Saturday, April 23, 2011

அடையாளம் வாரம் - 10‏

தேர்தல் அறிவிப்பு:
தலைவர் வெற்றிமாறனின் அறிவுறுத்தலுக்கிணங்க, கட்சியின் தகவல் செயலாளராகிய நான், குமரன் வாசிக்கும் முறைப்படியான தேர்தல் அறிவிப்பு.

வருகின்ற மீனம் மாதம் முதல் நாள் தனி தமிழகத்தின் முதல் தேர்தல் நடைபெறும். நாம் இதுவரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து இந்திய கட்சிகளுக்கு வாக்களித்துக்கொண்டிருந்தோம், நாமும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்து, தமிழக மாநிலத்தின் தலைவராக வெற்றிமாறன் இருந்து வந்தார்கள். இனி அதற்க்கு அவசியம் இல்லாததால், நாம் நமக்கென்று ஒரு கட்சியை உருவாக்கியுள்ளோம். தமிழ் குடியரசு கட்சி என்ற பெயருடன், புலி சின்னத்துடன், சிவப்பு வண்ணத்தில் நடுவில் சீரிய புலியுடன் கொடியை கொண்டு இருக்கும். நமது கட்சி மட்டுமல்லாது, மக்களாட்சி தத்துவத்தில் இயங்கும் அனைவரும் தேர்ததில் கலந்துகொள்ள வரவேற்க்கப்படுகிறார்கள். இது முதல் தேர்தல் என்பதால், சில இந்திய கட்சிகள் களத்தில் நிற்க விரும்பும் வேளையில், அவர்களும் தேர்தலில் நிற்க அனுமதிக்க படுவார்கள். தேர்தல் தமிழ் குடியரசு கட்சியை காட்டிலும் இருபது விகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பெரும் நிலையில், இந்திய கட்சிகள் அடுத்த தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்படுவார்கள். ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் நாள் வாக்கு தினமாக இருக்கும். தேர்தல் ஒருங்கிணைப்பாளராக அரிமாவேந்தன் இருப்பார், தேர்தல் முறைப்படி, நேர்மையான முறையில், மக்களாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில் நடைபெறுவதை உறுதி செய்வதன் பொருட்டு ஐ.நா. சபையின் உறுப்பினர் ஒருவரின்மேற்பார்வையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், ஐ.நா. சபை உறுப்பினர்கள் வர விருப்பமில்லாத பட்சத்தில், நோர்வே, சுவீடன், சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சமூக ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களது மேற்ப்பார்வையில் நேர்மையான தேர்தல் நடத்த ஏற்ப்பாடு செய்யப்படும். சில அவசியமான கட்டுபாடுகள் தமிழக தேர்தலில் கடைபிடிக்கப்பட வேண்டும். அவற்றில் சில இங்கே வாசிக்கிறேன், முழுமையான விவரங்கள் தேர்தல் ஆணையத்திடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

1. கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு பின்பும் அதே கூட்டணியில் நிலைக்கவேண்டும்.
2. இலவச அறிப்பிவிப்புகள் தடை செய்யப்படுகின்றன
3. வேட்பாளர்கள், தலைவர்கள், கட்சிகள் தத்தம் சொத்து விபரங்களை தெரிவிக்கவேண்டும். விபரங்கள் தவறாக இருப்பின், நிரூபிக்கபட்டால் மீண்டும் தேர்தலில்
    நிற்கமுடியாது.
4. சுவரொட்டிகள், படவெட்டுகள், கூப்பாடுகள் தடைசெய்யப்படும். 
ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தேர்தல் கூட்டங்கள் நடத்தவேண்டும்.

இந்தியாவும், இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தலை தவிர்க்கும் பட்சத்தில், தனித்தமிழகதிற்கு புலிச்சின்னமும் இந்திய ஆதரவு கட்சிகளுக்காக இந்திய அரசின் சின்னமாக அசோக சின்னமும் வாக்கு இயந்திரத்தில் பொறிக்கபட்டிருக்கும். இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விரும்புபவர்கள் அசோக சின்னத்திற்கு வாக்களிக்கலாம். வாக்குகள் கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு அனைத்து நாடுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் அனுப்பிவைக்கப்படும். நாளை  வெற்றிமாறன் அவர்கள் தொலைக்கட்சியில் உரைநிகழ்த்துவார்கள், இதில் அரசின் நோக்கங்களும், கோட்பாடுகளும், அடங்கும்.

மாறன் வீடு:புற்களும், பூக்களும் கூட ஆழ்ந்து தூங்கும் இரவு மணி மூன்று. ஒரு காவலர் அவசரமணி பொத்தானை அழுத்தினார், அனைவரும் துப்பாக்கியை நேர்முனைபடுத்தி விறைத்து  நின்றனர். இந்தியபடையனியினர் சூழ்ந்தனர்...ஒரே ஒரு காவலதிகாரி பேசினார் "என்ன வேண்டும்? ஏன் இந்த நேரத்தில் உங்கள் முயற்சி? காலையில் பேசலாம், இந்திய படையணியினர் எதையும் கேட்கவில்லை, உட்புக முனைந்தனர்.... கொஞ்சம் பொறுக்கவும் நாங்களே கூப்பிடுகிறோம். ஒரு அதிகாரி கூப்பிட்ட அடுத்த பத்து மணித்துளியில் வந்தார் மாறன். கிட்டத்தட்ட இதே நிலைதான் திலீபன், கக்கன், குமரன் மற்றும் உயர் மட்ட தலைவர்கள் அனைவரின் வீட்டிலும். காவலர்களின் எந்தவித எதிர்ப்பையும் சந்திக்காமல், இந்திய படையணியினர் கைது ஏற்பாட்டை முடித்தனர்.
மாறன் கொண்டுசெல்லப்ப்படும்போது, வாகனம் சட்டென்று நின்றது, ஒரு அதிகாரி வந்து, மாறனின் முகத்தில் பளேரென்று அறைந்தார், "யார் நீ" முகத்தை கிள்ளி திரை கிளிக்கப்பட்டது, எங்கே மாறன்? வந்தவன் வாய் திறக்கவில்லை. திலீபன், கக்கன், குமரன் மூவரும் ஆள்மாறாட்டம் செய்திருந்தனர்.

காலை அவசர கூட்டம்:
திலீபனும், கக்கனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர கூட்டத்தில் யாருக்கும் தெரியாத சிலரும் கலந்து கொண்டனர். இன்னும் ஆறு மணி நேரம் நாம் அவசர நிலையை சமாளிக்கலாம். அதன்பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கூட்டமே இது. கூட்டத்தில் சில திட்டங்கள் பற்றி பேசினார். கூட்டத்தில் 800 பேர் இருந்தனர். இவர்களில் தமிழகம் அதிகம் பார்க்காத அழகிய, சிரித்த முகத்துடன் ஒருவர் அடிக்கடி பேசினார், அவர் பெயர் தமிழ்ச்செல்வன் என்றும், மாறன், திலீபன், கக்கன் இல்லாத போது அல்லது கைது செய்யபட்டால் கட்சியின் தற்காலிக தலைவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்ச்செல்வன், வயது 52, படித்தது சேதமுறா சோதனை துறையில், பட்டமேற்படிப்பு, அணு ஆராய்ச்சியில் முனைவர் பட்டம், கட்சியில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாதவர், முப்பது நாடுகளில் பெரிய பொறுப்புகளில் வேலைசெய்த அனுபவசாலி, ஆங்கிலம், ரஷ்ய மொழி, பிரஞ்சு மொழி நன்றாக பேசக்கூடியவர். மேடை பேச்சில் அவ்வளவு திறம் இல்லாவிட்டாலும், ஆலோசனை கூட்டம், மாநாடு, கலந்துரையாடல் போன்றவற்றை வழிநடத்தும் திறமை பெற்றவர். எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் சிரித்துக்கொண்டே சமாளிக்கும் பக்குவம் கொண்டவர், 
தமிழக அரசின் பொறியியல் கல்வி ஆணையகத்தில், திட்ட மேம்பாட்டு பிரிவில் தலைவராக வேலை செய்துகொண்டிருக்கிறார். பொறியியல் துறை மறுசீரைமைப்பு கொள்கை வகுப்பாளராக மாறனுக்கு துணை புரிபவர். இப்பொழுது அணுமின் கொள்கை மற்றும் பாதுகாப்பு பற்றி தீவிரமாக ஆய்வு செய்து மாறனுக்கு அறிக்கை செய்ய இருக்கும் வேளையில் தான், இப்பொழுது புதிய பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது.
அடுத்து பால்.புகழேந்தி. கல்வித்துறையில் இருப்போர் மட்டும் தெரிந்த முகம். அனைத்து பல்கலைகழகங்களின் வேந்தர், அண்ணா பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப்பபிரிவின் ஆலோசகர். வயது 44. கட்டுமான துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் கட்டுமானத்துறை - இரும்பியல் துறையில் முனைவர் பட்டம், ஆழிப்பேரலையை தாங்கு திறன் கொண்ட எக்கிரும்புகள், நிலநடுக்கம் தாங்கும் திறன்கொண்ட கட்டுமானங்கள் போன்றவை இவர் ஆராய்ச்சியினால் சொல்லிகொள்ளதக்கது, மாறனுக்கு கட்டுமானத்துறையில் செய்யவேண்டிய சீரமைப்புகளை இவர்தான் ஆலோசனை வழங்குவார். திலீபன் கைது செய்யப்பட்டால் அவரது பொறுப்பை தற்காலிகமாக எடுத்துக்கொள்வார். தற்காலிக கட்டளை தளபதி (நிர்வாகம், சட்டம், தேர்தல், கூட்டங்கள், காவல் துறை மற்றும் சில).

நடேசன் செல்வா. வயது 38. பொருளாதார நிர்வாகம் துறையில் பட்ட மேல்படிப்பு. பொருளாதார அடிக்கட்டமைப்புகள், உள்நாட்டு பொருளாதாரம், விவசாய பொருளாதாரம், வெளிநாட்டு முதலீடுகள் போன்றவற்றில் மாறனுக்கு உதவி செய்தவர். புதிய அரசின் பொருளாதார கொள்கை வகுக்கும் செயல் திட்டத்தை  அமுலாக்கும் தொட்டு அனைத்து அறிக்கைகள், திட்டங்கள் தயாராக வைத்திருப்பவர். இளங்கன்று, கொதிக்கும் ரத்தம் கொண்டவர், கக்கன் கைது செய்யும் பட்சத்தில், நடேசன் செல்வா., அவரது கட்டளை பணிகளை தொடர்வார்.

தொலைக்காட்சி நிலையம்:
மாறன் தன தேர்தல் அறிக்கையை பதிவு செய்துகொண்டிருந்தனர். இந்திய படையணியினர் நுழைந்து கொண்டிருந்தனர்....

தொடர்வோம்...

Sunday, April 10, 2011

அடையாளம் வாரம் - 9

அன்புடன் வெற்றிமாறன்,
மீண்டும் மீண்டும் பெயரை உச்சரித்து பார்த்துக்கொண்டாள்..கொஞ்சம் ஆசையாய் இருந்தது....பெயரை சொல்லிப்பார்க்க, பார்க்காமலே இருந்திருக்கலாம்..ஏன் பார்த்தோம் என்றிருந்தது. அப்பாட எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டனவே!!! அந்த கடிதம் இல்லை அந்த கவிதை...""என் பார்வைகளை முடியாவிட்டாலும் தவிர்த்துக்கொள்கிறேன்""""" தவிர்த்துவிட்டேன் என நினைத்துகொண்டாயடா  இன்றும்..பாவி... அதனால்தான் நாம் சேர்ந்திருந்தால் எப்படி இருப்போமோ அதைவிட தனித்தனியாக நன்றாக இருக்கிறோம் என உள்வார்த்தை கொண்டு பேசினாயா... அழுதாள்...புலம்பினாள். அந்த மனுசனுக்கும் பால் ஊத்தியாச்சு நேத்தே..அவரும் சொல்லாமலே செத்துபோனாரா? யாருடா சொல்வா? என ஆதங்கத்தை... நானே சொல்லி உன்னை அழவைக்கவும் மனசில்ல... அத நினைக்ககூட முடியல மாறா!! நா அழுதா நீ தாங்குவியாடா? தவிச்சுபோயிருவ...உனக்கு தெரியாமலே என மனசு  மண்ணுக்குள் போகட்டும் அந்த பெரியமனுசன்கூடவே... அந்த ஆளை இந்த ஊரே கொண்டாடுது!! என்கூட அரைமணிநேரம் பேசினே.. இப்ப வந்து பேசு பாக்கலாம்....குழிக்குள்ள அமுக்கியாச்சு ஒன்ன.. நீ எப்படி பேசுவ..

தூற்றினாள் தாமரைக்கண்ணனை... இவள் ஒருவள் மட்டுமே தூற்றினாள் தன காதலை கருக்கிவிட்டதாக நினைத்து. ஆனால், அன்று மாறன் காதல் பின் போயிருந்தால் ஒரு இனமே பல நூற்றாண்டுகளுக்கு பின்னல்லவா இருந்திருக்கும். தமிழில் தலைவன் என்று எழுத ஆளில்லாமல் அல்லவா போயிருக்கும். காதலும், மனைவியும், பிள்ளைகளும் என்று இருந்திருந்தால் ஒரு தலைமுறை மட்டுமே என்று போயிருக்கும். இன்று எத்தனை பிள்ளைகள், எத்தனை மனைவிகள், எத்தனை காதல்கள் வாழப்போகின்றன. இதுவல்லவா வாழ்க்கை. இதற்காக படைக்கப்பட்டவன், பிறந்தவன் இவனல்லவா. நல்லதோர் வீணை செய்தே நலங்கெடபுழுதியில் எறிவதுண்டோ - பாரதி கோவித்துக்கொள்வானடி பதரே என்றிருப்பார் தாமரைக்கண்ணன் இருந்திருந்தால்.

சென்னை:
வீறுகொண்டு கத்தினான் விக்ரம் சிங். சாலே...சாம்பார்வாலா!! உதயகுமார். இனிமேல் பேசி பயனில்லை. அதிரடியாக ஏதாவது செய்யவேண்டும். உடனே தொலைபேசினான். டில்லி ஒத்துக்கொண்டது. படையணி தளபதி கார்த்திகேயன் நாயரை பணித்தான். இளித்த நாயருக்கு சாயா கொடுத்தது போல் உலார்ந்த ஆனந்தம்.. இதற்க்காகத்தானே காத்திருந்தேன் என்பதுபோல் ஓடோடி வந்தார். எனக்கு அதிரடியா ஏதாவது செய்யனும்... சாம்பார்க்காரன் பாக்கணும். குள்ளநரி வேலை என்றாலே மலையாளிகளுக்கு பல்த்தெரியும்...அதிலும் தமிழனுக்கு எதிரா என்றால் சொல்லவா வேண்டும். ஒரு யோசனை சொன்னான். சுமார் ஒரு கோடிக்கும் மேல் பள்ளிகளிலும், மண்டபங்களிலும் அடைத்துவைத்திருக்கும் மலையாளிகள், தெலுங்கர்கள், வடவர்கள் பற்றி நீங்கள் யோசிக்கவே இல்லை. அவர்களில் பெரும்பாலும் பெரிய! மனிதர்கள்.. எல்லாம் வியாபாரிகள், தொழிலதிபர்கள். எனவே அவர்களை மீட்க அதிரடியாக செல்வோம். அப்பத்தான் மாறனின் அடுத்த நடவடிக்கை தெரியும்.

முதலில் 300 இடங்களை தெரிவு செய்தார்கள். அம்முன்னூறு இடங்களிலும் ஒரே நேரத்தில் சென்று பெருந்த்தாக்குதல் மூலம் பிணைக்கைதிகளை விடுவிப்பது. ரமேஷ் ராவ் காவல் துறை அதிகாரி தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது. ஆங்காங்கே நிலைகொண்டிருக்கும் படையணிகளை அப்படியே பயன்படுத்திகொள்வது - இதுதான் திட்டம். தகவல்,  நிலைகளுக்கு காதும் காதும் வைத்தாற்போல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 3 .30  மணிக்கெல்லாம் படையணிகள் பூனைபோல் சத்தமில்லாமல் சென்றது, படையணிகள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உட்புகுந்தார்கள்... புகுந்ததும் அறிவித்தார்கள்..."நாங்கள் இந்திய படையினர், உங்களை விடுவிக்க வந்துள்ளோம், யாரும் பயப்பட வேண்டாம்""" யாரங்கே மாறனின் காவல் துறை ஆட்கள்... சொல்லிமுடித்த அடுத்த வினாடி ஆட்களுக்குள் ஆட்களாக நிலைகொண்டிருக்கும் காவல் துறை படைகள், துப்பாக்கி விரித்தன... யாரும் சத்தம் போடவேண்டாம்.... நாங்கள் மாறனின் படையணிகள்.... பிணைக்கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்தனர். வணக்கம் இந்திய படையணியினரே.. உங்கள் துப்பாகிகளை கீழே போடுங்கள்... அனைத்து படையணியினரும் பினைபிடிக்கப்பட்டு, துப்பாக்கிகள் கையகபடுத்தப்பட்டன. கிட்டத்தட்ட முன்னூறு இடங்களிலும் இதே கதிதான். சுமார் பத்தாயிரம் வீரர்கள் பினைபிடிக்கப்பட்டனர், நூறு உலங்கூர்திகள், பல ஆயிரக்கணக்கான நவீனரக துப்பாக்கிகள், எரிபடைகள், படைஊர்திகள் கையகப்படுத்தபட்டன. சிறப்பு செய்தியாக, பத்து படைத்தளபதிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

தஞ்சை மாநகரம்:
இவை அனைத்தும் காலை பத்துமணி அளவில் முடிந்துவிட்டது. மூத்த கட்டளை தளபதி தீலிபன் அவசர செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்திய கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் சிங் அவர்கட்கு, மீண்டும் மீண்டும் ஏதாவது ஒன்றை தப்பும் தவறுமாக செய்து உங்கள் அதீத புத்திசாலிதனத்தை நிரூபிக்கவேண்டாம். வெற்றிமாறனின் அறிவுறுத்தலுக்கிணங்க பினைபிடிக்கபட்ட மக்களில் பெரும்பான்மையானோர் விடுவிக்கப்படுவர். மேலும் சந்தேகப்பட்டியலில் இருக்கும் சில தொழிலதிபர்கள், இந்திய அரசு அதிகாரிகள், உளவுத்துறை அலுவலர்கள், வட்டிக்கடை நடத்தும் சேட்டுக்கள், பொதுமக்களுக்கு ஊருவிளைவிக்ககூடிய சில குண்டர்கள் என பட்டியல் போடப்பட்டவர்கள் மட்டும் தமிழக அரசின் மேற்ப்பார்வையில் கண்காணிக்கப்படுவார்கள் அல்லது கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இது பற்றிய நீண்ட செயலறிக்கையை மாறனின் தகவல் செயலாளர் குமரன் படிப்பார்.

வணக்கம். மாண்புமிகு தலைவர் வெற்றிமாறனின் அறிவுறுத்தலின் படி, இந்த செய்தி வாசிக்கபடுகிறது.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
அனைத்து விவசாய நிலங்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், அதன் விலையை இருதரப்பு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். "யார் தமிழர்கள்" என்ற கேள்வி எழும் நிலையில் அவரவர் குலம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் இடத்தின் தாய்ப்பத்திரம் முக்கிய ஆதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்படும். இதுபற்றிய புரிந்துணர்வு அறிக்கையை கூடிய விரைவில் அரசு சமர்ப்பிக்கும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தமிழகத்தின் அடிப்படை ஆதார வளங்கள் (நீர், நிலக்கரி, சுன்னாம்புத்தாது, பெட்ரொலியம் போன்ற) சார்ந்த தொழில்கள் அனைத்தும் அரசு கையகப்படுத்தும், மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம். இதில் வங்கிகள் அடங்கும்.

அனைத்து பொதுத்துறை/இந்திய அரசு நிறுவனங்கள் தமிழக அரசிற்கு சொந்தமாகும். இதில் அணு/நீர்/அதிவெப்ப மின் நிலையங்களும் அடங்கும். இது பற்றி பேச இந்திய அரசின் ஆணையர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு ஒன்று விடப்படும்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு கீழ்: அனைத்து நிறுவங்களிலும் தமிழக அரசு குறைந்தது ஐம்பது பங்குகளை வைத்திருக்கு விரும்புகிறது. மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
தனியார் நிறுவங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு மேல்: அனைத்து நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதற்கு தமிழக அரசு விரும்புகிறது. குறைந்தது முப்பது பங்குகளை அரசு கொள்வளவு செய்ய விரும்புகிறது. தலைமை நிர்வாக அதிகாரிகள் திரு. திலீபனை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

தமிழரல்லாதவர்களின் வசமிருக்கும்
அரை ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் மணை நிலங்கள், தரிசு நிலங்கள் அனைத்தையும் தமிழக அரசு கையகப்படுத்தும். மதிப்பீடு இரு வாதிகளும் பேசி முடிவுக்கு வரலாம்.


இவை அனைத்தும் புதிய அரசின் பொருளாதார கொள்கையின் அடிப்படையில் வகுத்த முடிவுகளாகும். இதன் தொடர்ச்சி நேரம்/நிலைமை இரண்டும் கருத்தில் கொண்டு அவ்வப்போது அரசின் கொள்கைகள் வெளிவரும். அயலார் இந்த மண்ணை விட்டு துரத்தி அடிக்கபடுவார்கள் என்ற பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை. இங்கே அனைவரும் வாழ வழிவகுக்கப்படும், ஆனால் யாரும் எங்கள் மண்ணை கொள்ளைகொண்டு போக அனுமதிக்கமாட்டோம். இந்த கொள்கைகளை இனப்பாடு பார்க்கும் அரசு/தாலிபான் போன்ற அரசு/அனைத்துலக நாடுகளுக்கு எதிரான அரசு என வர்ணித்து உலக நாடுகளிருந்து தனிமைப்படுத்த இந்தியா முயலும்/முயன்றும் வருகிறது. இது மலேசியா, சிங்கப்பூர், ரஷ்ய குடியரசு, வளைகுடா நாடுகள், புருனே, போன்ற நாடுகளில் இருப்பது போல் ""மண்ணின் மைந்தர்கள்" கொள்கை வடிவிலிருக்கும், எனவே நாங்கள் அனைத்துலக நாடுகளுக்கு எதிரான அரசு அல்ல என கூறி, இதுபற்றி இறுதியான அறிக்கை தனிதமிழகத்தின் முதல் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்படும். இதன் அடிப்படையிலே நாடு இயங்கும். எங்கள் கொள்கை வகுப்பாளர்கள் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தது முறைப்படி எங்கள் கொள்கைகளையும், சிக்கல்களையும் வெளிப்படுத்துவோம். அதன்மூலம், அனைத்துலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறுவோம். தேர்தல் அறிவிப்பு முறைப்படி அடுத்தவாரம் வெளியிடப்படும்.

தொடர்வோம்....

Tuesday, April 5, 2011

அடையாளம் வாரம் - 8‏

அய்யம்பாளையம் பேரூராட்சி:
தாமரைக்கண்ணன் பறையர் குலத்தை சேர்ந்தவர். அப்பா கனகசுப்புரத்தினம்,  தமிழக காவல்த்துறையில் கண்ணியமாக வேலைசெய்த தொப்பை இல்லாத அலுவலர், பணிமுடியும் தருவாயில் மாவட்ட கண்காணிப்பாளராக வேலை செய்தவர், வேலை செய்த மாவட்டம் திண்டுக்கல். அய்யம்பாளயத்திலிருந்து ஒருமணி நேரபயனம்தான். அப்பா தனித்தமிழக கோட்பாடுகள் மீது நன்பிக்கை கொண்டவர். அவருடன் வேலை செய்த நண்பர் சாலமன் ஆரோக்கியசாமி, நெல்லைக்கருகில் முக்கூடல் பேரூராட்சியில் பிறந்து வளர்ந்தவர். சாலமன் ஆரோக்கியசாமி குடும்ப நண்பர். அவர்தான் கனகசுப்புரதினத்திற்கு தமிழ் தேசியம் சொல்லிக்கொடுத்தவர். சாலமன் ஆரோக்கியசாமியின் மகன் சாலமன் மாணிக்கம், தாமரைக்கன்னனின் நெருங்கிய நண்பரானவர், அவரும் சாகும் வரை தமிழக தனிநாடு குறித்து பல கட்டுரைகள் எழுதியவர். இவர் வெற்றிமாறனின் தாத்தாவுடன் படித்தவர். இதுவரை சங்கிலிப்பினைப்புகள் போதுமென நினைக்கிறேன். இந்த பிணைப்புகளை பற்றி மற்றுமொரு தனி ஒரு பதிப்பில் பார்க்கலாம். இந்த பிணைப்புகளை நீட்டிசென்று பார்த்தோமானால், பொன்னம்பலம், தோமையர், மை.பா, அரிமாவளவன் மற்றும் அறிஞர் குணா வரை நீள்கிறது. அய்யம்பாளையம் ஒரு நல்லாசிரியரை இழந்த ஊர். அரசியலில் தீவிரமாக இறங்கியபின் இப்பொழுதுதான் வெற்றிமாறன் இரவை இங்கு கழிக்கிறார், இந்தபுன்னிய மண்ணில். தான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அம்மாவும், அப்பாவும் தன்னை தாமரைக்கன்னனுக்கும், தமிழகத்திற்கும் தத்து கொடுத்துவிட்டு பழநியிலிருக்கும் நூர்ப்பாலையை கவனிக்க சென்றபின் வாடிப்பட்டி தாண்டி வந்து வாழ்ந்த ஊர். வாடிபட்டியிலிருந்து சில மைல்கள் தான் என்பதால் தன் மண்ணை விட்டுவிட்டு வந்தோம் என்ற நினைப்பே இல்லாமல் போனது மாறனுக்கு. தன் கண்கள் பார்த்து மூலையில் பதிவு செய்தவை அய்யம்பாளையம், மருதாநதி மற்றும் சுற்றியிருக்கும் மலைகளும், மலை சார்ந்த தென்னந்தோப்புகளும், பச்சை வெளிகளும்.

இந்த மண்ணில் காதல் பிறப்பது ஒன்றும் ஆச்சர்யமானது அல்ல.இந்த ஊரில் வாழ்ந்துவிட்டு காதலிக்காமல் போனால்தான் குற்றம். கவிதை எழுதுவதற்காக நதி ஒன்று தவழ்கிறது என்றால் அது மருதாநதியாகத்தான் இருக்கவேண்டும். இடுக்கில் ஓடும் நீரோடை, வெள்ளைப்பூக்கள் போல நீரலை, காலிடுக்கில் கடிக்கும் குட்டி குட்டி மீன்கள், வார்த்தைகளாக அள்ளித்தரும் துள்ளல் ஓசைகள். இந்த ஆற்றங்கரைதான் மாறனுக்கு கவிதை எழுத சொல்லிக்கொடுத்தது.

அய்யம்பாளயத்தின் தென்கோடியில் இருப்பது குட்டிகரடு. சத்தமில்லாத குட்டிமலை, மருதாநதியின் வாய்க்கால் அதனருகில் ஓடியதற்கு சான்றாக கோடு போட்டாற்போல் ஒரு தடமிருக்கும் இன்றும். குட்டிகரட்டிலிருந்து பார்த்தால் தெரியும் மூன்றாம் வீடுதான், தாமரைக்கண்ணனின் வீடு. யாரவது ஒருவர் அங்கே ஏதாவது ஒரு பாடம் கற்றுகொண்டிருப்பார்கள் எப்பொழுதும், அது அரசியலோ, தமிழோ, அல்லது தமிழரின் வரலாறோ. வீட்டின் முதல்மாடம் பெரியது, அங்கே பிள்ளைகள் படிப்பது வழக்கம். வீட்டின் முற்றம் அதன்பின் அழகிய தோட்டம், அங்கே சிலருக்கு மட்டும் அனுமதி உண்டு. அதில் முதலாமாவன் வெற்றிமாறன். வகுப்பு முடிந்ததும் வெண்ணிலாவுடன் பேசுவதும் அங்கேதான். தோட்டத்தின் தென்கிழக்கு மூலையில் ஒரு கொய்யா மரமுண்டு, இப்பொழுது....அங்கே உட்கார்ந்திருந்தார் மாறன். "கொஞ்ச நேரம் பேசணும்" பதினைந்து வருடமிருக்கும் அந்த குரலை கேட்டு "நல்ல இருக்கியா வெண்ணிலா?" இருக்கேன்... நீ?... நீங்கள்? தடுமாறினாள். ரெம்ப பிரச்சினையா இருக்குன்னு கேள்விபட்டேன்... எங்க வீட்ல சொன்னாக! பாத்து இரு மாறா..அந்தப்பிள்ள எப்பிடி இருக்கு?நல்லா.. வச்சிகிறையா? எல்லோரும் நல்லா இருக்கோம்... நம் ரெண்டுபேருக்கும் திருமணம் நடந்திருந்தா எப்படி இருப்போமோ தெரியல? ஆனா, இப்ப ரெண்டு பேருமே நல்லா இருக்கோம். அந்த நேரத்தில் வந்த வெண்மதி, வெண்ணிலா இருவரும் நலம் விசாரித்துவிட்டு மாறன் வீட்டில் அனைவரும் கிளம்பினார்கள்.


செங்கல்ப்பட்டு அரசு மேனிலைப்பள்ளி:

துப்பக்கிக்காரனின் கைபேசி அழைத்தது. கக்கன், கட்டளைத்தளபதி பேசியது. கைபேசி உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டது. வணக்கம் தம்பி. நல்லா இருக்கீங்களா? நல்லா பாத்துக்கிட்டங்களா பசங்க? நம்ப பசங்க தான்... ஒன்னும் செய்ய வேண்டாமுன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். நடிப்பு வேலைய விட்டுட்டு வேற ஏதோ செய்றதா கேள்விப்பட்டேன்... அதேன்... செங்கல்ப்பட்டில் காபி சாபிட்டுட்டு போவீங்கன்னு இறக்க சொல்லியிருந்தேன்.... காபி சாப்பிட்டாச்சா? உதயகுமாரின் கை லேசாக நடுங்கியது. ஒன்னும் பிரச்சினை இல்ல... அந்த துப்பாகித்தம்பி ஒரு கடுதாசி குடுப்பாப்பில... அதுல இருப்பது போல கூட்டத்துல பேசுங்க....எல்லாம் சரியாகிவிடும்.

உதயகுமாருடன் சென்னையிலிருந்த வந்த காவலர்கள் அங்கேயே விடப்பட்டு கக்கனின் ஆட்களுடன் விருத்தாச்சலம் புறப்பட்டது உலங்கூர்தி. கூட்டம் அலைமோதியது. என் இனிய தமிழ் மக்களே... எல்லோருக்கும் சோதனை காலம் வரும், போகும். நமக்கும் வரும்... அது பனிபோல விலகிவிடும். உளறினான். பின், பேசினான்... இல்லை படித்தான். தனித்தமிழகம் என்பது நம் இனத்தின் விடுதலை., இது தெரியாமல் நம்மிடம் இந்தியா விளையாடுகிறது. நான் பேட்டி கொடுத்தது ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான் என்பது என்னை சுற்றி நெருங்கி இருக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்... துப்பாக்கிமுனையில் என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டித்தான் இந்தியா என்னை அந்த பேட்டி கொடுக்கச்சொன்னது., நானும் வேறு வழி இல்லாமல் பேசிவிட்டேன். நீங்கள் போட்ட பிச்சைதான் என் வாழ்க்கை, நான் உங்களுக்கு துரோகம் செய்வேனா? நீங்கள் என் படம் பார்த்து என்னை ரசித்தற்க்காக நான் கடன்பட்டுள்ளேன், மும்பையிலிருந்து வந்த என்னை உயரே உட்கார வைத்து அழகு பார்த்தவர்கள் தமிழர்கள், உங்களுக்கு நல்லது என்றால் நான் துணை நிற்ப்பேனே தவிர எதிர்ப்பேனா?

எனவே, என் ரசிக சிங்கங்களே...உங்களால் முடிந்த அளவுக்கு தலைவர் வெற்றி மாறனுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கேட்கவே நான் இந்த கூட்டத்திற்கு வந்தேன். மேலும் அறிவித்தபடி அனைத்து கூட்டங்களிலும் நான் வெற்றிமாறனுக்கு ஆதரவாக பேச முடிவுசெய்துள்ளேன். மீண்டும் நாம் மதுரை கூடத்தில் சந்திப்போம்.

தொடர்வோம்....