Sunday, July 3, 2011

அடையாளம் வாரம் - 16

போர்கள்:

இனி வரும் நாட்களில் துப்பாக்கிகொண்டும், அணுகுண்டுகள் கொண்டும் ஏனைய நாடுகளுடன் போர் தொடுக்கும் வழக்கம் கிட்டதட்ட முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், மேற்க்குலகமும், இந்தியாவும், இந்தியத் துனை நாடுகளும் நம் தமிழ்க்குடியரசை அச்சுறுத்தப் பயன்படுத்தும் முறை கண்டிப்பாக உளவுப்போரும், பொருளாதரப்போருமாகவே இருக்கமுடியும். இந்த இருவகைப்போரையும் முறியடிக்கும் வகையில், தற்க்காப்பு  ஏற்ப்பாடுகளைத் துரிதப்படுத்த குடியரசு முனையவுள்ளது, எனவே, தமிழ்க்குடியரசு மக்கள் தயவுகூர்ந்து பொறுமையுடனும், நண்பிக்கையுடனும் புதுக்குடியரசுடன் ஒத்துழைக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உளவுப்போர்கள்:

இனி தமிழ் மக்கள் மிகவும் சிரமத்திற்க்கு உள்ளாவார்கள் எனவும், பசியும், பிணியும் தமிழ்மக்களை வாட்டும் எனவும், இந்திய உதவி நிறுத்தப்பட்டதால் தமிழ்க்குடியரசு வீழும் எனவும் மக்களின் மனதை பீதிக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று நோக்குகிறோம், இது உண்மைக்கு புறமான செய்திகள், இது போன்ற வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு வகையான போர் முறை, மக்களின் மனதை நோயுரச்செய்து, நாட்டினை சிக்கலுக்குள்ளாக்கும் திட்டம். இது மக்களை சிந்திக்கவிடாமல் செய்யும் போர்முறை. மக்களை திரைப்படம், கிரிக்கெட் விளையாட்டு, மதம் போன்றவற்றில் அடிமையாக்கி, அவர்களுடைய சொந்த பொருளாதாரம், வசதி, குடும்ப சிக்கல், கல்வி, தன் இனத்தின் அடையாளங்கள் போன்றவற்றை மறந்து போகச்செய்யும் வசியம். மது, மாது வகையும் அடங்கும். அதற்க்காக, மக்களை குடிக்கச்சொல்வார்கள் என்பது இல்லை, குடிப்பதற்க்குண்டான வாய்ப்பைக் கூடுதலாக்குவதும், குடிப்பிடங்களை வசீகரமாக்குவது, குடிக்கும் இடங்களில் அழகிய பெண்களை நடனமாடவிடுவதும், மாணவர்களையும், இளைஞர்களையும் பாதைமாற்றிவிடுவதுமே இதன் நோக்கம். இதற்க்கு ஊடகங்களே பெரிதும் துணைபுரிகின்றன.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப்படக் கதைகளும் அவ்வாறு களமாக்கப்படுகின்றன, எ.காடாக, தமிழ் கலாச்சாரங்களை கேவலமானதாக காண்பிப்பதும், வடவ, மேலைநாட்டு கலாசாரங்களை மேன்மையாக திரிபுசெய்து காண்பிப்பதும் மக்களின் மனதில் ஒரு மாயையை உருவாக்குகிறது. நகைச்சுவை நிகழ்ச்சிகளின்போதும் தமிழ் வார்த்தைகளை வேண்டுமென்றே தரக்குறைவாக பேசுவதும் திட்டமே ஆகும். திருவிழாக்காலங்களில் கரகம், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்சிசிகள் இன்றளவில் இல்லாமல் போனதும் இவ்வாறு திரிபுசெய்து காண்பித்ததன் விளைவே.

தமிழ் திருநாட்களை இருட்டடிப்பு செய்வதும், தீபாவளி, ஹோலி போன்ற வடவ திருநாட்களை பெரிதுபடுத்தி விளம்பரங்கள் செய்வதும் சாதாரன செய்கை போன்று காட்சியளித்தாலும் போர்வைத்தமிழ்த் தலைவர்கள் வேண்டுமென்றே நம் அடையாளங்களை ஆணிவேருடன் பிடுங்கியெறிய வேண்டுமென்ற வெறிகொண்ட எண்ணமே. பொதுமக்களுக்கு இதன் விளைவு உடணே புரியாவிட்டாலும் நாள்ப்பட தெளிவுபிறக்கும்போது விளங்குகிறது. எனவே, தொலைக்காட்சி நிகழ்சிகள், திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டபின்னரே பொதுமக்களின் காட்சிக்கு விடப்படும். செய்தித்தாட்களும் தணிக்கை செய்யப்படும். ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லும்போது, ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற ஐயம் உதிப்பது இயல்பே. எ.காட்டாக, 2008ம் ஆண்டில் தமிழ் ஈழத்தலைவர் இறந்துவிட்டார், இறந்துவிட்டார்... எனச் சொல்லிச்சொல்லியே ஈழமக்களை நம்பவைத்து போரின் போக்கை மாற்றியது இலங்கை அரசு. இரண்டாம் உலகப்போரில், ஹிட்லர் இங்கிலாந்தை நோக்கிதான் முதலில் படை அனுப்புவதாக இருந்தது, இங்கிலாந்து தேம்ஸ் ஆற்றில் ஏதோ ஒரு நச்சுப்பொருளை கலந்துள்ளதாகவும், நாசிப்படைகள் ஆற்றை கடக்கும் தருவாயில் அனைத்து வீரர்களையும் இழக்க நேறிடும் எனவும் ஒரு வந்ததியை திட்டமிட்டே  BBC வானொலி ஒலிபரப்பியது, ஹிட்லரும் படையனியை ரஷ்யாவை நோக்கி அனுப்பித் தோற்றார். வதந்தியை நம்பித்தான் ஹிட்லர் தோற்றார் என யாரும் சொல்லமுடியாது என்றாலும், படையயை திசைதிருப்ப மனரீதியான ஒரு பீதியை ஹிட்லரின் மனதில் எற்படுதியதே... அதுதான் உளவுப்போரின் வலிமை.

இந்தியா பெரிய நாடு அதன்முன் போட்டிபோட்டு வெல்லமுடியாது எனவும், பொருளாதார தடையை குடியரசின்மீது சுமத்தினால், தமிழ்க்குடியரசு மிக மோசமான நிலையை அடையும், தொழில்வளம் குறையும், வியாபாரம் மலியும், நிர்வாகம் சீர்குலையும் என்பது போன்ற வதந்திகளையும் எதிர்பார்க்கலாம். சிறிய நாடுகள் வெற்றிபெற முடியாது என்பது மூடத்தனமான பேச்சு, ஏனென்றால், சிங்கப்பூர் சென்னையைவிட சிறிய நகரம், ஆனால், சிங்கையின் பொருளாதாரம் இந்திய மதிப்பைவிட சுமார் ஐம்பது மடங்கு கூடுதல் என்பது இந்தியர்களுக்கே தெரியும். திறம்பட நிர்வாகமும், நேர்த்தியான வழிமுறைகளுமே ஒரு நாட்டின் வெற்றிப் படிக்கற்கள். எனவே நம்மால் முடியாது என்ற எண்ணத்தை மனதிலிருந்து நீக்குக. தமிழ்க்குடியரசின் ஒரு மாவட்டத்தைவிட சிறிய நாடுகளே வெற்றிப்பாதையில் பவனிவரும்போது, நம்மால் ஏன் முடியாது என கேட்டுப்பாருங்கள், வதந்திகள் வெளிப்படும், உண்மை புலப்படும்.

அதனால், தமிழ்குடியரசால் நீடித்து நிற்க முடியாது எனும் பொய்த்தோற்றத்தை உண்டாக்க இந்தியா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எற்பாடு செய்துள்ளன. அவ்வதந்தியை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

பொருளாதாரப்போர்கள்:

இந்தியா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதர தடையை திணிக்கும் நேரத்தில், குடியரசு எங்கனம் சமாளிக்கும் என்பதை எங்கள் அரசு இப்பொழுதே மக்களுக்கு எடுத்துரைக்கக் கடமைப்பட்டுள்ளோம். உண்மையைச்சொன்னால், பொருளாராதாரத்தடையின்மூலம் தமிழ்குடியரசின் உள் நாட்டுவியாபாரம் பெருகவே செய்யும் என்பது எங்கள் கருத்து. எனென்றால் தடையின் பெயரில் வளர்ந்த நாடுகள் தங்கள் உயரிய தொழில்நுட்பங்களையும், அறிவியல் பாகங்களையும், நம் மண்ணில் கிடைக்கா அரிய பொருட்களையும், யுரெனியம், நிலக்கறி போன்ற எரிபொருட்களைம், அந்தந்த நாடுகள் விற்காமல் நிறுத்திக்கொள்ளும். மேலும் நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கவும் தடை செய்து,  வெளிநாட்டு ஏற்றுமதியை தடைசெய்து, நம் பணவரவை குறைக்கும், இதுதான் பொருளாதாராத்தடையின் மேலோட்டமான அடிப்படை.

இதை உடைத்தெறிந்து, தற்க்காத்து நிலைகொள்வதே எங்கள் அரசின் சவால்.

No comments: