Monday, February 14, 2011

ஒரு ரூபாய்க்கு அரிசி..அழியும் உழைக்கும் குடிகள்..நாளை அடிமைகளாகும் நம் குடிகள்...‏

உழைப்பே உயர்வு என்பதே தமிழனின் தாரக மந்திரமாக இருந்தது, இன்று உழைப்பை மறந்து இலவச அரிசிக்கும், இலவச வெட்டி சேலைகளுக்கும் பின்னால் திரியும் வேதனை தமிழகம் முழுவதும் பரவிவருகிறது. இது ஒரு வியாபார அரசியில் தந்திரம் என்று மட்டும் எளிதாக எடுத்துகொள்ளமுடியாது. ஏனென்றால், காமராஜர் நாடார் முதலில் இலவச மதிய உணவு திட்டம் கொண்டுவந்ததில் ஒரு சமூக பின்னணி இருந்தது, சாப்பாட்டுக்கே வழி இல்லாத காலத்தில், ஒரு கிலோ அரிசி 1970 களில் 16-18 ரூபாயாக இருந்தபோது சாதாரண பொதுமக்களால் அரிசி வாங்கமுடியாத நிலைகண்டு மணம் வருந்தி, மாணவ கண்மணிகளுக்கு சாப்பாடு போட்டாவது படிக்கவைக்கவேண்டும் என்ற வீராப்பில் பிறந்தது மதிய உணவுத்திட்டம்.

ஆனால் அதன் பின் வந்த தமிழரல்லாத முதல்வர்கள் அரசிலாக்கி இலவச.................... (நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் நிரப்பிக்கொள்ளலாம்) என்ற நிலை போய், உழைக்கும் இனத்தை முடக்கிவிட்டது இன்றைய இலவச அரிசி திட்டம். விவசாய தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், உற்பத்தி தொழிலாளர்கள் என ஒரு தொழிற்க்குடும்பமே வேலை செய்வதை நிறுத்திவிட்டது. காரணம், நான் ஏன் வேலை செய்யவேண்டும் 25 ருபாய் கொடுத்தால் 20 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு சாதாரண குடும்பத்திற்கு பத்து நாட்களுக்கு போதுமானது. இதனால் அழிந்தது விவசாயம், உற்பத்தி, கட்டுமான வளர்ச்சி மட்டுமல்லாமல் நம் இனமும் சேர்ந்துதான். ஒரு சின்ன எ.கா. திருப்பூரில் நண்பரின் ஆயத்த ஆடை குருந்த்தொழில் நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் வேலை செய்பவர்கள் நேபாளிகள், பீகாரிகள் மற்றும் வடவமார்கள்.... அவர்கள் என்ன தமிழர்களா என்ன வந்தோமா வேலை செய்தோமா பணத்தை பார்த்துவிட்டு வீட்டை நோக்கி ஓடிவிட.. இங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் இங்கேயே இருந்து தங்கி, தானும் ஒரு குருந்த்தொழில் தொடங்கி, பெருந்தொகை பார்த்திட்டதோடு நின்றுவிடாமல் தேர்தல், அரசியல், தலைவர் என்று ஆட்சியை கைகொள்ள ஆரம்பித்துவிடுவான். இல்லையில்லை இது மிகைபடுத்தப்பட்ட எண்ணம் என வழக்கம்போல் வந்தேறிகளும், போர்வைத்தமிழர்களும் பட்டும்படாமலும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இது மிகைபடுத்தப்பட்ட எண்ணம் இல்லை என ஆணித்தரமாக நாம் சொல்லமுடியும், இல்லை இல்லை தமிழனின் 300 கால அடிமைவாழ்கை காண்பிக்கும் (திரும்பிபார்க்கவேண்டும் என நினைத்தால்).

இதில், இன்னொரு கூட்டம்.. மேல்சாதிக்காரர்களுக்கு நாங்கள் கூலிவேலை செய்தே இத்தனை நாளும் அடிமைகளைப்போல் இருந்துவிட்டோம், இப்பொழுதாவது எங்களை சும்மா இருக்கவிடுங்கள் என்று தூண்டிவிட்டு வேடிக்கைகாட்டும் வேற்று இன கீழ்சாதி போராட்டவாதிகள். இந்த சிக்கலுக்கும் சாதிக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும் இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். இங்கே ஒரு இனம் சிதைக்கப்படுகிறது... சோம்பேறி ஆடுகளாக மாற்றபடுகிறார்கள்., பெண்கள் இருட்டறையிலும், அடுப்படியிலும் குத்தவைக்கப்பட்டு இருந்தவர்கள், நவநாகரீக மங்கைகளாக படித்துவிட்டு, திருமணமானவுடன் தொல்லைகாட்சிபெட்டியின் முன் குடும்பத்தையும், பிள்ளைகளையும், தான் என்ன செய்கிறோம் என்பதையும் மறக்கும் உதவாக்கரைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எத்தைனையோ பெண்கள் தையல் தைத்தும், ஆடைகளுக்கு படமிட்டும் (எம்ப்ராடரி என்ற சொல்லுக்கு யாரேனும் அழகிய தமிழ் வார்த்தை கூறி உதவவும்), தோசை மாவு ஆட்டிகொடுத்தும் பிள்ளைகளை படிக்கவைத்த மனைவிமார்கள் உண்டு, இன்றைய பெண்களில் பகுதிநேர வேலைசெய்பவர்களை மிக அரிதாக மட்டுமே காணமுடிகிறது.
இங்கே என் கருத்துகளை திறுபு செய்ய வாய்ப்புகள் நிறைய இருப்பதால் சொல்கிறேன், பெண்கள் ஏதாவது பகுதிநேர வேலை செய்ததுதான் ஆகவேண்டும் என்பது என் வாதம் இல்லை, அதேபோல் மக்கள் அனைவரும் கூலிவேலை செய்துதான் ஆகவேண்டும் என்பதும் என் வாதம் இல்லை. ஏனென்றால் கூலி வேலை செய்வது அனைவருமே கீழ்சாதியினர் என்பது போலவும், அவர்களை அடிமைபடுத்தவேண்டும் என்பது சாதி தமிழர்களின் எண்ணம் என்பதுபோல் ஒரு மாயையை ஒரு கூட்டம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. ஒரு வாலிபன் பத்தாவது மட்டுமே படிக்கமுடிந்தது, அதற்குமேல் தேறவில்லை, சரிவர படிப்புவரவில்லை என்றால் ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நம் வழக்கம். ஆனால் இன்றைய இளையர், கையில் அழுக்குபடாத வேலை மட்டுமே நாகரீகமான வேலை என்றும் அழுக்குபடும் வேலை அனைத்தும் கூலி வேலை என்ற கீழ்நோக்கிய எண்ணங்களுக்கு இழுத்துசெல்லப்பட்டுவிட்டார்கள். இது அவர்களின் தவறு இல்லை. அவர்களுக்கு எந்த திசையை காண்பித்தோம். எந்திரன் படம், கிரிகெட்டு விளையாட்டு, பெண்களுக்கு மெட்டி ஒலி நாடகம். நம் இன அடையாளங்கள் எல்லாம் கேவலம் என திசை மாற்றப்பட்டோம். கூத்து, கரகாட்டம், கபடி, பல்லாங்குழி, வெள்ளை வேட்டி, தாவணி இதில் எதாவது ஒன்றை நம் இளையோரிடம் கேட்டால், நம்மை உற்றுநோக்கும். அதற்க்கு காரணம், இவன் நல்லாத்தானே இருந்தான்...என்ன ஆச்சு இவனுக்கு....என்கிற ஒரு கேவலமான பார்வை. ஆனால், இலவசத்தின் பின் ஓடுவதை கேவலமாக நினைக்கவில்லையே.

நாம் கால்கள் இருந்தும் நொண்டிகளாக மாற்றப்படுவோம், கையிருந்தும் ஊனனாக ஆக்கபடுவோம், எல்லாம் இருந்தும் பிட்சைகாரர்களாக இருக்கப்போகிறோம்...... நன்றாக நம் கண் முன் தென்படுகிறது. அதன்பின், திராவிட கோமாளிகள் எல்லாம் நம்மை நிரந்தர அடிமைகளாக ஆக்கிவிடும். போதும் தூக்கம்.. விழித்திடு..உழைத்திடு தமிழா. உழைப்பில் கேவலமென்று ஒன்று இல்லை. தமிழன் உழைப்பில் உயர்ந்தவன்.

அன்புடன்,


மாசிலான்

No comments: