவடுகள் சொல்கிறது. அது என் நண்பிக்கை சார்ந்த விஷயம், இங்கே கடவுள் இல்லை என்று சொல்லவும், அதை அவமதிக்கவும் ஒரு கூட்டம், இதுவரை இருந்த எந்த ஒரு திராவிடக்கட்சி தலைவனும் தமிழன் என்றோ தமிழனின் அடையாளங்களை பற்றியோ துளி அக்கறை கூட இருந்ததில்லை.. கூட்டங்களில் கருப்பசாமி கும்பிடுவனையும், அய்யனாரை கும்பிடுவனையும் நக்கல் நையாண்டி செய்ய தைரியம் இருந்த இவர்களுக்கு முஸ்லிமை பற்றி பேசுவதற்கு கூட பயந்த கோழைகள், பெண்கள் மசூதிக்குள் நுழைய ஒரே ஒரு போராட்டம் கண்டீர்களா... யாரை பற்றியும் பேசுவதற்கு தகுதி இல்லாத கூட்டம்.
2000 ஆண்டு கால எங்கள் சமூகத்தில் , எங்கேயும் கீழ் சாதிக்காரர்கள் என்றும் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்ககூடாது என்றோ ஒரு எழுத்தும் இல்லை. முதலில் வைணவர்கள் இந்த கூத்தை ஆரம்பித்தவர்கள், யார் வைணவர்கள் என்று உற்று நோக்கினால்... பெரியாருக்கு முன் வந்த வந்தேறிகள்.. 11 ம் நூற்றாண்டிற்கு பின் வந்தவர்கள், ராஜராஜசோழனுக்கு பின் வந்த கோடரிகள். இவர்களின் ஈன பிறப்பு தமிழ் மண்ணுக்கு சொந்தமில்லை.
அடுத்தவனை வந்தேறி என கூறுவதற்கு முன் தாங்கள் யாரென்று பார்க்கவும், அயோத்தி, ராமர் என்று பேசி தமிழனை பிரிக்க முயல வேண்டாம், அதுதானே வேண்டும், ராமர் கூட்டம் சொல்வது சரிஎன்று சிலரையும், இல்லை என்று சிலரையும் பிரிக்கணும். இங்கே குட்டை குழம்பிகிடக்கையில் லாப மீன்களை அள்ளிக்கொள்ளவேண்டும், ஓட்டுகளை வாரவேண்டும்.
அய்யனாரும், கருப்பசாமியும், சைவ சித்தாந்தமும் என் தமிழின் அடையாளங்கள். சுவடுகள். இதில் கடவுள் இல்லை என்று சொல்லி என் சுவடுகளை குப்பைதொட்டியில் போட்டவர்கள் நீங்கள். கடவுளை பாடியதற்காக மாணிக்கவாசகரை கொன்றுவிடலாமா, கொன்ற கூட்டம்தானே இவர்கள். பெரியபுராணம், திருவாசகத்தை விட உங்கள் கருத்துகளுக்கு செவிமடுப்போமா.
நாங்கள் தமிழர்கள், இறை நன்பிக்கை கொண்டவர்கள். ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்பவர்கள். வள்ளுவன் இறைவனை நம்பியவன், தலைவர் பிரபாகரனும் கடவுளை நம்புகிறவர் அதனால் உங்கள் போதனைகளை மூட்டைபோட்டுகொண்டு இல்லாத திராவிட நாட்டிற்கோ அல்லது இருக்கின்ற ஆந்திராவிற்க்கோ கிளம்புங்கள். எங்கள் வாழ்க்கைமுறையில் இருக்கும் குறைபாடுகளை களைந்துகொள்ளும் பக்குவம் எங்களுக்கு நிறையவே இருக்கிறது. அதனால், சூத்திரன், அய்யன், பூணூல் என்று சொல்லிக்கொண்டு வயிறு வளர்க்க வேறிடம் பார்த்துகொள்ளுங்கள்
மாசிலான்
Wednesday, October 28, 2009
மன்னுமோகன் சிங்கு: 23 ம் புலிகேசி புலிகேசி....
மன்னுமோகன் சிங்கு: 23 ம் புலிகேசி புலிகேசி
அந்தோணி: மங்குனி அமைச்சர்
வல்லவராயன்: Wen Jiabao Chineesh Premier (இங்கே சீனன் என எடுத்துக்கொள்வோம்)
இடம்: அருணாச்சலபிரதேசம்
காவலாளி: ப. சிதம்பரம்
ப. சி: அரசே.. அரசே.. சீனன் வந்துகொண்டிருக்கிறான்..
மண்ணு: ச்.... இப்போ ஒன்னும் பிசினஸ் இல்லைன்னு சொல்லப்பா.
கடன்காரன். என்ன அவசரம். அவங்க ஊர் காரெல்லாம் கொஞ்சநாள் கழிச்சு உள்ளூருக்குள்ள விடுரோம்முனு சொல்லு. அப்பறம் டாட்டா சண்டைக்கு வருவான்.
ப.சி: அரசே... (வியப்புடன்....)
மண்ணு: என்ன...........(கோபத்துடன்)
ப.சி.: சீனன் படையெடுத்து வந்துள்ளான். வியாபாரத்திற்கு அல்ல.
மண்ணு: யோவ்.. என்னையா பண்ணீங்க... இந்த பேப்பர்காரங்க வேற சும்மா இல்லாம... அவிங்கள வெருப்பெத்துறது மாதிரியே எழுதுறாங்க...யோவ் மங்குனி... இப்ப என்னையா செய்யுறது....
அந்தோனி: அப்புறம் என்ன அரசே... சும்மா இருக்கணும். எதோ பாகிஸ்தான்காரன் நீங்க மெரட்டுறது, உருட்டுரதுக்கெல்லாம் பயந்துகிட்டிருந்தான். செவப்புகொடிக்காரன் அப்படியா.. சும்மா இல்லாம சோனியா பொம்பள சொல்றத கேட்டுகிட்டு புலிகளை கொன்னுபூட்டிங்க. ராஜபட்சே சும்மாவே ஆடுவான். இப்ப புலிவேற இல்லை. அங்க ஒக்காந்துக்கிட்டுதான் நம்பல ஒதைக்கப்போறான்.
மண்ணு: யோவ் நானே பயந்துகிட்டு இருக்கேன்... நீவேற புலி கிலின்னுக்கிட்டு.. இப்ப என்னையா பண்ணுறது
அந்தோனி: ம்க்கும்... அரசே ஒரு யோசனை
மண்ணு: சொல்லுயா....
அந்தோனி: பேசாமே யாருக்கும் தெரியாமல் பீஜிங் போய் அந்தாளு காலுல விழுந்தரலாம்
மண்ணு: அதுவும் முடியாதுய்யா... பாகிஸ்தான்காரன் அங்க
போய் குத்தவச்சுக்கிட்டு இருக்கான்யா
அந்தோனி: குத்தவச்சுக்கிட்டு இல்லை அரசே.. பத்தவச்சுக்கிட்டுனு சொல்லுங்க..
மண்ணு: இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை. நல்லா எதுகை மோனையோடு பேசு.
அந்தோனி: அரசே.... பேசாம அருனச்சலபிரதேசத்தை அவன்னுகே குடுத்தரலாம். நமக்கென்ன இது புதுசா.. கச்சதீவை குடுத்துபுட்டு.. இலங்கை.. அரசியல்.. ராஜதந்திரமுன்னு கதவிடலையா..
மண்ணு: யோவ் அது சாம்பார்க்காரன் இடம்யா.. சோத்த தின்னுபுட்டு சொல்றதை கேட்டுக்கிட்டு.. பேசாம ரஜினி சார் படம்பாத்துகிட்டு இருப்பான். இது அப்படியா போறவன் வரவனெல்லாம் கேள்வி கேட்பான்யா... மொத இந்த அத்துவானிக்கு பதில்சொல்லமுடியாது.. பெரிய லார்டு மாதிரி பேசுவான். என்னமோ இந்தியான்னு ஒரே நாடா இருந்த மாதிரி.
அந்தோனி: அரசே.. ஒன்னு செய்வோம். புலிக்கு நாலு துப்பாக்கிய குடுத்து சண்ட போடசொல்வோம். ராஜபக்சே பீஜிங் போவான், அந்த கேப்ப்ல கடாவெட்டிரலாம்.
மண்ணு: என்னையா பேசுற. பிரபாவே இல்லையாம். யாருகிட்டபோய் துப்பாக்கி குடுப்ப.
அந்தோனி: இல்லை அரசே. இல்லை..... பிரபாவெல்லாம் இந்த மொட்ட சிங்களபசங்க போட்டுதள்ளமுடியாது. அந்தாளு உயிரோட இருக்காரு...... (ரகசியமாக....)
மண்ணு: யோவ். நீதான கொழும்பு போய் மரணசான்றிதல் வாங்கிவந்தாய். இப்ப என்னையா புழுவுற.
அந்தோனி: நீங்க நம்பமாட்டிங்க. எதுக்கும் அந்தப்பெரியவர் நெடுமாரன்கிட்ட கேளுங்க.
மண்ணு: சரி. அவருகிட்ட பேசிட்டு சொல்லு.
அந்தோனி: அரசே... (தலையை சொறிந்துகொண்டே) நான் பேசினேன்.. ஆனா நம்பமாட்டேன்கிறார். என்ன அரசே செய்யலாம்.....
மண்ணு: சரி விடு. நம்ப தளபதிகளை கூப்பிட்டு போருக்கு தயாராகச்சொல்.....
அந்தோனி: அதுல ஒரு சிக்கல்..... நம்ப முப்படைத்தளபதி.. அதான் அந்த அம்மா.... ஏதோ சுற்றுலா போயிருக்காம். கையெழுத்து வாங்கணும்...
மண்ணு: என்னையா நீங்க.... பண்ணுறீங்க. வடிவேலு பெயிண்ட் அடிக்க வேலை எடுத்த கதையால்ல இருக்கு. போர்யா... ஒங்கள கட்டிக்கிட்டு மாரடிச்ச பொழப்பால இருக்கு.
அந்தோனி: சற்றுமுன் கிடைத்த செய்தி. நம்ம போபர்ஸ் பீரங்கிப்படையை காணமாம்.
மண்ணு: யோவ். என்னையா சொல்ற... (அழுகிற குரலில்...) நான் என்னையா பாவம் பண்ணேன்..பீரங்கிப்படை காணாமப்போச்சா... அது என்ன ஆடா மாடா காணாமப்போக... இப்படி தொலச்சுப்போட்டு வந்து நின்னா என்னையா அர்த்தம்.
அந்தோனி: அரசே... சீனர்களின் படை இலங்கை வந்துவிட்டதாம். அங்கிருந்து வடமுனையில் போர்தொடுக்க வியுகம் அமைத்துள்ளார்கலாம்.
மண்ணு: என்னா.... இலங்கையிலிருந்தா....நான் அவிங்களுக்கு என்னென்னல்லாம் செய்தேன்.... துப்பாக்கி குடுத்து, வேட்டு கொடுத்து, விமானம் கொடுத்து..... அய்யயோ.... அம்மா....சாமி.... நான் என்ன பாவம் பண்ணினேனைய்யா..... எல்லாம் செஞ்சு அந்தப்பயலுக்கு எங்க சுடனும், எப்படி சுடனுமுன்னு கூட தெரியாது.... அதையும் சொல்லிக்குடுத்தேன்.... எல்லாம் சொல்லிக்குடுத்த எனக்கே அவன் நல்லா பாடம் சொல்லிகுடுத்துட்டண்டா.............நல்லா பாடம் சொல்லிகுடுத்துட்டண்டா............. இப்ப யாருக்கிட்ட போய் சொல்வேன்.. அமெரிக்காகிட்ட சொன்னா, அவன் கண்ட காகிதத்தில கையெழுத்து கேட்ப்பானே....
எங்கயோ ஒரு தமிழனின் ஒலி மண்ணுக்கு கேட்கிறது: ம்....மாட்டிகிட்டயா.... நல்லா மாட்டிக்கிட்டயா மன்னாரு.....
அன்புடன்,
இரா. த. ஜெயக்குமார்

தீபாவளி கூத்து
ஒருவழியாக இந்த தீபாவளி கூத்து முடிந்துவிட்டது. வாழ்த்துக்கள் அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
தைப்பொங்கல், கபடி, கரகாட்டம், வில்லுப்பாட்டு, வெள்ளைவேட்டி, குலதெய்வம் கோயில் - இவை எல்லாத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. தமிழனின் அடையாளங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதெல்லாவற்றையும் விட, இதெல்லாம் நாகரீகமற்ற செயல் அல்லது கௌவ்ரமல்லாத செயல். கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
தைப்பொங்கல்:
கரும்பு சுமந்து, வாசலில் கோலமிட்டு, தெருவில் பொங்கல் வைத்து, குலதெய்வத்திற்கு படைத்து... அட.. அதெல்லாம் யாருங்க இந்தக்காலத்துல செய்யுறா .. பேசாம பொங்கல் வச்சு தாரேன்.. சாப்பிட்டு டி.வில விஜயகாந்த் படம் போடுவாங்க பாருங்கன்றேன்.. வயசான காலத்துல.... இதுதான் நம் வீட்டில் நடக்குற எதார்த்தம்.
கபடி: ஏதாவது மொரட்டுத்தனமா வெளாண்டு.. கையக்கால ஒடச்சிக்கிடாத. ஏண்டா நம்ப பக்கத்துவீட்டு நாயக்கர் மகனெல்லாம் ஏதோ கிரிக்கெட்டுன்னு வேலையாடுராண்டா, நீ ஏன்டா கபடி கபடின்னு ஆடுற.
கரகாட்டம், வில்லுப்பாட்டு: டேய்.. மாரியம்மன் கோயில் திருழா வருது, ராத்திரில போய் கள்ளகுடிச்சுபுட்டு, கரகாட்டம் பாக்க போயிராதடா. அவிங்க என்னடா பேசிக்கிறாங்க அசிங்க அசிங்கமா, அரைப்பாவடை போட்டுக்கிட்டு ஆடுறதும், கொஞ்சம்கூட நாகரீகமா இல்லைடா. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. (அப்படின்னா பார்ல போய் பீரகுடிச்சிட்டு, கேபரே டான்ஸ் பாக்கலாமான்னு.. இந்த நாகரீகத்தை ஒத்துக்குவீங்களான்னு...மகன் மனசுக்குள்ளயே சொல்வது அந்த அம்மாவுக்கு கேக்குதோ என்னமோ..)
வெள்ளைவேட்டி: ஏங்க.. எங்கசொந்தக்காரங்கல்லாம் வராங்க.. ஒழுங்கா.. பேன்ட், சட்டை போட்டுக்கிட்டு வாங்க. வேட்டிகட்டிகிட்டு வரதா இருந்தா.. நீங்க வரவே வேண்டாம். அவருக்கு ஒடம்பு சரியில்லைனு நான் சாக்கு சொல்லிக்கிறேன்.
குலதெய்வம் கோயில்: இந்தவருசம் எப்படியாது சபரிமலைக்கு போய் நேந்துகிரனும். அப்பா... நம்ப கொலசாமி கோயில்.. அட அங்க போனா என் பங்காளிக கூட மல்லுகட்டிக்கிட்டுதானப்பா வரணும்.. அதேன் அந்தப்பக்கம் காலே வைக்கிறது இல்லை. (குறிப்பு: குலதெய்வ வழிபாடுகள் நம் தமிழர் கடைப்படிக்கும் முக்கிய வழக்கம், ஆனால் நாளைடைவில், அங்கே பூணூலும், கற்பக விநாயகர் சந்நிதியும், அய்யங்கார் (அய்யர் அல்ல, பார்ப்பான் அல்ல, நாமம் போட்ட (வினைத்தொகை)-நாமம் போட்ட, போட்டுகொண்டிருக்கிற, போடப்போகிற-எல்லாக்காலங்களிலும்) பூஜையும் நிறைய புகுந்துவிட்டன. இதில் சாதிப்பாகுபாடே கிடையாது. பார்ப்பனன் என்னை அமுக்கிவிட்டான் எனகுறைப்பட்டுக்கொள்ளும் பள்ளர், பறையர், நாடர், ஆசாரி, தேவர், அகமுடையார் என யாரும் விதிவிலக்கல்ல. எனென்றால் நமக்கு குலதெய்வ வழிபாடு ஒரு கௌவ்ர குறைச்சலாக போய்விட்டது.
சொல்வதெல்லாம் உண்மைதான், இல்லைஎன்று சொல்லவில்லை. நாம் காலங்காலமாக பழகிவிட்டோம் என்பதுதான் கடைசியில் கூறும் பதில்.
ஏற்றுக்கொள்கிறோம். ஏன் மாறக்கூடாது. தமிழ் அடையாளங்களை தேர்ந்தெடுத்து அளிக்கும் ஒரு கூட்டம் செய்கிற வேலைதான். இதை செய்வது பார்ப்பானை விட விசமான கூட்டம்தான் """போர்வைத்தமிழர்கள்"". நாங்களும் தமிழர்கள்தான் எனக்கூறிக்கொள்ளும் வந்தேறிகள். தமிழன் யார் என்பதற்கு தராசு சாதியாக மட்டுமே இருக்கமுடியும். ஆம். சாதித்தமிழன் மட்டுமே தமிழன்.
அன்புடன்,
இரா.த. ஜெயக்குமார்

Sunday, February 22, 2009
...........ஆனால் உங்களுக்கென்று ஒரு நாடு உண்டா?

சுவர்களுடன் பேசும் மனிதர்
- அ.முத்துலிங்கம்
கனடாவிற்கு வந்து ஏற்பட்ட பிரச்சினைகளுள் ஒன்று தலைமுடி வெட்டுவது. நான் வசித்த வீட்டிலிருந்து தலைமுடி திருத்துமிடம் நாலே நிமிட தூரத்தில் இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக மாதம் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் ஓர் இத்தாலியர், பெயர் ரோனி. அவரும் இரண்டு மூன்று உதவியாளர்களும் அங்கே வேலை செய்தார்கள்.
ரோனி நட்பானவர். அவருடைய முடி அலங்கோலமாக சிதறுண்டு போயிருக்கும். நான் அவருக்குச் சொல்வேன், ‘என்ன உங்களுடைய முடியே இப்படித் தாறுமாறாக இருக்கிறது. உங்கள் வாடிக்கைக்காரர்கள் இதைப் பார்த்து வராமல் போய்விடுவார்கள்.’ அவர் சொல்வார், ‘என்ன செய்வது. என்னைப் போல ஒரு நல்ல முடிதிருத்துபவர் கிடைத்தால் உடனே தலையைக் கொடுத்துவிடுவேன். இங்கே எல்லோருமே மோசம். அதுதான் முடி வெட்டுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.’
நானும் ரோனியைப் போல அவருடைய உதவியாளர்களிடம் தலையைத் தரமாட்டேன். வரிசையில் உட்கார்ந்திருக்கும் வாடிக்கைக்காரர்களுடன் என் முறைக்காகக் காத்திருப்பேன். ரோனியிலே எனக்குப் பிடித்தது அவசரமின்மை. நிதானமாக தொழில் சுத்தமாக வேலையை முடிப்பார். எப்படி வெட்டவேண்டும் என்று கேட்கமாட்டார். என்ன சைஸ் கிளிப் என்று கேட்கமாட்டார். பிடரியில் நேர் வெட்டா அல்லது குறைவெட்டா என்றெல்லாம் கேட்கமாட்டார். ஒவ்வொரு வாடிக்கைக்காரருக்கும் அவரிடம் குறிப்பு உண்டு. தையல்காரரிடம் இருப்பதுபோல, மருத்துவரிடம் இருப்பதுபோல. அதைப் பார்த்து தன் வேலையைச் செம்மையாக முடித்துவைப்பார்.
அவரிடம் எனக்குப் பிடிக்காத ஓர் அம்சமும் இருந்தது. ரோனி விளையாட்டுப் பிரியர். அவர் தலைமுடி வெட்டும் போது முதல் நாள் நடந்த ஐஸ் ஹொக்கி பற்றி அல்லது கூடைப்பந்து பற்றி அல்லது பேஸ் போல் பற்றி ஓயாது பேசுவார். விளையாட்டைப் பற்றித் தெரியாது என்று சொன்னால் கனடாவில் ஒரு புழுவைப் பார்ப்பதுபோலப் பார்ப்பார்கள். ஆகவே முதல் நாள் நான் அதற்குத் தயாரிக்கவேண்டும். தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்த்து முக்கியமான குறிப்புகளை எடுத்து வைத்துக் கொள்வேன். அடுத்த நாள் முடிதிருத்தும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைச் சொல்லி அவரை மகிழ்விப்பேன். அன்று முடிவெட்டு உத்தமமாக அமையும்.
ஆனால் எத்தனை வருடங்கள் தான் இந்த நாடகத்தை ஆடமுடியும். எனக்கும் அலுப்பு பிடித்தது. நான் வேறு இடத்தில் முடிவெட்ட ஆரம்பித்தேன். அது 20 நிமிட தூரத்தில் இருந்த பெரிய நிலையம். பெண்கள் பகுதி தனியாக இயங்கியது. ஆட்கள் வருவதும் போவதுமாக ஒரே கலகலப்பு. நான் வாயே திறக்காத ஒரு வேலைக்காரரிடம் போகலாம் என்ற முடிவில் இருந்தேன். என்னுடைய முறை வந்தபோது, புதன்கிழமை என்ற வாசகம் எழுதிய தடித்த உடையை, வியாழக்கிழமை அணிந்திருந்த ஐம்பது வயதுக்காரர் ஒருவர் என் முடியை வெட்டத் தயாராயிருப்பதாகச் சொன்னார். ஒருநாள் பிந்திய ஆள் என்றாலும் அவர் தலையை சரித்து புன்னகைத்த விதம் எனக்குப் பிடித்துக்கொண்டது.
அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. கருமமே கண்ணாகி அவர் முடியை வெட்டி முடித்ததும் கண்ணாடியில் பார்த்தால் அது வெகு நேர்த்தியாக இருந்தது. ஒரு கலைஞனின் வேலை என்பதில் சந்தேகமே இல்லை. அவருடைய கைகள் வண்ணத்துப்பூச்சி போலத் துரிதமாக இயங்கின. தலையிலே ஆடிக்கொண்டிருக்கும் ஆயிரம் முடிகளில் ஒரு மயிரை மட்டும் அவர் கத்தரிக்கோல் தேடி லாவகமாக வெட்டும். அவ்வளவு நுட்பமான கலைஞன்.
அடுத்த முறையும் அவர்தான் வெட்டினார். அதற்கு அடுத்தமுறை சென்றபோது அவருக்காகக் காத்திருந்து அவர் முடிவெட்ட ஆரம்பித்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அவரைப் பார்த்தால் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர் போலத் தோற்றமளித்தார். கண்கள் பழுப்பு நிறத்திலும் முடி கறுப்பாகவும் இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் எல்லாம் வித்தியாசமாகவே தோன்றின. வாடிக்கைக்காரர்களிடம் பேசும்போது அவருடைய உச்சரிப்பு அரேபியர்களுடையதைப்போல இருந்ததையும் கவனித்தேன்.
அன்று பெண்கள் பகுதியில் இருந்து மிக நாகரிகமாக உடையணிந்திருந்த ஒரு பெண் இவரிடம் வந்தாள். கறுப்புக் காலணியும் சிவப்புக் கையுறையுமாக பார்த்தவுடனேயே அவள் அரேபியப் பெண் என்று சொல்லிவிடலாம். வயது முப்பதுக்குள்தான் இருக்கும். அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவள் போல ஒருகையை இடுப்பில் வைத்து சாய்ந்து நின்றாள். ஏதோ அரபு போன்ற மொழியில் அவரிடம் வேகமாகப் பேச அந்த மனிதர் ஒரு வார்த்தையில் ஏதோ சொன்னார். அந்தப் பெண் மீண்டும் சங்கிலித் தொடர்போல நிற்காமல் பேசினாள். இவர் மறுபடியும் சுருக்கமாக பதில் கூறினார். அவள் தொடர்ந்து ஏதோ கேட்க ‘உனக்குக் கேட்கவில்லையா. எனக்கு அரபு மொழி தெரியாது’ என்று உரத்து ஆங்கிலத்தில் சொன்னார். ஒரு குதிரை பக்கவாட்டில் நகர்வது போல அவள் நகர்ந்து சற்று எரிச்சலாகவே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
எல்லோரும் இவரையே பார்த்தார்கள். இவர் ஒருவிதப் பதற்றமும் இன்றி முன்புபோல அமைதியாக என் முடியை வெட்டிக்கொண்டிருந்தார். நான் முதன்முதலாக இவரிடம் பேச்சுக் கொடுத்தேன். இவர் ஈராக்கில் இருந்து போருக்கு முன்னர் சதாம் காலத்தில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர். அந்தப் பெண் தலைமுடியலங்காரம் செய்ய வந்திருக்கிறாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. அவள் பேசும் அரபுவை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் கூறுமாறு கேட்டிருக்கிறாள். இவர் தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். ஈராக்கில் இருந்து புலம் பெயர்ந்த ஒருவருக்கு அரபு மொழி தெரியாது என்பதை அவள் நம்பவில்லை. அதுதான் கோபமாகச் செல்கிறாள்.
எனக்கு ஆச்சரியம். நான் வாழ்நாளில் சந்திக்கும் முதல் ஈராக்கியர் இவர்தான். ஆதி காவியமான கில்காமேஷ் இலக்கியம் பிறந்த நாடு என்று எனக்கு ஈராக்கில் மதிப்பு உண்டு. நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு சுமேரிய எழுத்தில் எழுதிய அந்தக் காவியம் இன்றும் களிமண் தட்டைகளில் அங்கே பாதுகாக்கப்படுகின்றன.
நான் அவரிடம் கேட்டேன். ‘எப்படி உங்களுக்கு அரபு மொழி தெரியாமல் போனது?’
நான் ஈராக்கில் பிறந்தாலும் அநேகமாக வெளிநாடுகளில்தான் வளர்ந்தேன். என்னுடைய தந்தையார் ஈரான், சிரியா போன்ற நாடுகளில் வேலைசெய்தார். நான் பொறியியல் படிப்பு படித்தவன். ஈராக்கில் தொடர்ந்து வாழமுடியாமல் தஞ்சம் கேட்டு கனடாவுக்கு வந்தோம். என் மகன் இப்போது வெளிநாட்டில் வேலை செய்கிறான். நான் இங்கே தனியாகத்தான் வாழ்கிறேன்.
பொறியியல் படித்துவிட்டு எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீர்கள்?
நான் மாத்திரமில்லை. என்னைப் போலப் பலபேர் இங்கே வந்து முற்றிலும் வேறு வேலை செய்கிறார்கள். ஆங்கிலத்தில் இன்னொருமுறை பொறியியல் படிக்க என்னால் முடியவில்லை. ஆனால் எனக்கு இந்த தொழிலில் ஒரு மோகம் என்று சொல்லலாம். மூன்று மாதப் பயிற்சியில் முடிவெட்டப் பழகிவிட்டேன். இதுவும் பொறியியல் போலத்தான். மிகப் பெரிய கலை. ஒவ்வொருநாளும் நான் வீட்டுக்குப் போகுமுன்னர் ஒரு புது விசயம் கற்றுக்கொண்டு போவேன்.
என்னால் நம்பமுடியவில்லை. இந்த மனிதரை அதிசயத்தோடு பார்த்தேன். இனிய புன்னகை மாறாமல் தொழிலில் கவனமாக இருந்தார். ‘நீங்கள் இன்னும் ஆரம்பக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. நீங்கள் என்ன மொழி பேசுவீர்கள்?’ என்றேன்.
‘நான் படித்தது பாரசீக மொழி. அது தொழிலுக்காக. வீட்டு மொழி அராமிக்.’
‘அராமிக்கா? கேள்விப்பட்டதில்லையே.’
‘அப்படி ஒரு மொழி இருக்கிறது. என் மகனுக்கும் கொஞ்சம் தெரியும். என் மனைவியும் நானும் வீட்டிலே அதுதான் பேசுவோம். போன வருடம் என் மனைவி இறந்துவிட்டார். எனக்கு இங்கே என் மொழி பேசுவதற்கு ஒருவருமே இல்லை. கனடாவில் இந்த மொழி பேசுபவர்கள் சிலர் இருப்பதாகக் கேள்வி. ஆனால் அவர்களுடன் என்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.’
‘அராமிக் மொழி பேசும் நாடு என்று ஏதாவது உண்டா?’
‘அப்படி இருந்தால் அது பெரிய வரம் அல்லவா? நான் Syrian Othodox Churchஐச் சேர்ந்த கிறிஸ்தவன். சதாம் ஆட்சியில் நாங்கள்பட்ட கொடுமைகளைச் சொல்லி ஆற்ற இயலாது. உலகத்தில் இன்று ஒரு மில்லியன் மக்கள் அராமிக் மொழியைப் பேசுகிறார்கள். ஆனால் துயரம் என்னவென்றால் அவர்கள் ஓர் இடத்தில் இல்லை. அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. சிதறிப் போய் ஈரான், ஈராக், இஸ்ரேல், லெபனான், சிரியா போன்ற பல நாடுகளில் சிறு சிறு குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். உலகத்துக்கு முதன்முதலாக சட்டத்தொகுப்பை வழங்கியவன் 3700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எங்கள் மன்னன் ஹமுராபி. ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பதற்குத்தான் அவன் சட்டம் இயற்றினான். இன்று நாங்கள் ஒடுக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடு நாடாக அலைந்துகொண்டிருக்கிறோம்.’
‘கனடா நீங்கள் தேர்ந்தெடுத்த நாடுதானே. இங்கே உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டல்லவா?’
‘நண்பரே, இது சொர்க்கம். இதில் என்ன சந்தேகம். இங்கே வந்தபின் நான் நினைத்தேன் ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொருவரும் ஒரேயொருநாள் என்றாலும் கனடாவில் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று. அப்பொழுதுதான் அவர்களுக்குச் சுதந்திரக் காற்று என்பது என்னவென்று தெரியவரும். நான் சொன்னது எங்கள் மொழியை. இன்று அது அழிந்துகொண்டு வருகிறது. எங்கே எங்கேயெல்லாம் எம்மக்கள் வாழ்கிறார்களோ அங்கேயெல்லாம் எங்கள் மொழி விழுங்கப்படுகிறது.
‘ஆபத்தில் இருக்கும் மொழி’ என்று எங்கள் மொழியை அறிவித்துவிட்டார்கள். இன்னும் சில வருடங்களில் அது அழிந்து போகக்கூடும்.’
‘அப்படி நிச்சயமாகச் சொல்ல முடியுமா?
‘அப்படித்தான் அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் இரவு நேரத்தில் என் வீட்டுக்கு வந்தால் நான் அராமிக் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். சுவர்களுடன் அராமிக்கில் பேசுவேன். பழக்கம் விட்டுப்போய் விடுமே என்ற பயம். நான் பேசும் ஒவ்வொரு நிமிடமும் என் மொழி வாழ்ந்துகொண்டிருக்கிறது.’
இப்பொழுது அவர் முடிவெட்டுவதை நிறுத்திவிட்டார். சற்று எட்ட நின்று தலையை இரண்டு பக்கமும் சரித்து என் முடியை உன்னிப்பாகக் கவனித்தார். பின்னர் முகத்தைப் பார்த்தார். திடீரென்று ‘ஷாம்பூ போடவா?’ என்றார். நான் சம்பாஷணை தொடரவேண்டும் என்பதில் ஆவலாயிருந்தேன். சரி என்று தலையாட்டினேன்.
‘நான் நிறைய பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடு, என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?’.
நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன். அங்கே எங்கள் மொழியை சிங்களம் விழுங்கிக்கொண்டிருக்கிறது.
உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய மொழி அல்லவா?
அது உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் முன்னராகவே செதுக்கிய தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் குகைகளில் கிடைக்கின்றன. இன்று உலகத்தில் பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.
எண்பது மில்லியனா? நம்பவே முடியவில்லை. எங்கள் மொழியிலும் பார்க்க 80 மடங்கு அதிகமான எண்ணிக்கை. அதிர்ஷ்டம் செய்த மொழி. ஆனால் உங்களுக்கென்று ஒரு நாடு உண்டா?
இல்லை.
உங்கள் மொழியில் தேசிய கீதம் உண்டா?
இல்லை.
அப்படியானால் உங்கள் மொழிக்கும், என் மொழிக்கும் பெரிய வித்தியாசமே இல்லை.
எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியும்?
நீங்கள் வரலாற்றைப் படித்தால் தெரிந்துவிடும். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராமிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். பழைய இலக்கியங்களும் புதிய இலக்கியங்களும் படிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். அவர்களுடைய மொழி இனி மேல் அழியவே அழியாது.
நாடு இல்லாமல் ஒரு மொழி வாழமுடியாது என்று சொல்கிறீர்களா?
நான் ஒரு தலைமுடி திருத்துபவன். மொழியியல் அறிஞன் அல்ல. எனக்கு என்ன தெரியும்? நாடு இல்லாமல்தானே என் மொழி சிதைந்தது. நாடு இருந்தபடியால் தானே இறந்து போன ஹீப்ரு மொழி மறுபடியும் உயிர்பெற்று நிலைத்து நிற்கிறது. உங்கள் மொழி - தமிழ் - நாடு இல்லாமல் வாழும் என்று நினைக்கிறீர்களா?
‘ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.’
மாநிலம் வேறு. நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள ஒரு சின்னஞ் சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் - மால்ட்டா. அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ். அந்த மொழி அழியுமா? அழியாது. ஒரு மைல்கல் எப்போதும் உண்மை பேசுவதுபோல நான் பேசுகிறேன். அவர்களுடைய மொழி அழிய வேண்டும் என்றால் முதலில் அந்த நாடு அழியவேண்டும். உங்கள் நாட்டுக்கு சமீபத்தில் இருக்கும் மாலை தீவு, அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடைய சனத்தொகை 350,000. அவர்களுடைய மொழி திவேஹி. அது அழியுமா? எப்படி அழியும்? 300,000 மக்கள் வாழும் நாடு ஐஸ்லாண்ட். அவர்களுடைய மொழி ஐஸ்லாண்டிக். அது அழியுமா? இல்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது. பத்து மில்லியன் மக்கள் ஒரு மொழியைப் பேசினாலும் அவர்களுக்கு ஒரு நாடு இல்லாவிட்டால் அந்த மொழி அழிந்துவிடும் என்று சொல்கிறீர்கள்?
ஷாம்பூ போட்டு முடிந்ததும் அவர் முடி உலர்த்தியால் தலைமுடியைச் சீவி உலர்த்திக்கொண்டிருந்தார். அவர் வாய் மட்டுமே பேசியது, ஆனால் கைகள் வேறுயாருடையவோ கைகள்போலத் துரிதமாக வேலை செய்தன.
அப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது. ஒரு மொழிக்குப் பாதுகாப்பு வேண்டும். ஒரு நாடுதான் அதைக் கொடுக்கமுடியும். உலகத்தில் 7000 மொழிகள் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். அவற்றிலே 2000 மொழிகள் அழிவில் இருக்கின்றன. மீதியில், ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்கமுடியாத மொழிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி நகர்கின்றன. அனைத்து மொழிகளையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவற்றை சேமிக்கவேண்டும். ஆவணப்படமாகவும், ஒலி வடிவமாகவும் கணிமைத் தொழில்நுட்பத்தில் பாதுகாக்கலாம். ஒரு மொழி அழிவது என்பது ஓர் இனம் அழிவதற்கு, ஒரு கலாச்சாரம் அழிவதற்கு சமம். கீழே விழுந்த முடியை திரும்பவும் ஒட்டமுடியாது. மொழியும் அப்படித்தான். பூமியிலிருந்து ஒரேயடியாக மறைந்துவிடும்.
நான் பேசமுடியாமல் அவரையே பார்த்தேன்.
‘ஒரு மொழியின் எதிர்காலத்தை அதைப் பேசும் மக்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை. அது போல அதன் வளர்ச்சிக்கும் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. ஒரு சின்னப் பரிசோதனை. உங்கள் நாட்டு சிங்கள மொழியின் கடந்த 50 வருட கால வளர்ச்சியுடன் தமிழ் மொழியின் ஐம்பது வருட வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கே புரியும்.’
புதிய முடி அலங்காரத்தை நான் கண்ணாடியில் பார்த்தேன். திருப்தியாகவிருந்தது. காசாளரிடம் பணத்தைக் கட்டினேன். ஈராக்கிய நண்பரின் பெயரைக்கூட நான் அதுவரை தெரிந்திருக்கவில்லை. அது முக்கியமாகவும் படவில்லை.
எனக்குக் கவியின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.
நான் சாக்கடையில்
விழுந்து கிடக்கிறேன்.
என் கண்கள்
நட்சத்திரங்களில்.
நான் என் மொழி மீது வைத்த நம்பிக்கையைத் துறக்கத் தயாராகவில்லை.
அவர் என்னை மூடியிருந்த போர்வையைக் கையிலே விரித்துப் பிடித்தபடி ஒரு மாட்டுச் சண்டைக்காரர் போல நின்றார். தத்தம் மொழிகளை இழந்துகொண்டுவரும் இருவரையும் ஒரு போர்வை பிரித்தாலும் அவர் வேதனையும் இழப்பும் துயரமும் என்னுடையது போலவே இருந்தது. எப்படி இவரிடம் விடைபெறுவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவர் அந்தச் சமயத்தில் எதைச் சொல்லக் கூடாதோ அதைச் சொன்னேன்.
‘நண்பரே, அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒரு மொழியை நிறுத்த, தனிமனிதர் ஒன்றுமே செய்யமுடியாது. இன்றிரவு சுவருடன் உங்கள் உரையாடல் இனிமையாக அமையட்டும்.’
‘என்ன, அப்படிச் சொல்லி விட்டீர்கள். ஒரு மொழியை அழிய விட்டுவிடுவோமா? அது யேசு பேசிய மொழி அல்லவா?’
நான் திடுக்கிட்டேன். கடந்து போன பிறகும் முடிவெட்டு நிலையக் கதவுகள் நெடுநேரம் ஆடின.
Subscribe to:
Posts (Atom)