Monday, February 14, 2011

அடையாளம்‏ வாரம்-1

கி.பி. 2012 மற்றும் சில பின்நோக்கிய வரலாற்று படங்களை பார்த்துவிட்டு நாமும் கி.பி.2100 ல் தமிழகம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்ததில் சிறு கரு பிறந்தது. வானம் தொட்டு பார்ப்பதும், சிகரம் எட்டி தொடுவதும், கற்பனை தாண்டி சிந்திப்பதும் புதிய கண்டுபிடிப்பதின் காரணியாகவும், புதிய நாடுகள் பிறப்பதின் விதையாகவும் இருந்திருக்கமுடியும் என்பதில் ஐயம் ஒன்றும் இருக்கமுடியாது. இக்கதை விதையாகவோ, வேராகவோ இல்லாவிட்டாலும் கூட மண்ணின் விளிம்பில் ஒட்டியிருக்கும் உரத்தின் ஒரு துளியாக இருந்தாலே போதும் என நினைக்கிறேன். கதையின் களமாக கீழ் ஆசிய நாடுகள் வரை தலைநகரமாக இருந்த தஞ்சை மாநகரமும், கதை கருவாக தமிழகமும், தமிழ் மக்களும். கதையையும், நாட்டினையும் ஆட்சி செய்பவனாக வெற்றிமாறன்.

மஞ்சளும் சிவப்பும் கலந்த கதிரவன் எட்டிப்பார்க்கும் கதிரின்.... ஒரே ஒரு ஒளிக்கோடு கண்ணாடியை ஒடித்து நீட்டியது போல்...... ஓடிவந்து மலரின் முணையில் உட்கார்திருக்கும் பணிதிவலையின் மீது பட்டதில்...... மீள்கதிரை கண்டவுடன் கனாகண்ட குட்டிபூனை பதறி எழுவதைபோல் விழித்தான், அந்த மூன்றேமுக்கால் வயதுச்சிறுவன்....திடு திடென்று ஓடியவன் பட்டென விழுந்த "விடுதலை" செய்தித்தாளை வெகுண்டென பற்றி... தாத்தா.. உங்கள் செய்தித்தாள் என்று நீட்டினான். ஓடிய ஆறு சட்டென நின்றதுபோல்... நெஞ்சை விரித்து வாங்கினார் தொண்ணூறு வயதையும், நீண்ட கணவுகளையும் சுமந்துகொண்டிருந்த தாமரைக்கண்ணன்.

தி.பி.2139 ம் ஆண்டு சுறவம் மாதம் அறிவன் தினம் தலைப்பு செய்தியே சுட்டது.. தத்தா தேநீர் சுடுது... சீக்கிரம் வாங்குறீங்களா. அவருக்கு தேநீரைவிட செய்தி சுட்டது. ஒருமுறை தன்னை கிள்ளிபார்த்துகொண்டார். இவ்வளவு நாட்களா.. ஆண்டுகளா.. இருந்தாலும் சரி... என்று சகிக்காமல் சலித்துகொண்டார். தாத்தா... அம்மா கூபிட்றாங்க... குளிச்சிட்டு வருவீங்களாம். அப்பா சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க... இன்னிக்கி உங்க பொறந்தநாள். வெள்ளைவேட்டியும், வெள்ளை நரையுடனும் கொஞ்சம் கூட கூனாமல் குறுகாமல் 91 வயதை தொட்டிருந்த கிழட்டு வாத்தியார். என்னத்தையோ இறக்கி வைத்ததைப்போல் இளகினார்.. தான் வாழ்த்த தருணங்கள் போதுமென நினைக்கதூண்டியது.. ஓட்டபோட்டியில் தன் குச்சியை அடுத்தாமாவனுக்கு கொடுத்துவிட்டு இளைப்பாறுவானே.. எட்டிப்பார்த்த குட்டிவாழையை பார்த்தவுடன் விழிமிளிருமே கிழிந்த வாழைஇலை... அதிமிஞ்சிய ஒரு உணர்வு. ஆம்.. இனி மாணவன் பார்த்துக்கொள்வான் என்று சொல்லிக்கொண்டே சுடாத தேநீரை மருமகளை திட்டாமல் குடித்தார். குனவாளா.. கைத்தடியும், சாய்நாற்காலியும் வாங்கியாட.. வயசாகுதுள்ள.....

தஞ்சை மாநகரம்.

நந்தியார் காதில் ஒரு குட்டிச்சிறுவன் எதோ பேசிக்கொண்டிருந்தான். அவன் எந்த தாளில் மறுதேர்வு எழுதனுமோ... யாருக்கு தெரியும். கட்டி 5 ஆண்டுகள் ஆனாலும் அப்படியே பூரித்திருக்கும் "தஞ்சை ஆட்சி நகரம்" எப்பொழுதும் சாலை பரபரப்பாக இருக்கும் காலை எட்டுமணி.... சரேலென்று அழுத்தி இருக்கிபிடித்து சட்டென்று நின்றது அந்த மகிழுந்து.... 30 ம் தலைமுறை தொழிநுட்பம், 3 மணித்துளி நேரத்தில் 500 மைல் வேகமெடுக்கும், 16 .5 லிட்டர் 1235 குதிரைத்திறன் பலம் வாய்ந்த வாகனம், வள்ளுவன் வாகன நிறுவனம் தயாரிப்பின் விலைஉயர்ந்த வாகனம் இதுவே. நின்றதன் காரணம்..ஒரு செய்தியாளன் குறுக்கே விழுந்து நின்றான்..... அய்யா வணக்கம்..என்னப்பா இப்பிடியா வர்றது...அய்யா நான் தினசரி நாளேடு...உங்கள் பேட்டி உண்மையா வதந்தியா.. பதில் சொல்லாமல் அந்த வாகனம் விரைந்தது சட்டசபையை நோக்கி.....

வெற்றிமாறன். தமிழகத்தின் முதல்வர். வயது 43 பிறந்தது வாடிப்பட்டி என்னும் சிறிய ஊர். மதுரையிலிருந்து வத்தலக்குண்டு போய், அங்கிருந்து 5 மைல் தூரம். அப்பா நெடுஞ்செழியன், நெசவாளர் குடும்பம், சாலியர் குலம், அம்மா சாந்தி. இந்த நூற்றாண்டில் இன்னும் கைத்தறி வைத்துகொண்டு ஏதாவது ஒன்றை நூற்றுகொண்டிருப்பது நெடுஞ்செழியன் மட்டும்தான். அதற்காக நெசவு செய்தாதான் பொழப்பு என்பதில்லை. அவன் வளர்க்கபட்டதே ஆள்வதற்க்காகத்தான் என்றால் மிகையாகது. அப்பா நெடுஞ்செழியனுக்கு சொந்தமாக ஒரு பெரிய நூற்பு ஆலை பழனிக்கு அருகே இருக்கிறது. வெற்றிமாறன் படித்தது 20 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த மதுரை தியாகராயர் கல்லூரி. கற்றது இயந்திரவியல். வெற்றிமாறனின் அமைச்சரவையை உலகின் தலைசிறந்த கட்டமைப்புடைய ஆட்சிமுறை வடிவமைப்பு என்று சொல்லலாம். தமிழகத்தின் சிற்றூரினில் கடைசி வீட்டில் இருக்கும் நாய் குட்டியின் விவரம் வரை இந்த கட்டிடம் சொல்லும். இரண்டு துணை முதல்வர்கள். முத்துக்குமார் உள்த்துறை, மதிவாணன் சட்டம். பத்து மூத்த அமைச்சர்கள் முக்கிய நிர்வாகங்களை பார்பதற்க்கென்று. இருபது அமைச்சர்கள். இருபது துணை அமைச்சர்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் இ.ஆ.ப. நிர்வாக அலுவலர் மற்றும் ஒரு துறை சார்ந்த நிர்வாக அலுவலர். அவ்வளவு பெரிய நிர்வாக அலுவலக கட்டிடத்தை இந்த தமிழகம் பார்த்தது இல்லை, தஞ்சை பெரிய கோவிலைவிட உயரமாக இருந்தால் நன்றாக இருக்காது என்பதற்காக பரப்பளவை கூட்டி கட்டிய கட்டிடம். எந்த ஒரு தாக்குதலையும் தாக்குபிடிக்கும் கட்டிடம். உலகின் மிகசரியாக பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஒரே நேரத்தில் ஒரு மில்லியன் மக்கள் நடமாடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடம்.

இன்று மிக முக்கியமான நாள். சுமார் முன்னுற்று ஐம்பது ஆண்டுகளாக தமிழன் அல்லாத ஆட்சியை மட்டுமே பார்த்து பழகிய தமிழகம் முதன்முறையாக வெற்றிமாறனை பார்த்திருக்கிறது. அந்த காலத்தில் யாரோ காமராசர் என்பவர் இருந்தாராம் என்பது மட்டுமே இன்றைய தமிழகம் படித்த வரலாறு. முதல் ஐந்து ஆண்டு காலம் பதவிகாலம் முடிந்து மீண்டும் அரியணை ஏறி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. இன்னும் இரண்டு நிமிடங்களில் துணை முதல்வர்களுடன் கலந்தாலோசனை, பின் மூத்த அமைச்சர்கள் அதனை தொடர்ந்து அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், கடைசியாக சட்டமன்ற உறுபினர்கள். மூத்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர்கள் தவிர மற்றவர்களிடம் தொலைதூர ஒளி அலைபேசி கலந்துரையாடல் மட்டுமே.

செய்தியாளர்கள் கூட்டம்:
நன்றாக சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுதான். துளியும் அவசரம் இன்றி எடுக்கப்பட்ட முடிவு. அனைத்து தரப்பு உறுப்பினர்களிடையே கலந்து தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான். இன்னும் சொல்லப்போனால் இந்தமுடிவுக்கு நாங்களும், என் இன மக்களும் தள்ளப்பட்டதுதான் உண்மையிலும் உண்மை. இதற்க்கு சான்று நானும், என்னை போன்ற முந்தைய முதல்வர்கலும், வரலாறும், புவியியல் அமைப்பும், தவறான சமூக பார்வையும் தான் காரணம். நாங்கள் அவசரகதியாக முடிவு எடுக்கவில்லை என்பதற்கு, ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் வஞ்சிக்கப்பட்டதும், ஒதுக்கப்பட்டதும் தான் சாட்சி. காலமே மிகபெரிய வரலாறு. இங்கே, உங்கள் முன்வைக்கும் தீராத உயிர் ஆதார சிக்கல்களை, நீங்களும் தில்லியும் அருகருகே இருக்கும் மாநிலங்களும் எவ்வாறு கையாண்டன, எப்படி நடந்துகொண்டன என்பனவற்றை சொல்லி என் நேரத்தையும், உங்கள் மேலான நேரத்தையும் செலவழிக்க விரும்பவில்லை, மேலும் என் இன மக்களின் பொறுமையை சோதிக்கவிரும்பவில்லை.

ஒன்று: தமிழக நீராதாரம் சிக்கல். காவிரி, பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் நீர் சிக்கல்
இரண்டு: கனிம ஆதாரங்கள் - பங்கிடபடுவதும், பின்பெறுவனவும் (நிலக்கரி, சுண்ணாம்புக்கள், கிரானைட் கற்கள், தங்கம், பெட்ரோலிய வகை பொருட்கள்)
மூன்று: கைவிட்டுப்போன கச்சதீவு மற்றும் மீன்பிடிக்கும் உரிமைகள்
நான்கு: நடுவணரசுக்கு சரியாக செலுத்திய வரிகள் (சரியாக மக்கள் விகிதாசாரப்படி பங்கிடப்படுகிறதா?)
ஐந்து: தொப்புள்கொடி உறவான தமிழீழ மக்களின்பால் எடுக்கும் நடுவணரசின் கொள்கைகள்
ஆறு: சொல்லிக்கொண்டே போகலாம்... விடியாது.


எனவே, கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகாலமாக இந்திய கூட்டாசியில் எங்களையும், எங்கள் ரத்தத்தையும் கலந்து ஒருங்கிணைத்து, எங்கள் இனத்தின் பெயரையே இந்தியர்கள் என்று மாற்றிக்கொண்டு வாழ்ந்த நாங்கள் ஏன் தனியாக பிரிந்துகொள்ளும் உரிமையை நடுவணரசு கொடுக்ககூடாது என கோருகிறோம். இது வெறும் அறிக்கை மட்டும் அல்ல. இன்று முதல் நாங்கள் ஒரு மாதம் மௌனித்து மனிதர்களாக காத்திருக்கிறோம். அதற்குமுன் நடுவணரசு தங்களின் மேலான முடிவையும், அதற்க்குண்டான செயற்திட்டத்தையும், ஆக்கபூர்வமான அணுசரனையும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். இக்கடிதம் இன்னும் சில வினாடிகளில் நடுவரசிற்கு அலுவலகரீதியாக கிடைக்கும், இது வெற்றிமாறனின், தமிழக மக்களின் ஆகமுதற்பிரதிநிதியாக நின்று நான் விடுக்கும் கோரிக்கை.

எந்த ஒரு தகவலுமின்றி மாறாக ஆட்சியை கையகபடுத்தும் நோக்கில் அல்லது மக்களை துண்புருத்தும் நோக்கில் நடுவணரசு செயல்படும் என்கிற பட்சத்தில்.........

தொடர்வோம்.................

அன்புடன்,


மாசிலான்
தமிழன் என்பதற்கு அவன் குலமே அடையாளம்

1 comment:

Unknown said...

read the books which are published by Tanjore tamil university,

Ref: Tamilar ilakiaya varalaru,
Tamilar panbadu,
lemuriya kandam
and etc.,