Monday, February 14, 2011

கடவுள் இல்லை என்று சொல்லி என் சுவடுகளை குப்பைதொட்டியில் போட்டவர்கள்......

திராவிட..... பார்பனிய எதிர்ப்பு... கடவுள் இல்லை... கூற்றுகளில் எப்பொழுதும் பாதிக்கபடுவது தமிழர்கள் மட்டுமே. சுமார் 60 ஆண்டுகளாக, ஒரே ஒரு மேல்நோக்கு நாமத்தை கருப்பு சட்டை மாட்ட வைத்திருப்பீர்களா என்றால் இல்லை தான். மாறிய அனைவரும் என் இன தமிழன். உங்கள் பின்னாலே வந்து வந்து திராவிடனாக மாற்றினீர்கள், தமிழன் என்று சொன்னால் சிறை. ஆரியர்களை வந்தேறி என்றால் உங்கள் திராவிட இயக்கத் தலைவர்கள் அத்தனை பெரும் தமிழர் அல்லாதவர்கள், வந்தேறி கூட்டம்.. கன்னடன், மலையாளி, தெலுங்கன் அல்லாத வேறு யாரும் இல்லை. நீ இந்து, ஆரியன் உன் எதிரி என்று முறையிட்ட உங்களுக்கு நீ தமிழன் என்றோ, நான் ஆந்திராவில் இருந்து பிழைக்க வந்தவன், என் இனம் நாயக்கர், என்று ஏன் சொல்லிக்கொள்ளவில்லை. முடியாது, உங்களுக்கு நாம் எல்லோரும் என்று சொல்ல ஒரு போர்வை வேணும், அதற்காக நீங்கள் எடுத்துகொண்டதுதான் ""திராவிடன்"" என்ற இல்லாத இனம்.

தமிழன் முதலில் காவல் தெய்வங்களையும், பின்னாளில் சைவத்தையும் கடைபிடித்தவர்கள் என சுமார் 2000 ஆண்டு கால சுவடுகள் சொல்கிறது. அது என் நண்பிக்கை சார்ந்த விஷயம், இங்கே கடவுள் இல்லை என்று சொல்லவும், அதை அவமதிக்கவும் ஒரு கூட்டம், இதுவரை இருந்த எந்த ஒரு திராவிடக்கட்சி தலைவனும் தமிழன் என்றோ தமிழனின் அடையாளங்களை பற்றியோ துளி அக்கறை கூட இருந்ததில்லை.. கூட்டங்களில் கருப்பசாமி கும்பிடுவனையும், அய்யனாரை கும்பிடுவனையும் நக்கல் நையாண்டி செய்ய தைரியம் இருந்த இவர்களுக்கு முஸ்லிமை பற்றி பேசுவதற்கு கூட பயந்த கோழைகள், பெண்கள் மசூதிக்குள் நுழைய ஒரே ஒரு போராட்டம் கண்டீர்களா... யாரை பற்றியும் பேசுவதற்கு தகுதி இல்லாத கூட்டம்.

2000 ஆண்டு கால எங்கள் சமூகத்தில் , எங்கேயும் கீழ் சாதிக்காரர்கள் என்றும் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்ககூடாது என்றோ ஒரு எழுத்தும் இல்லை. முதலில் வைணவர்கள் இந்த கூத்தை ஆரம்பித்தவர்கள், யார் வைணவர்கள் என்று உற்று நோக்கினால்... பெரியாருக்கு முன் வந்த வந்தேறிகள்.. 11 ம் நூற்றாண்டிற்கு பின் வந்தவர்கள், ராஜராஜசோழனுக்கு பின் வந்த கோடரிகள். இவர்களின் ஈன பிறப்பு தமிழ் மண்ணுக்கு சொந்தமில்லை.
அடுத்தவனை வந்தேறி என கூறுவதற்கு முன் தாங்கள் யாரென்று பார்க்கவும், அயோத்தி, ராமர் என்று பேசி தமிழனை பிரிக்க முயல வேண்டாம், அதுதானே வேண்டும், ராமர் கூட்டம் சொல்வது சரிஎன்று சிலரையும், இல்லை என்று சிலரையும் பிரிக்கணும். இங்கே குட்டை குழம்பிகிடக்கையில் லாப மீன்களை அள்ளிக்கொள்ளவேண்டும், ஓட்டுகளை வாரவேண்டும்.

அய்யனாரும், கருப்பசாமியும், சைவ சித்தாந்தமும் என் தமிழின் அடையாளங்கள். சுவடுகள். இதில் கடவுள் இல்லை என்று சொல்லி என் சுவடுகளை குப்பைதொட்டியில் போட்டவர்கள் நீங்கள். கடவுளை பாடியதற்காக மாணிக்கவாசகரை கொன்றுவிடலாமா, கொன்ற கூட்டம்தானே இவர்கள். பெரியபுராணம், திருவாசகத்தை விட உங்கள் கருத்துகளுக்கு செவிமடுப்போமா.

நாங்கள் தமிழர்கள், இறை நன்பிக்கை கொண்டவர்கள். ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்பவர்கள். வள்ளுவன் இறைவனை நம்பியவன், தலைவர் பிரபாகரனும் கடவுளை நம்புகிறவர் அதனால் உங்கள் போதனைகளை மூட்டைபோட்டுகொண்டு இல்லாத திராவிட நாட்டிற்கோ அல்லது இருக்கின்ற ஆந்திராவிற்க்கோ கிளம்புங்கள். எங்கள் வாழ்க்கைமுறையில் இருக்கும் குறைபாடுகளை களைந்துகொள்ளும் பக்குவம் எங்களுக்கு நிறையவே இருக்கிறது. அதனால், சூத்திரன், அய்யன், பூணூல் என்று சொல்லிக்கொண்டு வயிறு வளர்க்க வேறிடம் பார்த்துகொள்ளுங்கள்
அன்புடன்,


மாசிலான்

No comments: