Wednesday, September 24, 2008

மகாகவி பாரதியாரின் 127 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை


தமிழ்மொழியைப் புகழில் ஏற்றிய கவியரசர் மகாகவி பாரதியார்
[நக்கீரன்]

மகாகவி பாரதியார் பற்றிய அருமை பெருமைகளைச் சொல்ல வேண்டும் என்றால் அவரது கவிதை வரியிலேயே சொல்லிவிடலாம். ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது வந்த மகாகவி.

பாரதியே தன்னையே புகழ்ந்து பாடியிருக்கிறார். ஆனால் அது தற்புகழச்சி இல்லை. உண்மை வார்த்தைகள். வேறு யாரிடமும் காணப்படாத கவிதா சக்தி தன்னிடம் இருப்பதை உணர்ந்து கொண்டு கவிதை படைத்தவர் பாரதியார்.
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசை யென்னாற் கழிந்த தன்றே!
பாரதியாரின் " உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை" என்பதற்கு அவரது கவிதைகள் அனைத்தும் சான்றாகத் திகழ்கின்றன..
�எனக்கு முன்னே பல சித்தர் பலர் இருந்தாரப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன்மணி யென் பராசக்தி வையத்தேவ..�
எனத் தன்னை ஒரு சித்தன் என்றே அறிமுகம் செய்கிறார்.

அறிவோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் புவியில் நீண்ட காலம் ஏன் வாழ்வதில்லை? என ஒருமுறை பாரதியிடம் கேள்வி கேட்ட போது அவர் சொன்ன மறுமொழி �அவர்கள் ஒரு காரியநிமித்தமாகப் பிறக்கிறார்கள். அந்தக் காரியம் முடிந்தவுடன் அவர்கள் மறைந்துவிடுகிறார்கள்� என்றார். மற்ற மனிதர்களைப் போல் தேடிச் சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்புமிக உழன்று நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் இரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே தான் வீழமாட்டேன் என்று சூளுரைத்தார்.
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ! (மகாகவி பாரதியார்)
சூளுரைத்தது போலவே மகாகவி பாரதியார் நரை, திரை, மூப்பு வருமுன் தனது 39 ஆவது அகவையில் தனது பூதவுடலை நீக்கி புகழுடம்பு எய்தினார். அவர் பிறந்த நாள் மார்கழி 11, 1882, மறைந்தது புரட்டாதி 11, 1921. இந்த 39 ஆண்டுகளில் தேச விடுதலை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தனியுடமை ஒழிப்பு, வேதாந்தம், சித்தாந்தம் இப்படி எல்லாப் பொருள்பற்றியும் பாடி முடித்தான். அவன் பாடாத பொருளே இல்லை.

வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, இராமகாதை பாடிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் போன்ற புலவர்களுக்குப் பின்னர் தனது பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை பாலித்தவர் கவிஞன் பாரதியார்.

ஏனைய தமிழ்ப் புலவர்களுக்கோ கவிகளுக்கோ இல்லாத தனிப் பெருமை பாரதியாருக்கு உண்டு. தமிழ்த் தேசியத்துக்கு கால்கோள் இட்ட முதல் கவிஞன் என்பதுதான் அந்தப் பெருமை! தமிழ்த் தாய்க்கு பாமாலை பாடி புகழ்மாலை சாத்தியவன். தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடிய முதல் கவிஞன்.

புதிய கற்பனை, புதிய அழகு, புதிய சுவை, புதிய வளம், புதிய சொல், புதிய பொருள்,புதிய உவமை இவற்றைக் கொண்டு நவகவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை புனைந்து தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவன். இசைத் தமிழுக்கு ஏற்றந் தந்த பாடலாசிரியர். காப்பியம் வடித்து செந்தமிழன்னையை அழகுபடுத்தியவன். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி.

மகாகவி பாரதியாரின் தமிழ்த் தாய் வாழ்த்து இன்று தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல கடல்கடந்தும் ஒலிக்கின்றன. வானலைகளில் எட்டுத் திக்கும் தன்மணம் வீசி இசை கொண்டு தவழ்ந்து வருகின்றன. பாரதி காரிகை கற்று கவிதை பாடிய கவிஞன் அல்ல. கற்களை அடுக்குவதுபோல சொற்களை அடுக்கி வித்தகம் செய்த புலவனும் அல்ல. மகாகவி பாரதியார் ஒரு பிறவிக் கவிஞர். தனது 12 ஆவது அகவையிலேயே கவிதை பாடி பாரதி என்ற பட்டத்தை எட்டயபுர சமஸ்தானப் புலவர்களிடம் இருந்து பெற்றவர். தமிழ்த் தாய் அவர் நாவில் நடனம் ஆடினாள். அவரது வார்த்தைகள் உண்மை வார்த்தைகளாக உருக்கொண்டு, உயிர்பெற்று ஒலித்தன.

வடமொழி "தேவபாஷை" தமிழ் மொழி "நீசபாஷை" என்று சொன்னவர்கள் முகத்தில் காறி உமிழந்து அவர்கள் தலைகுனியுமாறு ஊருக்கொரு உண்மை சொன்னான் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்றான்.

பாரதியாருக்கு தமிழைவிட வடமொழி, ஆங்கிலம், இந்தி, பிரன்சு மொழிகள் நன்றாகத் தெரிந்திருந்தன. எனவே தமிழ் மொழியின் இனிமை பற்றிய அவரது தீர்ப்பு அனுபவபூர்வமானது.
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடொன்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே! (செந்தமிழ்)
தௌளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டு அதன் மூலம் இங்கு அமரர் சிறப்புக் காணமுடியாதவர்களைப் "பேடிகள்" என்றும் "பேதைகள்" என்றும் ஆத்திரத்துடன் சபித்தவர் பாரதி.
வேறு வேறு பாசைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே -
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தமிழ்மொழியின் இனிமை அறியாமல் ஆங்கிலக் கல்வி முறையில் மோகம் கொண்டு அலைபவர்களைப் பார்த்து,
"நரிக்குணம் படைத்த இழி நெறியாளர்"
"நாயெனத் திரியும் ஒற்றர்கள்"
"வயிற்றுக்குச் சோறு தேடுவதையே பெரிதெனக் கொண்டு தம் உயிரை விலை கூறும் பேடியர்கள்"
என்றெல்லாம் கடுமையாகச் சாடினார்.
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி னின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே!
என்று பாரதி அன்று பாரதநாட்டுச் சுதந்திரத்தைப் பற்றிப் பாடியது இன்று எமக்கும் பொருத்தமாக இருக்கிறது.

மதவாதிகள் யோகம், யாகம், ஞானம் மோட்சத்தின் திறவுகோல் என்று சொன்னார்கள். பாரதியார் யோகம், யாகம், ஞானம் இவற்றி;ற்கு புதிய பொருள் சொன்னார். இந்தக் காலத்தில் பகுத்தறிவு பேசுவது எளிது. நூறாண்டுகளுக்கு முன்னர் பாரதி என்ற சித்தர் பாடினார்,
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர், அவர்சொலுஞ் சாத்திரம்
பேயுரையா மென்றிங் கூதடா சங்கம்!
மேலும் கேட்பார்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! - பல்
லாயிரம் வேதம் அறிவென்றே தெய்வமுண்டா மெனல் கேளீரோ?
சென்றதையிட்டு எப்போதும் சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்த குமையும் மூடரைப் பார்த்து பாரதி விழிப்பார்,
சென்றதினி மீளாது, மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
முமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளை யாடியின் புற் றிருந்து வாழ்வீர்,
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வரா!
சிவனும் சக்தியும் ஒன்று. சிவன் பாதி சக்தி பாதி என்று முழங்கி விட்டு அந்தச் சக்தி ஏட்டைத் தொடுவது தீமை என்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார், வீட்டுக்;குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்று பெண்ணுக்கு விடுதலை வேண்டியவர் பாரதி. மேலும்,

கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்... ஆதியில் இல்லாது பாதியில் ஆரியரின் இந்து சமயம் தமிழர் வாழ்வில் ஏற்றிய சாதி வேற்றுமை, வர்ணாச்சிரதர்மம் என்ற நஞ்சு இன்றும் தமிழ்நாட்டில் ஒழிந்தாபாடாயில்லை. சாதியின் பேரால் மனிதனும் மனிதனும் மோதிக் கொள்கிறான்.
சாதிகள் இல்லையடி பாப்பா ! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்,
நீதி உயர்ந்த மதி, கல்வி -அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்...
சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னில் தழைத்திடும் வையம் என்ற பாரதியின் அறிவுரை தமிழ்நாட்டில் பயன் இல்லாது போயிருப்பது. பத்தாயிரம் ஊர்களில் இரட்டைத் தம்ளர் முறை இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

எத்தனை பாரதிகள், எத்தனை பெரியார்கள், எத்தனை அண்ணாக்கள் எடுத்துச் சொன்னாலும் சாதிக் கொடுமையை முற்றாக இன்னும் ஒழிக்க முடியவில்லை. ஆரியமும் பார்ப்பனியமும் அந்தளவு தூரம் எமது சமூகத்தை இன்றும் ஆட்டிப்படைக்கிறது..

(மகாகவி பாரதியாரின் 127 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை)

Tuesday, September 23, 2008

ரஜினிக்கு கோடான கோடி நன்றிகள்

வணக்கம்

ரஜினிக்கு கோடான கோடி நன்றிகள். நேற்று தன் படம் கர்நாடகத்தில் திரையிடுவதற்காக மனதை திறந்து பேசிய ரஜினிக்கு நன்றிகள். எங்கே ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழர்களின் பக்கம் நிக்காமல், தனியாக பட்டினி கிடக்க போகிறார் என்றுதான் நினைத்தோம். வழகக்கதிற்கு மாறாக தமிழ் திரைபடத்துறையினருடன் இணைந்து வீராவேசம் பேசியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.

அவர் அன்று வீராவேசம் பேசாதுவிட்டிருந்தால், இன்று மண்ணிப்பு கேட்றிருக்கமாட்டார். தன் நிறம் தமிழ் மக்களுக்கு தெரிந்துபோயிருக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
இப்பொழுது மட்டும் ஒன்றும் கெட்டுவிடபோவதில்லை. அவருடைய தமிழ் தெய்வங்கள் (ஆமாம் நம்ம ஊர் ரஜினி ரசிகர்கள்) ஆரத்தி எடுக்காமல் விட்டுவிடபோவதில்லை. அவர் கட் அவுட்டுக்கு மாலை, அபிசேகம் செய்யாமல் விட்டுவிடபோவதில்லை. ரஜினி என்ற நரியும் போர்வை தமிழனாக தமிழ்நாட்டில் வலம் வந்து தமிழனை இன்னும் இழிவு செய்வான்.
அவனை தமிழ்நாட்டில் ஏனென்று கேட்பார்கூட இல்லை. எனென்றால் நாங்கள் வந்தோரையும் வந்தேரிகளையும் வாழவைப்பவர்கள்.

நாம் இத்தனை மானம் கெட்டவர்களா? கொஞ்சம் கூட வலிக்கவில்லையா? நம் தோல் இத்தனை கெட்டியாக மாற காரணம் என்ன? கொஞ்சம் கூட கோபம் வரவில்லையே? ஏன்?
நாம் இந்திய போர்வைக்குள் சுகமாக தூங்கிக்கிகொண்டிருகிறோம், அதற்க்காக இப்படியா இழுத்து போர்த்திக்கொண்டு தூங்குவது. கொஞ்சம் கிழித்துக்கொண்டு வெளியே எட்டிப்பாருங்கள் தெரியும் நம்மீது எத்தனை வந்தேறிகள், நன்றிகெட்ட நாய்கள், நரிகள், ஒட்டுண்னிகள், சாருண்ணிகள் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றனவென்று. நாய்களும், செருப்புகளும் வீட்டுக்கு வெளியே இருந்தால்தான் வீட்டில் வசிப்பவர்களுக்கும், வீட்டிற்க்கும் மதிப்பு. மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமல், பணமே பெரிது என்று நினைக்கும் யாரையும் கௌரவிக்கும் ஒரு சமூகம் கண்டிப்பாக வீழும். தன் மக்கள் யார், வந்தேறிகள் யாரென்று பிரித்தறிய தெரியாத சமூகம், தன் முகத்த இழந்து சீரழியும்.
தன்முகத்தில் ஒருவன் காறி துப்பிவிட்டுபோனாலும், கொஞ்சம்கூட கூசாமல் சிரித்துக்கொண்டே துடைத்துவிட்டு போகும் அளவுக்கு நாம் நல்லவர்கள். வாழ்க என் நாடு, வளர்க அதன் நன்மக்கள்.

நாடும் தன் மக்களும் நன்றாக இருக்க நினைக்கும் வெகுசில சமூக அக்கறைகொண்ட தூய தமிழர்களே, ரஜினியின் படங்களை தவிருங்கள். திரை அரங்கிற்கு சென்று அவன் படம் பார்பதை நிறுத்துங்கள். அவன் படம் சி.டி யில் வாங்கிப்பார்ப்பதை நிறுத்திவிட்டு திருட்டு சி.டி வாங்கிப்பார்த்து அவன் படங்களை நஷ்டம் ஆக்குங்கள். அவனை திரைத்துறையிலிருந்து தனிமைபடுத்துங்கள். அவனே ஓடிப்போய்விடுவான் கர்நாடகத்திற்கு.

அன்புடன்,

இரா. த. ஜெயக்குமார்