Wednesday, October 28, 2009

மன்னுமோகன் சிங்கு: 23 ம் புலிகேசி புலிகேசி....

மன்னுமோகன் சிங்கு: 23 ம் புலிகேசி புலிகேசி
அந்தோணி: மங்குனி அமைச்சர்
வல்லவராயன்: Wen Jiabao Chineesh Premier (இங்கே சீனன் என எடுத்துக்கொள்வோம்)
இடம்: அருணாச்சலபிரதேசம்
காவலாளி: ப. சிதம்பரம்

ப. சி: அரசே.. அரசே.. சீனன் வந்துகொண்டிருக்கிறான்..

மண்ணு: ச்.... இப்போ ஒன்னும் பிசினஸ் இல்லைன்னு சொல்லப்பா.
கடன்காரன். என்ன அவசரம். அவங்க ஊர் காரெல்லாம் கொஞ்சநாள் கழிச்சு உள்ளூருக்குள்ள விடுரோம்முனு சொல்லு. அப்பறம் டாட்டா சண்டைக்கு வருவான்.

ப.சி: அரசே... (வியப்புடன்....)

மண்ணு: என்ன...........(கோபத்துடன்)

ப.சி.: சீனன் படையெடுத்து வந்துள்ளான். வியாபாரத்திற்கு அல்ல.

மண்ணு: யோவ்.. என்னையா பண்ணீங்க... இந்த பேப்பர்காரங்க வேற சும்மா இல்லாம... அவிங்கள வெருப்பெத்துறது மாதிரியே எழுதுறாங்க...யோவ் மங்குனி... இப்ப என்னையா செய்யுறது....

அந்தோனி: அப்புறம் என்ன அரசே... சும்மா இருக்கணும். எதோ பாகிஸ்தான்காரன் நீங்க மெரட்டுறது, உருட்டுரதுக்கெல்லாம் பயந்துகிட்டிருந்தான். செவப்புகொடிக்காரன் அப்படியா.. சும்மா இல்லாம சோனியா பொம்பள சொல்றத கேட்டுகிட்டு புலிகளை கொன்னுபூட்டிங்க. ராஜபட்சே சும்மாவே ஆடுவான். இப்ப புலிவேற இல்லை. அங்க ஒக்காந்துக்கிட்டுதான் நம்பல ஒதைக்கப்போறான்.

மண்ணு: யோவ் நானே பயந்துகிட்டு இருக்கேன்... நீவேற புலி கிலின்னுக்கிட்டு.. இப்ப என்னையா பண்ணுறது

அந்தோனி: ம்க்கும்... அரசே ஒரு யோசனை

மண்ணு: சொல்லுயா....

அந்தோனி: பேசாமே யாருக்கும் தெரியாமல் பீஜிங் போய் அந்தாளு காலுல விழுந்தரலாம்

மண்ணு: அதுவும் முடியாதுய்யா... பாகிஸ்தான்காரன் அங்க
போய் குத்தவச்சுக்கிட்டு இருக்கான்யா

அந்தோனி: குத்தவச்சுக்கிட்டு இல்லை அரசே.. பத்தவச்சுக்கிட்டுனு சொல்லுங்க..

மண்ணு: இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை. நல்லா எதுகை மோனையோடு பேசு.

அந்தோனி: அரசே.... பேசாம அருனச்சலபிரதேசத்தை அவன்னுகே குடுத்தரலாம். நமக்கென்ன இது புதுசா.. கச்சதீவை குடுத்துபுட்டு.. இலங்கை.. அரசியல்.. ராஜதந்திரமுன்னு கதவிடலையா..

மண்ணு: யோவ் அது சாம்பார்க்காரன் இடம்யா.. சோத்த தின்னுபுட்டு சொல்றதை கேட்டுக்கிட்டு.. பேசாம ரஜினி சார் படம்பாத்துகிட்டு இருப்பான். இது அப்படியா போறவன் வரவனெல்லாம் கேள்வி கேட்பான்யா... மொத இந்த அத்துவானிக்கு பதில்சொல்லமுடியாது.. பெரிய லார்டு மாதிரி பேசுவான். என்னமோ இந்தியான்னு ஒரே நாடா இருந்த மாதிரி.

அந்தோனி: அரசே.. ஒன்னு செய்வோம். புலிக்கு நாலு துப்பாக்கிய குடுத்து சண்ட போடசொல்வோம். ராஜபக்சே பீஜிங் போவான், அந்த கேப்ப்ல கடாவெட்டிரலாம்.

மண்ணு: என்னையா பேசுற. பிரபாவே இல்லையாம். யாருகிட்டபோய் துப்பாக்கி குடுப்ப.

அந்தோனி: இல்லை அரசே. இல்லை..... பிரபாவெல்லாம் இந்த மொட்ட சிங்களபசங்க போட்டுதள்ளமுடியாது. அந்தாளு உயிரோட இருக்காரு...... (ரகசியமாக....)

மண்ணு: யோவ். நீதான கொழும்பு போய் மரணசான்றிதல் வாங்கிவந்தாய். இப்ப என்னையா புழுவுற.

அந்தோனி: நீங்க நம்பமாட்டிங்க. எதுக்கும் அந்தப்பெரியவர் நெடுமாரன்கிட்ட கேளுங்க.

மண்ணு: சரி. அவருகிட்ட பேசிட்டு சொல்லு.

அந்தோனி: அரசே... (தலையை சொறிந்துகொண்டே) நான் பேசினேன்.. ஆனா நம்பமாட்டேன்கிறார். என்ன அரசே செய்யலாம்.....

மண்ணு: சரி விடு. நம்ப தளபதிகளை கூப்பிட்டு போருக்கு தயாராகச்சொல்.....

அந்தோனி: அதுல ஒரு சிக்கல்..... நம்ப முப்படைத்தளபதி.. அதான் அந்த அம்மா.... ஏதோ சுற்றுலா போயிருக்காம். கையெழுத்து வாங்கணும்...

மண்ணு: என்னையா நீங்க.... பண்ணுறீங்க. வடிவேலு பெயிண்ட் அடிக்க வேலை எடுத்த கதையால்ல இருக்கு. போர்யா... ஒங்கள கட்டிக்கிட்டு மாரடிச்ச பொழப்பால இருக்கு.

அந்தோனி: சற்றுமுன் கிடைத்த செய்தி. நம்ம போபர்ஸ் பீரங்கிப்படையை காணமாம்.

மண்ணு: யோவ். என்னையா சொல்ற... (அழுகிற குரலில்...) நான் என்னையா பாவம் பண்ணேன்..பீரங்கிப்படை காணாமப்போச்சா... அது என்ன ஆடா மாடா காணாமப்போக... இப்படி தொலச்சுப்போட்டு வந்து நின்னா என்னையா அர்த்தம்.

அந்தோனி: அரசே... சீனர்களின் படை இலங்கை வந்துவிட்டதாம். அங்கிருந்து வடமுனையில் போர்தொடுக்க வியுகம் அமைத்துள்ளார்கலாம்.

மண்ணு: என்னா.... இலங்கையிலிருந்தா....நான் அவிங்களுக்கு என்னென்னல்லாம் செய்தேன்.... துப்பாக்கி குடுத்து, வேட்டு கொடுத்து, விமானம் கொடுத்து..... அய்யயோ.... அம்மா....சாமி.... நான் என்ன பாவம் பண்ணினேனைய்யா..... எல்லாம் செஞ்சு அந்தப்பயலுக்கு எங்க சுடனும், எப்படி சுடனுமுன்னு கூட தெரியாது.... அதையும் சொல்லிக்குடுத்தேன்.... எல்லாம் சொல்லிக்குடுத்த எனக்கே அவன் நல்லா பாடம் சொல்லிகுடுத்துட்டண்டா.............நல்லா பாடம் சொல்லிகுடுத்துட்டண்டா............. இப்ப யாருக்கிட்ட போய் சொல்வேன்.. அமெரிக்காகிட்ட சொன்னா, அவன் கண்ட காகிதத்தில கையெழுத்து கேட்ப்பானே....

எங்கயோ ஒரு தமிழனின் ஒலி மண்ணுக்கு கேட்கிறது: ம்....மாட்டிகிட்டயா.... நல்லா மாட்டிக்கிட்டயா மன்னாரு.....

அன்புடன்,

இரா. த. ஜெயக்குமார்

தீபாவளி கூத்து

ஒருவழியாக இந்த தீபாவளி கூத்து முடிந்துவிட்டது. வாழ்த்துக்கள் அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
தைப்பொங்கல், கபடி, கரகாட்டம், வில்லுப்பாட்டு, வெள்ளைவேட்டி, குலதெய்வம் கோயில் - இவை எல்லாத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. தமிழனின் அடையாளங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதெல்லாவற்றையும் விட, இதெல்லாம் நாகரீகமற்ற செயல் அல்லது கௌவ்ரமல்லாத செயல். கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.

தைப்பொங்கல்:
கரும்பு சுமந்து, வாசலில் கோலமிட்டு, தெருவில் பொங்கல் வைத்து, குலதெய்வத்திற்கு படைத்து... அட.. அதெல்லாம் யாருங்க இந்தக்காலத்துல செய்யுறா .. பேசாம பொங்கல் வச்சு தாரேன்.. சாப்பிட்டு டி.வில விஜயகாந்த் படம் போடுவாங்க பாருங்கன்றேன்.. வயசான காலத்துல.... இதுதான் நம் வீட்டில் நடக்குற எதார்த்தம்.

கபடி: ஏதாவது மொரட்டுத்தனமா வெளாண்டு.. கையக்கால ஒடச்சிக்கிடாத. ஏண்டா நம்ப பக்கத்துவீட்டு நாயக்கர் மகனெல்லாம் ஏதோ கிரிக்கெட்டுன்னு வேலையாடுராண்டா, நீ ஏன்டா கபடி கபடின்னு ஆடுற.

கரகாட்டம், வில்லுப்பாட்டு: டேய்.. மாரியம்மன் கோயில் திருழா வருது, ராத்திரில போய் கள்ளகுடிச்சுபுட்டு, கரகாட்டம் பாக்க போயிராதடா. அவிங்க என்னடா பேசிக்கிறாங்க அசிங்க அசிங்கமா, அரைப்பாவடை போட்டுக்கிட்டு ஆடுறதும், கொஞ்சம்கூட நாகரீகமா இல்லைடா. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. (அப்படின்னா பார்ல போய் பீரகுடிச்சிட்டு, கேபரே டான்ஸ் பாக்கலாமான்னு.. இந்த நாகரீகத்தை ஒத்துக்குவீங்களான்னு...மகன் மனசுக்குள்ளயே சொல்வது அந்த அம்மாவுக்கு கேக்குதோ என்னமோ..)

வெள்ளைவேட்டி: ஏங்க.. எங்கசொந்தக்காரங்கல்லாம் வராங்க.. ஒழுங்கா.. பேன்ட், சட்டை போட்டுக்கிட்டு வாங்க. வேட்டிகட்டிகிட்டு வரதா இருந்தா.. நீங்க வரவே வேண்டாம். அவருக்கு ஒடம்பு சரியில்லைனு நான் சாக்கு சொல்லிக்கிறேன்.

குலதெய்வம் கோயில்: இந்தவருசம் எப்படியாது சபரிமலைக்கு போய் நேந்துகிரனும். அப்பா... நம்ப கொலசாமி கோயில்.. அட அங்க போனா என் பங்காளிக கூட மல்லுகட்டிக்கிட்டுதானப்பா வரணும்.. அதேன் அந்தப்பக்கம் காலே வைக்கிறது இல்லை. (குறிப்பு: குலதெய்வ வழிபாடுகள் நம் தமிழர் கடைப்படிக்கும் முக்கிய வழக்கம், ஆனால் நாளைடைவில், அங்கே பூணூலும், கற்பக விநாயகர் சந்நிதியும், அய்யங்கார் (அய்யர் அல்ல, பார்ப்பான் அல்ல, நாமம் போட்ட (வினைத்தொகை)-நாமம் போட்ட, போட்டுகொண்டிருக்கிற, போடப்போகிற-எல்லாக்காலங்களிலும்) பூஜையும் நிறைய புகுந்துவிட்டன. இதில் சாதிப்பாகுபாடே கிடையாது. பார்ப்பனன் என்னை அமுக்கிவிட்டான் எனகுறைப்பட்டுக்கொள்ளும் பள்ளர், பறையர், நாடர், ஆசாரி, தேவர், அகமுடையார் என யாரும் விதிவிலக்கல்ல. எனென்றால் நமக்கு குலதெய்வ வழிபாடு ஒரு கௌவ்ர குறைச்சலாக போய்விட்டது.

சொல்வதெல்லாம் உண்மைதான், இல்லைஎன்று சொல்லவில்லை. நாம் காலங்காலமாக பழகிவிட்டோம் என்பதுதான் கடைசியில் கூறும் பதில்.
ஏற்றுக்கொள்கிறோம். ஏன் மாறக்கூடாது. தமிழ் அடையாளங்களை தேர்ந்தெடுத்து அளிக்கும் ஒரு கூட்டம் செய்கிற வேலைதான். இதை செய்வது பார்ப்பானை விட விசமான கூட்டம்தான் """போர்வைத்தமிழர்கள்"". நாங்களும் தமிழர்கள்தான் எனக்கூறிக்கொள்ளும் வந்தேறிகள். தமிழன் யார் என்பதற்கு தராசு சாதியாக மட்டுமே இருக்கமுடியும். ஆம். சாதித்தமிழன் மட்டுமே தமிழன்.

அன்புடன்,

இரா.த. ஜெயக்குமார்

Sunday, February 22, 2009

...........ஆனால் உங்களுக்கென்று ஒரு நாடு உண்டா?


சுவர்களுடன் பேசும் மனிதர்

- அ.முத்துலிங்கம்


கனடாவிற்கு வந்து ஏற்பட்ட பிரச்சினைகளுள் ஒன்று தலைமுடி வெட்டுவது. நான் வசித்த வீட்டிலிருந்து தலைமுடி திருத்துமிடம் நாலே நிமிட தூரத்தில் இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக மாதம் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் ஓர் இத்தாலியர், பெயர் ரோனி. அவரும் இரண்டு மூன்று உதவியாளர்களும் அங்கே வேலை செய்தார்கள்.

ரோனி நட்பானவர். அவருடைய முடி அலங்கோலமாக சிதறுண்டு போயிருக்கும். நான் அவருக்குச் சொல்வேன், ‘என்ன உங்களுடைய முடியே இப்படித் தாறுமாறாக இருக்கிறது. உங்கள் வாடிக்கைக்காரர்கள் இதைப் பார்த்து வராமல் போய்விடுவார்கள்.’ அவர் சொல்வார், ‘என்ன செய்வது. என்னைப் போல ஒரு நல்ல முடிதிருத்துபவர் கிடைத்தால் உடனே தலையைக் கொடுத்துவிடுவேன். இங்கே எல்லோருமே மோசம். அதுதான் முடி வெட்டுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.’

நானும் ரோனியைப் போல அவருடைய உதவியாளர்களிடம் தலையைத் தரமாட்டேன். வரிசையில் உட்கார்ந்திருக்கும் வாடிக்கைக்காரர்களுடன் என் முறைக்காகக் காத்திருப்பேன். ரோனியிலே எனக்குப் பிடித்தது அவசரமின்மை. நிதானமாக தொழில் சுத்தமாக வேலையை முடிப்பார். எப்படி வெட்டவேண்டும் என்று கேட்கமாட்டார். என்ன சைஸ் கிளிப் என்று கேட்கமாட்டார். பிடரியில் நேர் வெட்டா அல்லது குறைவெட்டா என்றெல்லாம் கேட்கமாட்டார். ஒவ்வொரு வாடிக்கைக்காரருக்கும் அவரிடம் குறிப்பு உண்டு. தையல்காரரிடம் இருப்பதுபோல, மருத்துவரிடம் இருப்பதுபோல. அதைப் பார்த்து தன் வேலையைச் செம்மையாக முடித்துவைப்பார்.

அவரிடம் எனக்குப் பிடிக்காத ஓர் அம்சமும் இருந்தது. ரோனி விளையாட்டுப் பிரியர். அவர் தலைமுடி வெட்டும் போது முதல் நாள் நடந்த ஐஸ் ஹொக்கி பற்றி அல்லது கூடைப்பந்து பற்றி அல்லது பேஸ் போல் பற்றி ஓயாது பேசுவார். விளையாட்டைப் பற்றித் தெரியாது என்று சொன்னால் கனடாவில் ஒரு புழுவைப் பார்ப்பதுபோலப் பார்ப்பார்கள். ஆகவே முதல் நாள் நான் அதற்குத் தயாரிக்கவேண்டும். தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்த்து முக்கியமான குறிப்புகளை எடுத்து வைத்துக் கொள்வேன். அடுத்த நாள் முடிதிருத்தும்போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைச் சொல்லி அவரை மகிழ்விப்பேன். அன்று முடிவெட்டு உத்தமமாக அமையும்.

ஆனால் எத்தனை வருடங்கள் தான் இந்த நாடகத்தை ஆடமுடியும். எனக்கும் அலுப்பு பிடித்தது. நான் வேறு இடத்தில் முடிவெட்ட ஆரம்பித்தேன். அது 20 நிமிட தூரத்தில் இருந்த பெரிய நிலையம். பெண்கள் பகுதி தனியாக இயங்கியது. ஆட்கள் வருவதும் போவதுமாக ஒரே கலகலப்பு. நான் வாயே திறக்காத ஒரு வேலைக்காரரிடம் போகலாம் என்ற முடிவில் இருந்தேன். என்னுடைய முறை வந்தபோது, புதன்கிழமை என்ற வாசகம் எழுதிய தடித்த உடையை, வியாழக்கிழமை அணிந்திருந்த ஐம்பது வயதுக்காரர் ஒருவர் என் முடியை வெட்டத் தயாராயிருப்பதாகச் சொன்னார். ஒருநாள் பிந்திய ஆள் என்றாலும் அவர் தலையை சரித்து புன்னகைத்த விதம் எனக்குப் பிடித்துக்கொண்டது.

அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. கருமமே கண்ணாகி அவர் முடியை வெட்டி முடித்ததும் கண்ணாடியில் பார்த்தால் அது வெகு நேர்த்தியாக இருந்தது. ஒரு கலைஞனின் வேலை என்பதில் சந்தேகமே இல்லை. அவருடைய கைகள் வண்ணத்துப்பூச்சி போலத் துரிதமாக இயங்கின. தலையிலே ஆடிக்கொண்டிருக்கும் ஆயிரம் முடிகளில் ஒரு மயிரை மட்டும் அவர் கத்தரிக்கோல் தேடி லாவகமாக வெட்டும். அவ்வளவு நுட்பமான கலைஞன்.

அடுத்த முறையும் அவர்தான் வெட்டினார். அதற்கு அடுத்தமுறை சென்றபோது அவருக்காகக் காத்திருந்து அவர் முடிவெட்ட ஆரம்பித்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அவரைப் பார்த்தால் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர் போலத் தோற்றமளித்தார். கண்கள் பழுப்பு நிறத்திலும் முடி கறுப்பாகவும் இருந்தது. அவருடைய நடை உடை பாவனைகள் எல்லாம் வித்தியாசமாகவே தோன்றின. வாடிக்கைக்காரர்களிடம் பேசும்போது அவருடைய உச்சரிப்பு அரேபியர்களுடையதைப்போல இருந்ததையும் கவனித்தேன்.
அன்று பெண்கள் பகுதியில் இருந்து மிக நாகரிகமாக உடையணிந்திருந்த ஒரு பெண் இவரிடம் வந்தாள். கறுப்புக் காலணியும் சிவப்புக் கையுறையுமாக பார்த்தவுடனேயே அவள் அரேபியப் பெண் என்று சொல்லிவிடலாம். வயது முப்பதுக்குள்தான் இருக்கும். அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவள் போல ஒருகையை இடுப்பில் வைத்து சாய்ந்து நின்றாள். ஏதோ அரபு போன்ற மொழியில் அவரிடம் வேகமாகப் பேச அந்த மனிதர் ஒரு வார்த்தையில் ஏதோ சொன்னார். அந்தப் பெண் மீண்டும் சங்கிலித் தொடர்போல நிற்காமல் பேசினாள். இவர் மறுபடியும் சுருக்கமாக பதில் கூறினார். அவள் தொடர்ந்து ஏதோ கேட்க ‘உனக்குக் கேட்கவில்லையா. எனக்கு அரபு மொழி தெரியாது’ என்று உரத்து ஆங்கிலத்தில் சொன்னார். ஒரு குதிரை பக்கவாட்டில் நகர்வது போல அவள் நகர்ந்து சற்று எரிச்சலாகவே அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
எல்லோரும் இவரையே பார்த்தார்கள். இவர் ஒருவிதப் பதற்றமும் இன்றி முன்புபோல அமைதியாக என் முடியை வெட்டிக்கொண்டிருந்தார். நான் முதன்முதலாக இவரிடம் பேச்சுக் கொடுத்தேன். இவர் ஈராக்கில் இருந்து போருக்கு முன்னர் சதாம் காலத்தில் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர். அந்தப் பெண் தலைமுடியலங்காரம் செய்ய வந்திருக்கிறாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது. அவள் பேசும் அரபுவை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் கூறுமாறு கேட்டிருக்கிறாள். இவர் தனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார். ஈராக்கில் இருந்து புலம் பெயர்ந்த ஒருவருக்கு அரபு மொழி தெரியாது என்பதை அவள் நம்பவில்லை. அதுதான் கோபமாகச் செல்கிறாள்.

எனக்கு ஆச்சரியம். நான் வாழ்நாளில் சந்திக்கும் முதல் ஈராக்கியர் இவர்தான். ஆதி காவியமான கில்காமேஷ் இலக்கியம் பிறந்த நாடு என்று எனக்கு ஈராக்கில் மதிப்பு உண்டு. நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு சுமேரிய எழுத்தில் எழுதிய அந்தக் காவியம் இன்றும் களிமண் தட்டைகளில் அங்கே பாதுகாக்கப்படுகின்றன.
நான் அவரிடம் கேட்டேன். ‘எப்படி உங்களுக்கு அரபு மொழி தெரியாமல் போனது?’

நான் ஈராக்கில் பிறந்தாலும் அநேகமாக வெளிநாடுகளில்தான் வளர்ந்தேன். என்னுடைய தந்தையார் ஈரான், சிரியா போன்ற நாடுகளில் வேலைசெய்தார். நான் பொறியியல் படிப்பு படித்தவன். ஈராக்கில் தொடர்ந்து வாழமுடியாமல் தஞ்சம் கேட்டு கனடாவுக்கு வந்தோம். என் மகன் இப்போது வெளிநாட்டில் வேலை செய்கிறான். நான் இங்கே தனியாகத்தான் வாழ்கிறேன்.

பொறியியல் படித்துவிட்டு எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீர்கள்?
நான் மாத்திரமில்லை. என்னைப் போலப் பலபேர் இங்கே வந்து முற்றிலும் வேறு வேலை செய்கிறார்கள். ஆங்கிலத்தில் இன்னொருமுறை பொறியியல் படிக்க என்னால் முடியவில்லை. ஆனால் எனக்கு இந்த தொழிலில் ஒரு மோகம் என்று சொல்லலாம். மூன்று மாதப் பயிற்சியில் முடிவெட்டப் பழகிவிட்டேன். இதுவும் பொறியியல் போலத்தான். மிகப் பெரிய கலை. ஒவ்வொருநாளும் நான் வீட்டுக்குப் போகுமுன்னர் ஒரு புது விசயம் கற்றுக்கொண்டு போவேன்.
என்னால் நம்பமுடியவில்லை. இந்த மனிதரை அதிசயத்தோடு பார்த்தேன். இனிய புன்னகை மாறாமல் தொழிலில் கவனமாக இருந்தார். ‘நீங்கள் இன்னும் ஆரம்பக் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. நீங்கள் என்ன மொழி பேசுவீர்கள்?’ என்றேன்.

‘நான் படித்தது பாரசீக மொழி. அது தொழிலுக்காக. வீட்டு மொழி அராமிக்.’

‘அராமிக்கா? கேள்விப்பட்டதில்லையே.’

‘அப்படி ஒரு மொழி இருக்கிறது. என் மகனுக்கும் கொஞ்சம் தெரியும். என் மனைவியும் நானும் வீட்டிலே அதுதான் பேசுவோம். போன வருடம் என் மனைவி இறந்துவிட்டார். எனக்கு இங்கே என் மொழி பேசுவதற்கு ஒருவருமே இல்லை. கனடாவில் இந்த மொழி பேசுபவர்கள் சிலர் இருப்பதாகக் கேள்வி. ஆனால் அவர்களுடன் என்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.’

‘அராமிக் மொழி பேசும் நாடு என்று ஏதாவது உண்டா?’

‘அப்படி இருந்தால் அது பெரிய வரம் அல்லவா? நான் Syrian Othodox Churchஐச் சேர்ந்த கிறிஸ்தவன். சதாம் ஆட்சியில் நாங்கள்பட்ட கொடுமைகளைச் சொல்லி ஆற்ற இயலாது. உலகத்தில் இன்று ஒரு மில்லியன் மக்கள் அராமிக் மொழியைப் பேசுகிறார்கள். ஆனால் துயரம் என்னவென்றால் அவர்கள் ஓர் இடத்தில் இல்லை. அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. சிதறிப் போய் ஈரான், ஈராக், இஸ்ரேல், லெபனான், சிரியா போன்ற பல நாடுகளில் சிறு சிறு குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். உலகத்துக்கு முதன்முதலாக சட்டத்தொகுப்பை வழங்கியவன் 3700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எங்கள் மன்னன் ஹமுராபி. ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பதற்குத்தான் அவன் சட்டம் இயற்றினான். இன்று நாங்கள் ஒடுக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடு நாடாக அலைந்துகொண்டிருக்கிறோம்.’
‘கனடா நீங்கள் தேர்ந்தெடுத்த நாடுதானே. இங்கே உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டல்லவா?’

‘நண்பரே, இது சொர்க்கம். இதில் என்ன சந்தேகம். இங்கே வந்தபின் நான் நினைத்தேன் ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒவ்வொருவரும் ஒரேயொருநாள் என்றாலும் கனடாவில் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று. அப்பொழுதுதான் அவர்களுக்குச் சுதந்திரக் காற்று என்பது என்னவென்று தெரியவரும். நான் சொன்னது எங்கள் மொழியை. இன்று அது அழிந்துகொண்டு வருகிறது. எங்கே எங்கேயெல்லாம் எம்மக்கள் வாழ்கிறார்களோ அங்கேயெல்லாம் எங்கள் மொழி விழுங்கப்படுகிறது.

‘ஆபத்தில் இருக்கும் மொழி’ என்று எங்கள் மொழியை அறிவித்துவிட்டார்கள். இன்னும் சில வருடங்களில் அது அழிந்து போகக்கூடும்.’

‘அப்படி நிச்சயமாகச் சொல்ல முடியுமா?


‘அப்படித்தான் அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் இரவு நேரத்தில் என் வீட்டுக்கு வந்தால் நான் அராமிக் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். சுவர்களுடன் அராமிக்கில் பேசுவேன். பழக்கம் விட்டுப்போய் விடுமே என்ற பயம். நான் பேசும் ஒவ்வொரு நிமிடமும் என் மொழி வாழ்ந்துகொண்டிருக்கிறது.’
இப்பொழுது அவர் முடிவெட்டுவதை நிறுத்திவிட்டார். சற்று எட்ட நின்று தலையை இரண்டு பக்கமும் சரித்து என் முடியை உன்னிப்பாகக் கவனித்தார். பின்னர் முகத்தைப் பார்த்தார். திடீரென்று ‘ஷாம்பூ போடவா?’ என்றார். நான் சம்பாஷணை தொடரவேண்டும் என்பதில் ஆவலாயிருந்தேன். சரி என்று தலையாட்டினேன்.

‘நான் நிறைய பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடு, என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?’.

நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன். அங்கே எங்கள் மொழியை சிங்களம் விழுங்கிக்கொண்டிருக்கிறது.

உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய மொழி அல்லவா?

அது உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் முன்னராகவே செதுக்கிய தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் குகைகளில் கிடைக்கின்றன. இன்று உலகத்தில் பல நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.

எண்பது மில்லியனா? நம்பவே முடியவில்லை. எங்கள் மொழியிலும் பார்க்க 80 மடங்கு அதிகமான எண்ணிக்கை. அதிர்ஷ்டம் செய்த மொழி. ஆனால் உங்களுக்கென்று ஒரு நாடு உண்டா?

இல்லை.

உங்கள் மொழியில் தேசிய கீதம் உண்டா?

இல்லை.

அப்படியானால் உங்கள் மொழிக்கும், என் மொழிக்கும் பெரிய வித்தியாசமே இல்லை.

எப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியும்?

நீங்கள் வரலாற்றைப் படித்தால் தெரிந்துவிடும். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீப்ரு மொழியும், அராமிக் மொழியும் செழித்து வளர்ந்தன. இரண்டுக்குமே சமவயது. இரண்டிலுமே எழுதப்பட்ட செல்வங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் இரண்டு மொழிகளுமே நலிந்தன. 100 வருடங்களுக்கு முன் ஹீப்ரு மொழி எழுத்தில் மட்டுமே வாழ்ந்தது. பேசுவதற்கு ஓர் ஆன்மா இல்லை. இன்று ஐந்து மில்லியன் மக்கள் ஹீப்ரு பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். பழைய இலக்கியங்களும் புதிய இலக்கியங்களும் படிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நாடு உண்டு. அதன் பெயர் இஸ்ரேல். அவர்களுடைய மொழி இனி மேல் அழியவே அழியாது.

நாடு இல்லாமல் ஒரு மொழி வாழமுடியாது என்று சொல்கிறீர்களா?
நான் ஒரு தலைமுடி திருத்துபவன். மொழியியல் அறிஞன் அல்ல. எனக்கு என்ன தெரியும்? நாடு இல்லாமல்தானே என் மொழி சிதைந்தது. நாடு இருந்தபடியால் தானே இறந்து போன ஹீப்ரு மொழி மறுபடியும் உயிர்பெற்று நிலைத்து நிற்கிறது. உங்கள் மொழி - தமிழ் - நாடு இல்லாமல் வாழும் என்று நினைக்கிறீர்களா?

‘ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் மாநிலம் இருக்கிறதே.’
மாநிலம் வேறு. நாடு வேறு. இன்று உலகத்திலுள்ள ஒரு சின்னஞ் சிறிய நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் - மால்ட்டா. அங்கே 400,000 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய மொழி மால்ட்டீஷ். அந்த மொழி அழியுமா? அழியாது. ஒரு மைல்கல் எப்போதும் உண்மை பேசுவதுபோல நான் பேசுகிறேன். அவர்களுடைய மொழி அழிய வேண்டும் என்றால் முதலில் அந்த நாடு அழியவேண்டும். உங்கள் நாட்டுக்கு சமீபத்தில் இருக்கும் மாலை தீவு, அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடைய சனத்தொகை 350,000. அவர்களுடைய மொழி திவேஹி. அது அழியுமா? எப்படி அழியும்? 300,000 மக்கள் வாழும் நாடு ஐஸ்லாண்ட். அவர்களுடைய மொழி ஐஸ்லாண்டிக். அது அழியுமா? இல்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது. பத்து மில்லியன் மக்கள் ஒரு மொழியைப் பேசினாலும் அவர்களுக்கு ஒரு நாடு இல்லாவிட்டால் அந்த மொழி அழிந்துவிடும் என்று சொல்கிறீர்கள்?
ஷாம்பூ போட்டு முடிந்ததும் அவர் முடி உலர்த்தியால் தலைமுடியைச் சீவி உலர்த்திக்கொண்டிருந்தார். அவர் வாய் மட்டுமே பேசியது, ஆனால் கைகள் வேறுயாருடையவோ கைகள்போலத் துரிதமாக வேலை செய்தன.

அப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது. ஒரு மொழிக்குப் பாதுகாப்பு வேண்டும். ஒரு நாடுதான் அதைக் கொடுக்கமுடியும். உலகத்தில் 7000 மொழிகள் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். அவற்றிலே 2000 மொழிகள் அழிவில் இருக்கின்றன. மீதியில், ஒரு நாடு பாதுகாப்புக் கொடுக்கமுடியாத மொழிகள் எல்லாம் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி நகர்கின்றன. அனைத்து மொழிகளையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் அவற்றை சேமிக்கவேண்டும். ஆவணப்படமாகவும், ஒலி வடிவமாகவும் கணிமைத் தொழில்நுட்பத்தில் பாதுகாக்கலாம். ஒரு மொழி அழிவது என்பது ஓர் இனம் அழிவதற்கு, ஒரு கலாச்சாரம் அழிவதற்கு சமம். கீழே விழுந்த முடியை திரும்பவும் ஒட்டமுடியாது. மொழியும் அப்படித்தான். பூமியிலிருந்து ஒரேயடியாக மறைந்துவிடும்.

நான் பேசமுடியாமல் அவரையே பார்த்தேன்.

‘ஒரு மொழியின் எதிர்காலத்தை அதைப் பேசும் மக்களின் எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை. அது போல அதன் வளர்ச்சிக்கும் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. ஒரு சின்னப் பரிசோதனை. உங்கள் நாட்டு சிங்கள மொழியின் கடந்த 50 வருட கால வளர்ச்சியுடன் தமிழ் மொழியின் ஐம்பது வருட வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கே புரியும்.’

புதிய முடி அலங்காரத்தை நான் கண்ணாடியில் பார்த்தேன். திருப்தியாகவிருந்தது. காசாளரிடம் பணத்தைக் கட்டினேன். ஈராக்கிய நண்பரின் பெயரைக்கூட நான் அதுவரை தெரிந்திருக்கவில்லை. அது முக்கியமாகவும் படவில்லை.

எனக்குக் கவியின் வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.

நான் சாக்கடையில்
விழுந்து கிடக்கிறேன்.
என் கண்கள்
நட்சத்திரங்களில்.

நான் என் மொழி மீது வைத்த நம்பிக்கையைத் துறக்கத் தயாராகவில்லை.

அவர் என்னை மூடியிருந்த போர்வையைக் கையிலே விரித்துப் பிடித்தபடி ஒரு மாட்டுச் சண்டைக்காரர் போல நின்றார். தத்தம் மொழிகளை இழந்துகொண்டுவரும் இருவரையும் ஒரு போர்வை பிரித்தாலும் அவர் வேதனையும் இழப்பும் துயரமும் என்னுடையது போலவே இருந்தது. எப்படி இவரிடம் விடைபெறுவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவர் அந்தச் சமயத்தில் எதைச் சொல்லக் கூடாதோ அதைச் சொன்னேன்.

‘நண்பரே, அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒரு மொழியை நிறுத்த, தனிமனிதர் ஒன்றுமே செய்யமுடியாது. இன்றிரவு சுவருடன் உங்கள் உரையாடல் இனிமையாக அமையட்டும்.’

‘என்ன, அப்படிச் சொல்லி விட்டீர்கள். ஒரு மொழியை அழிய விட்டுவிடுவோமா? அது யேசு பேசிய மொழி அல்லவா?’

நான் திடுக்கிட்டேன். கடந்து போன பிறகும் முடிவெட்டு நிலையக் கதவுகள் நெடுநேரம் ஆடின.