Tuesday, March 22, 2011

அடையாளம் வாரம் - 7‏

தாமரைக்கண்ணன் வீடு:
வீறுகொண்டு எழுந்த இனம் இன்று இலவு வீட்டில் உட்காந்திருக்கிறது. இலவு விசாரிப்பதும், ஒப்பாரி பாட்டு பாடுவதும் நம் மரபு. எதிரியின் வீடாயினும் சாவு என்று வந்துவிட்டால், போகவேண்டும் என்பது எழுதபடாத சட்டம். தாமரைக்கண்ணன் முதல் கடைக்குடிமகன் வரை நாடே வந்திருந்து, மரியாதை செலுத்தியது. பள்ளிகூட ஆசிரியர் மரணத்தின் மூலம் மக்களின் பேராசியர் ஆனார். மக்களை மனதை வென்றார். புலிக்கொடியுடன் ஆட்டம், பாட்டம், கூத்து, கரகம், புலியாட்டம், ஒயிலாட்டம் என ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைக்கன்னனின் மூத்தமகனார் இடங்கையில் மண்ணை புறம்தள்ள, தாமரைக்கண்ணனின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.


சென்னை மாநகரம்:
திரைப்படமொன்றில் விறு விறு நடித்துத்கொண்டிருந்த உதயகுமாரின் கைபேசி சிணுங்கியது. வணக்கம் என்றான்., டில்லியிலிருந்து அழைப்பு. அடுத்த பத்து நிமிடங்களில் அழகிய விடுதிக்கு கூட்டிசெல்லப்பட்டான், அங்கிருந்தது விக்ரம் சிங். டில்லியிலிருந்து அனுப்பப்பட்ட கூடுதல் தலைமை செயலாளர். தமிழக நடவடிக்கைகளை கட்டுபடுத்த அனுப்பப்பட்டவர். நாங்க எல்லாத்தையும் பார்த்துகொள்கிறோம், நீங்கள் கட்சியின் தலைவராக முதலில் நியமிக்கபடுவீர்கள், கட்சியை உடைப்போம், உங்களுக்குப்பின் வருபவர்களை வைத்து அரசியல் செய்யனும். உங்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் பின் வருவார்கள், உங்கள் பேச்சை கேட்பார்கள். தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றால்... கொஞ்சம் யோசித்துபாருங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால்... மேலும் டில்லியை பகைத்துகொள்ளவேண்டாம். ஆனால், வெற்றிமாறனை பகைத்துக்கொள்வது    சிரமம்.... பாதுகாப்பு? என்றான் உதயகுமார். அதை இந்திய அரசு பார்த்துகொள்ளும்... உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் உடனடியாக கூடுதல் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும். கவலைப்படவேண்டாம். ஈயென இழித்தான் உதயகுமார்.


உதயகுமாரை பற்றி சில வரிகள் சொல்லவேண்டும். இன்றைய நாட்களில் கூடுதல் வசூல் கொடுக்கும் நடிகன் இவர்தான். அம்மா மலையாளி, அப்பா மராட்டியர். மும்பையிலிருந்து பிழைக்க வந்த குடும்பம். ஆறடி உயரம், பளிசென்ற மேனியில் கொஞ்சம் வெண்ணை தடவினார்போன்ற நிறம், கொள்ளைகொள்ளும் கண்கள், நீண்ட புருவம், செதுக்கிய மீசை, பளீரென பேசும் பக்குவம்... மொத்தத்தில் நடிக்க சிறந்தவன், தெரிந்தவன். திரையில் தோன்றினாலே சத்தம் வின்னைபிளக்கும் ரசிகர்கள், உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் கூட்டம். பணத்தை கொட்டி செலவழிக்க தயாராக இருக்கும் பணமுதலைகள்.


அன்றைய மாலை செய்திகளில் அழகிய சிரிப்புடன் கொட்டை செய்தியில் தோன்றினான். வெற்றிமாறனின் அதே கட்சிக்கு டில்லியிலிருந்து அறிவிக்கப்பட்ட தலைவனானான். முதல் பேட்டி கொடுத்தான். வணக்கம். என் இனிய தமிழ் மக்களே... உங்களை இந்த பதவியில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்னை வெறும் நடிகனாக மட்டுமே பார்த்திருந்த நீங்கள் தலைவனாக பார்க்கபோகிறீர்கள். பதவிக்காக தலைவர் பதவியில் இருக்காமல், உங்களுக்கு சேவகனாக இருக்கப்போகிறேன். அதற்காக, நான் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன். நாளை காலை என் மேலாளர் அட்டவணை வெளியிடுவார். அதன்படி தமிழகத்தின் பட்டி, தொட்டிகளிலெல்லாம் பேச இருக்கிறேன். நன்றாக ஆட்சி செய்துகொண்டிருந்த வெற்றிமாறன் எதனால் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என எல்லோருக்கும் பெரும் வியப்பாக இருக்கிறது. எனக்கு தெரிந்து ஏதோ ஒரு வெளிநாட்டு சதியாகவே இருக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு கிடைத்த உளவுத்துறையின் தகவலின் படி இது சீனாவின் திட்டமாகவே இருக்கும். மேலும், சுவிஸ் வங்கியில் சீனா பெரும்தொகை ஒன்றை மாறனின் பெயரிலும், அவர் மனைவியின் பெயரிலும் போடபட்டிருக்கிறது என்றும் அதன் நகல் இன்றோ நாளையோ நாங்கள் வெளியிடுவோம் என்றும் கூறினான்.


மேலும் பேசியதாவது, இந்தியா ஒரு மாபெரும் வல்லரசு. இதைவிட்டு மாறன் உங்களை திசை திருப்பி எங்கோ கூட்டிச் செல்கிறார் என்றும், இந்தியாவின் பலத்திற்கு முன் யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றும் பேசினான். தனியாக சென்றால், தமிழகம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்றும், பசியிலும், பட்டினியிலும் இருக்கவேண்டியிருக்கும் எனவும். முதலீடுகளுக்கு பணம் இல்லாமல் போவதால் வேலை இல்லா தின்டாட்டம் தலைவிரித்தாடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் எனவும் பேசினான். இன்னும் நான்கு மாதத்தில் பொது தேர்தல் அறிவிக்கப்படும், அதில் இந்தியாவின் சார்பாளர்களே வெல்வர், தனித்தமிழக கோரிக்கை மாறனின் தனிப்பட்ட கருத்து அதற்க்கு மக்களின் ஆதரவு என்றும் இருக்காது. எனவே தனித்தமிழக கூப்பாட்டிற்கு பின் செல்பவர்கள் சிறிது யோசித்துக்கொள்ளுங்கள்... நாளை இந்திய சார்பாளர்கள் வென்றபின் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்காது எனவும் எச்சரித்தான். இப்பொழுதே, அவர்கள் உளவுத்துறையால் ரகசியமாக கவனிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு, பட்டியல் தயாரிப்பதாகவும்... அந்த பட்டியல் நபர்கள் நாளை களை எடுக்கப்படுவார்கள் எனவும் அச்சுறுத்தப்பட்டது. அரசுத்துறை, பொதுத்துறை நிறுவங்களில் வேலை செய்பவர்களின் வேலை போவது உறுதி, தனியார் நிறுவனங்களுக்கு அரசிடமிருந்து ஓலை அனுப்பபோவதாகவும், தனித்தமிழக ஆதரவு தொழிலாளர்களை நீக்க அரசு பரிந்துரைக்கும் எனவும், கடைபிடிக்காத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


முதல்கூட்டம் விருத்தாச்சலத்தில் என அறிவிக்கப்பட்டது. சுவரொட்டிகள், விண்ணைத்தொடும் படவெட்டுகள் என களைகட்டியது. இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் தருணத்தில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். நாளைய முதல்வர், தேசபற்றுத்தங்கம், பாரதமாதா ஈன்றெடுத்த தவப்புதல்வன், இந்திய ஒற்றுமையின் இலக்கணம் என பாட்டங்கள் பல வாங்கினான். சாலைகள் வண்ணமயமாயின. இந்திய படையணியினர் களமிறங்கி வேலை செய்தனர். விசிலடித்தான் குஞ்சுகள் கர்ச்சித்தன. பாலபிசேகம், சிறப்பு வழிப்பாடு கோவில்களில் செய்யப்பட்டது.


நேராக உதயகுமார் வீட்டிலிருந்து உலங்குவிமானம் விருத்தாச்சலத்தில் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உலங்குவிமானத்தில் பதினைந்து பாதுகாப்பு காவலர்கள், அனைவரிடமும் அதிநவீன துப்பாக்கிகள். மின்னும் வெள்ளைவேட்டியில் பளீரென வந்தான் உதயகுமார். வீட்டுவாசலில் பாதுகாப்பிற்காக சுமார் ஆயிரம் படையினர். பட்டென பறந்து சென்றது உலங்குவிமானம். வானில் பறக்கும்போது விமானி விமானம் பழுது என பள்ளிளித்தான். உடனடியாக இறங்கவேண்டும் இல்லையென்றால் ஆபத்து என்றான், இன்னும் சில நிமிடங்களே பறக்கமுடியும் என்றான் விமானி. நண்பிக்கையில்லாத பாதுகாவலர்கள், கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டார்கள். ஒன்னும் பழுதில்லையே, நல்ல விமானம் தானே கொடுத்தோம் என்றனர். ஐயா அது உங்கள் விருப்பம், நீங்கள் சொல்வது போல் கேட்கிறேன்., போ என்றால் போகிறேன். எனக்கு தானியங்கி காற்றுமிதப்பான் இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறது... ஆனால் சரியான பயிற்சி இல்லாமல் பறப்பது கடினம். சீக்கிரம் சொல்லுங்கள் என்ன செய்வதென்று என கேட்டான் விமானி, ஐயா, அருகில் செங்கல்பட்டில் இறங்கலாம். சீக்கிரம் சொல்லுங்கள். அதன்படி செங்கல்பட்டு அரசினர் மேனிலைப்பள்ளி விளையாட்டுத்திடலில் உலங்குவிமானம் இறங்கியது. இன்னும் சரியாக ஒரு மணி நேரந்தான் இருக்கிறது, மேடையில் உதயகுமார் முழங்க. அவசர அவசரமாக அடுத்த உலங்கூர்தி ஏற்பாடு செய்யப்பட்டு, வந்து கொண்டிருந்தது. அது வர இன்னும் முப்பது நிமிடங்கள் பிடிக்கும், எனவே ஆசிரியரின் அறை கொடுக்கப்பட்டு அமரவைக்கப்பட்டான். உதயகுமார் வந்த உலங்கூர்தி பழுடைந்துவிட்டதால், அரைமணி நேரம் தாமதமாக கூட்டம் தொடங்கும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர் விருத்தாச்சலத்தில்.

ஐம்பது துப்பாக்கியினர் உதயகுமார் இருந்த அறைக்குள் புகுந்தனர், மின்னல் வேகத்தில் பதினைந்து படையினர் மற்றும் உதயகுமார் நெற்றியில்.....

Saturday, March 19, 2011

அடையாளம் வாரம் - 6‏

தஞ்சை ஆட்சி நகரம்:
சட்டமன்றத்திற்கு முன் இருக்கும் ஆகப்பெரிய கொடித்திடல். குறைந்தது மூன்றே கால் லட்சம் மக்கள் குழுமியிருந்து பார்க்கும்படி வடிவைமைக்கப்பட்ட திறந்தவெளி திடல். காலை ஒன்பது மணி அளவில் வெற்றிமாறன் புலிக்கொடி ஏற்றுகிறார். பத்துபேர் மரத்தடியில் நின்றாலே ஒரே சல சலவென்று இருக்கும்.... மூன்றை லட்சம் மக்களும் மாறன் சொல்லும் வணக்கத்திற்காக மூச்சு கூட விடாமல் உட்கார்திருந்தார்கள். பேசினார்.... இன்று நாம் தனியாக இருக்கிறோம். இதுவரை எந்த நாடும் நம்மை அங்கீகரிக்கவில்லை..... இந்திய படைகள் சூழ்ந்துள்ளன. படைகளை கண்டு யாரும் அஞ்சவேண்டாம்...இந்திய படைகளின் ஒரே ஒரு தோட்டா கூட செலவழிக்காமல் நாம் அந்நிய நாடுகளால் அங்கீகரிக்கப்படுவோம். நம்பிக்கை கொள்ளுங்கள். இதுவரை நாம் நம் அடையாளங்களை இழந்து நூற்றைம்பது கோடியில் ஒருவராக வாழ்ந்தோம்... நம் செல்வங்கள் சுரண்டப்பட்டன... வஞ்சிக்கப்பட்டோம்... எள்ளி நகையாடப்பட்டோம்.... நம் எல்லைகளை மாற்றான் கொள்ளைகொண்டான்.... நம் சொந்தங்களை முள்வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள்.....  கட்ச தீவை யாருக்கோ தாரைவார்த்து கொடுத்தார்கள்... நன்றிக்கு மாறாக மீனவர்களை இழந்தோம்...விவசாயம் செய்ய வேண்டிய விழை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாற்றப்பட்டு மார்வாரிகளும், வடவர்களும், மாற்றான் மக்களும் அபகரித்தனர்....ஏன் தண்ணீர் இல்லை? எங்கே நம் நீர் உரிமை? ஆபத்தான அணு உலைகளும், தாமிர உருக்கு ஆலைகளும் நம் மண்ணில் கட்டினார்கள்.

இன்று நாம், நமது என்றிருக்கப்போகிறோம். இது தமிழ் மண். இது பதினைந்து கோடி தமிழன் எந்த நாட்டில், எந்த நாடுடைய குடியுரிமை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு இந்த மண் சொந்தம். இங்கே மாற்றான் நிலம் வாங்க முடியாது. ஆனால் குடியிருக்க அனுமதி உண்டு. யாரும் வாழலாம்... ஆனால் தமிழன் மட்டுமே ஆள்வான். உலகின் எந்த மூலையில் சென்றாலும் தமிழன் அடிபடுவான் என்பது நாம் தினந்தோறும் கேட்கும் செய்தி. இன்று முதல் ஏன் என்று கேட்க ஒரு அரசு, மாபெரும் தற்காப்பு படைகள் இருக்கிறது. நம் முதல் திட்டமாக அனைவருக்கும் அடையாள அட்டை மாற்றப்படும். புலிக்கொடி ஏந்திய அட்டையில் இனம் என்ற இடத்தில் "தமிழர்" என்றும் பிற இன மக்களுக்கு அவரவர் இனம் அச்சிடப்பற்றிருக்கும்.

இந்த அரசு "குலப்பாகுபாடு" (வடமொழியில் ஜாதி என்று சொல்வார்களே) பார்க்கும் அரசு அல்ல. அதேநேரத்தில், தன குலம் யாரென்று மழுங்கசெய்யும் அரசும் அல்ல. குலம் நமது அடையாளங்களில் அடிப்படையான ஒன்று. குலம் தெரியாத காரணத்தினால் யார் யாரோ தமிழில் பேசி நம் இனம் மொத்தத்தையும் அழித்துவிட்ட வரலாறு ஏராளம். அதற்க்கு எடுத்துக்காட்டுதான், சுமார் நானூற்றி ஐம்பது ஆண்டுகளாக இந்த மண் அயலானால் ஆளப்பட்டது. அதனாலேயே.. நம் இனம் சுவடு தெரியாமல் குட்டி தீவில் குழிபறிக்கப்பட்டது. நமக்கு அந்த நிலை வருமுன் நாமே நம் காலில் நின்றுவிடுவோம். நாமே நம்மை ஆட்சிகொள்வோம்.

உலகின் மூத்தமொழிகளுள் முதன்மையானது தமிழ். உலகிற்கு இலக்கணம் கற்றுகொடுதது தொல்காப்பியம். முதன் முதலில் ஆற்றின் குறுக்கே அணை கட்டி வாய்க்கால் பாசன முறை கற்றுகொடுத்தவன். கட்டுமரம் கட்டி கடுலகை எப்படி ஆளவேண்டும் என்று காட்டிக்கொடுத்தவன். ஆதிதமிழன் தான் முதலில் கடலில் பயணித்தவர்கள். வெறும் மாட்டுக்கறியை வெந்நீரில் அவித்து சாப்பிட்டுகொண்டிருக்கையில், சமையற்கலையை உலகிற்கு கற்றுகொடுத்தவன் தமிழன். உலகமே மரத்தில் வீடு கட்டியிருக்கையில், சுட்ட சுண்ணாம்பையும், கற்களையும் கலந்து (சிமிண்டில்) காரைவீடு கட்டி வாழ்ந்தவன். ஏன் தமிழன் உலகிருக்கு அருளிய பெருமைகள் எல்லாம் திட்டமிட்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படாமல் இருந்தன. உணவே மருந்து மருந்தே உணவு என பாட்டி வைத்தியம், கைவைத்தியம் கற்றுகொடுத்தவன். நட்சத்திரங்களையும், வானத்தையும், பாடும் பறவைகளின் ஒலியின் மூலம் வான் குறிபார்த்து கதைத்தவர்கள் முன்கூட்டியே. எங்கே நாம் மறந்தோம். இல்லை மறைக்கப்பட்டோம். இனி நாம் அடையாளங்களுடன், பெருமைகளுடன் வாழ்வோம்.

வெறும் அடையாளங்களுக்காகவும், பெருமைகளுக்காகவுமா நாம் வெளியேறினோம். ஆம். இன்னும் ஐநூறு ஆண்டுகள் கழித்து நாம் பிள்ளைகள் எப்படி பேசும். தமிழிலா... ஆங்கிலத்திலா... இந்தியிலா... நமக்கே தெரியாது. நாம் மொழி இழந்து நிற்ப்போம். இன்று எத்தனையோ நாடுகளில் வாழும் ஆதிகுடிகள் தங்கள் மொழி அடையாளத்தை இழந்து நிற்கிறார்கள். அவர்கள் யார் என்று தங்களை அறிமுகபடுத்திகொள்வார்கள். மொழியும், இனமும் மட்டுமே மனித அடையாளங்கள். இவைகள் இழக்கப்படும்போது அவர்கள் வெறும் விலங்கினங்களே என்றால் மிகை ஒன்றும் ஆகாது. அதனால் நாம் இந்த முடிவிற்கு வந்தோம்.


இப்பொழுதும் நாம் ஆயத்தமாக இருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்க. ஆனால், ஒரு கேள்வி. உங்களுடன் சேர்ந்து இருக்க ஒரே ஒரு சரியான காரணம் மட்டும் சொல்லுங்கள். என்ன சொல்லப்போகிறீர்கள். நாம் எல்லோரும் ஒருவர். நாமெல்லாம் இந்தியர்...என்றா? நங்கள் உரக்க சொல்கிறோம். நாங்கள் இந்தியர் அல்லர். நாங்கள் தமிழர். எல்லோரும் ஓரினம் என்றால்.... ஏன் இத்தனை நாடுகள்... இத்தனை போர்கள்... ஏன் சோவியத் உடைந்தது....மொழியும், இனமும் அல்லாத ஒரு காரணம் சொல்ல முடியுமா? ஏன் கொசோவா தனியா சென்றது? செக் என்றும் சுலோவாக்கியா என்றும் ஏன் பிரிந்தன? மொழி, இனம் என்பதல்லாது வேறு ஒரு காரணம் உண்டா? ஏன் கிழக்கு, மேற்கு ஜெர்மனி ஒன்றாக இணைந்தது..ஏன் யூதர்கள் ஓடினார்கள்..... இஸ்ரேல் ஏன் பிறந்தது? நாமெல்லாம் இந்துக்கள். ஒரே நாட்டில் வாழ்வோம். நன்று. அப்படியானால், வளைகுடா நாடுகள் என்ற ஒரே நாடுதான் இருந்திருக்கவேண்டும். ரோமன் கத்தோலிக்கம் என்று இன்னொரு நாடு இருந்திருக்கவேண்டும். இரண்டுமே இல்லை. ஏன்............... அது மனித இயல்பு அல்ல. மனித இயல்பு அவணன் மொழியினருடனும், இனத்தவரிடமும் சேர்ந்திருப்பது. மதத்தவரிடம் அல்ல. மனித இயல்பு தாண்டி நாம் மனமற்றம் செய்யப்பட்டிருக்கிறோம். அது 1947 ஆண்டு தொட்டு செய்யப்பட்ட மூளைச்சலவை. மனிதனாக வாழ மொழி, இனம்  மிக அவசியம். இனமும், மொழியும் வாழ தனிநாடு அதைவிட அவசியம்.

எனவே என் இனமே... என் இன மக்களே. உங்கள் ஆதரவும், நண்பிக்கையும் தான் நாம் இனத்தை அடுத்து வரும் நாம் சந்ததியினருக்கு அடையாளத்தை எடுத்துச்செல்லப்போகிறது. நீங்கள் துப்பாக்கி எடுத்து சண்டையிட வேண்டும் என நான் கோரவில்லை. அண்ணன் வேலுப்பிள்ளை பிராபகரன் சுட்ட சூடு இன்னும் பத்து தலைமுறைக்கு நம் நம்பிக்கையை உடனிருத்தும். அவரின் கோபவார்த்தைகள், ரத்தத்தினால் எழுதிய சுவடுகள் நாம் வீழ்ந்தாலும் நம் இனத்தை தூக்கிநிறுத்தி தனிநாடு வாங்கச்செய்யும். நான் இதுவரை கோடிட்டு காட்டிய வாசகங்கள் அண்ணன் பேசிய மிச்சங்கள். எனவே, நான் உங்களிடம் நான் கேட்பது உங்கள் ஒத்துழைப்பு. இந்திய படைகள் எந்த காவல் நிலையத்தையும், எந்த நிறுவனத்தையும், நாம் பாதுகாத்து வந்த கட்டமைப்பையும் கட்டுக்குள் கொண்டுவந்துகொள்ளட்டும். உங்கள் ஆதரவும், நண்பிக்கையும், ஒத்துழைப்பும் இருந்தால் இன்னும் மூன்றே மாதங்களில் அனைத்து நாடுகளும் தமிழகத்தை அங்கீகரிக்க செய்ய வைப்போம். அதுதான் எங்கள் குறிக்கோள்.

இத்துடன் என் உரையை முடித்துக்கொண்டு விடைபெறுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

வாழ்க தமிழகம்.
மூன்றை லட்சம் மக்கள் ஒரே குரலில் ஆர்ப்பரித்தனர். "வாழ்க தமிழகம்".

ஆர்ப்பரித்து அடங்குமுன் ஓர் தள்ளாத வயது பெரியவர். மயங்கி விழுந்தார். அங்கிருந்த ஒருவர் அடையாளம் கண்டு சொன்னார். அவர் தாமரைக்கண்ணன் என்று. அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இனி நான் செத்துவிட ஆயத்தமாகிவிட்டேன்...வாழ்க தமிழகம் என்றார்.. புலிக்கொடியை கீழே விட மறுத்தார்.... அரற்றினார். படுக்கையை விட்டு எழுந்து நின்று சத்தமிட்டார். ஒவென்று அழுதார்... கண்ணீர் மழ்க சத்தமிட்டு சிரித்தார். நான் வாழ்ந்தது போதும் கருப்பா... என்ன கூட்டிட்டுபோடா என்று கட்டளையிட்டார். இந்த நிலவரம் நன்றாக அறிந்த ஒரு வாலிபபென் அதை படமாக்கினாள். என்னை பலியிட்டு உங்கள் வாழ்வை தொடங்குங்கள் என்றார். சொல்லிக்கொண்டே.. சரேலென்று கத்தியை எடுத்து தன இடது கையின் மணிக்கட்டில் கீறி ரத்தம் வரவழைத்து வலது பெருவிரலில் தொட்டு பக்கத்தில் ஒரு சிறுவன் வெற்றிமாறனின் படத்தை வைத்திருந்தான், அதை பிடுங்கி படத்திற்கு வெற்றி திலகமிட்டார். இவை அனைத்தும் சொடுக்குபோடும் நேரத்தில் முடித்துவிட்டு மீண்டும் மயங்கினார். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது..ஆனால் அவர் முகம் மல்லிகையாய் மலர்ந்திருந்தது. மாறனை பார்க்காமல் உயிர் போகாது போலும்... வந்தார் மாறன். பெரியவரின் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டார். மிச்சமிருந்த குருதியில் மாறனுக்கு வெற்றிதிலகமிட்டார். போதுண்டா... மாறா... நா போறேன்.. நீ பாத்துக்கப்பா... பத்துகோடிப்பேர் டா... இன்னும் நெறைய தலைமுறைக வாழனுமைய்யா...பயபுள்ளைக... சினிமா பார்க்குற பய மக்க...வேற ஏதாவது செஞ்சு தொலக்குறதுக்குள்ள... ... வார்த்தை மங்கியது... தழுதழுத்தது..விம்மி புடைத்தார்.... மூச்சிழுத்தார்...புலிக்கொடியை மட்டும் விடவே இல்லை. உயிர் பிரிந்தது. மாறனின் கண்கள் குளமாகின. அழுதுவிடவா.. அடக்கிக்கொள்ளவா. முதன்முதலில் அழுதார்

நூற்றைம்பது ஆண்டுக்குமுன், முப்பது வயது முத்துகுமார் இறந்தபோது செய்யாத ஒரு மாற்றத்தையா இந்த வயதான சாவு செய்துவிடும். மாறன் ஏதும் அரசுபூர்வ மரணமென்று அறிவிக்கவில்லை. ஆனால், தமிழகம் வெகுண்டெழுந்தது மாபெரும் வரலாறு. இந்த மரணத்திற்கா இவ்வளவு ஓலம், இவ்வளவு  ஒப்பாரி. இது ஒப்பாரி இல்லை, ஓலம் இல்லை. இது ஒரு அறைக்கூவல், தமிழன் துயிழெலும் கொக்கரக்கோ. தூங்கிய தமிழர்கள் தெருவுக்கு வந்தனர். அனைவர் கையிலும் புலிக்கொடி, மாறனின் படம். தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல.... அடிக்கடி கூறும் மாறன் பார்த்த முதல் குருதி. மக்கள் சபையில் அந்தப்பெண் எடுத்த ஒளிப்படம் மீண்டும் மீண்டும் காண்பிக்கப்பட்டது. தாமரைக்கண்ணன் எடுத்த கத்தியும், குருதியும் மக்கள் மனதில் பேரெழுச்சியை உண்டுபண்ணியது. பெருமதிப்பை பெற்றுத்தந்தது. ஆசிரியர் தாமரைக்கண்ணன் மரணம் அறிவிக்கப்படாத அரச மரணமாக அங்கீகரிக்கப்பட்டது. அவர் பூதஉடல் மக்கள் இறுதிமரியாதை செலுத்த வைக்கப்பட்டது. மக்கள் வெள்ளமாக வந்து மரியாதை செலுத்தினர். இந்தியா தன் விளையாட்டை ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது. அவர்களுக்கு கிடைத்த கோடாரிகாம்பன் "உதயகுமார்".

தொடர்வோம்......

Wednesday, March 9, 2011

அடையாளம் வாரம் - 5‏

இன்றைய இளம்பெண்களில், காதலிக்கபடாதவர்கள் மட்டுமே தாவணி கட்டாமல் இருந்திருப்பார்கள் என்பது காதல் மரபு. இதில் வெண்ணிலா ஒன்றும் விதிவிலக்கல்ல. இன்று இந்த நிலவுக்கு பிறந்தநாள். ஆம் இந்த மலர் பிறந்து இன்றுடன் பதினேழு ஆண்டுகள் முடிந்துவிட்டன., இனி எத்தனை பையன்கள் தேர்வில் கோட்டை விடபோகிறார்களோ! தாவணியும், நெற்றிக்குருக்கத்தில் வைத்திருந்த வைத்திருந்த பச்சைநிற குட்டி பொட்டும் அழகாய் இருந்தது. பச்சை பொட்டு, தாவணிக்கு நன்றி சொன்னது. இல்லாவிட்டால் சிவப்போ, மஞ்சள் பொட்டோ அவள் இட்டிருந்த்திறுப்பாள். எல்லோருக்கும் இனிப்பு வழங்கினாள், வெற்றியும் அங்குதானிருந்தான். அதுவரை சிரித்து சிரித்து வாழ்த்துக்களை பெற்றுகொண்டவள், இவனை கண்டதும் இனிப்பை கொடுத்துவிட்டு சிறிது மௌனித்திருந்தாள்.. சில வினாடிகள் காத்திருந்தாள், அவன் சொல்லப்போகும் வாழ்த்தின் ஒவ்வொரு எழுத்தின் மாத்திரைகளையும் அப்படியே மனதுக்குள் பிடித்துக்கொள்வதற்காக. காதல் வந்துவிட்டால் எழுத்தும், மாத்திரைகளும் அதன் உச்சரிப்புகளும் எத்தனை சிறப்பு பங்கு வகிக்கின்றன. அவன் அவள் பெயரை சொல்லும் அழகே அழகுதான்.... வெண்ணிலா... என்பதில் தவறியும் வல்லின உச்சரிப்பு வந்துவிடக்கூடாது என்று நாக்கை லாவகமாக்கி காற்றுக்கே வலிக்காமல் மென்மையாக சொல்பவன். இருவரும் கண்களால் சந்தித்துகொண்டது இந்த மணித்துளியில்தான். ""நீ ரெம்ப நாளைக்கு இதேமாதிரி அழகாவே இருக்கணும், வாழ்த்துக்கள்"" இப்படியும் வாழ்த்து சொல்வார்களா? நன்றி, நீங்க இது மாறி எத்தன வருஷம் சொல்வீங்க? ளுக்கு வேலை இல்லாமல் கண்களில் சிறிதே சிரித்து நகர்ந்தாள். வெற்றிக்கு சென்றவுடன் முதன்முறையாக கண்ணாடி பார்த்தான், உற்று நோக்கினான்... ச..ச்சே.. கொஞ்சம் நல்லா சட்டையை தேய்த்து போட்டிருக்கலாமோ... உதட்டுக்கு கீழே ஒரே ஒரு மீசைமுடி நீண்டுகொண்டிருக்கிறதே... கவனிச்சிருக்கலாம்..... நாடிக்கு கீழே இடது பக்கம் கொஞ்சம் சரியாக மழித்திருக்கலாம்...சென்றவன்... திரும்பி தன் பின்புறம் நோக்கினான்... இடது தோள்பட்டையின் கீழ்... அவள் கொடுத்த இனிப்புக்கலவையின் கரை பட்டிருந்தது. மனதின் வேறுக்குள் எதற்கோ மகிழ்ச்சி பானம் சுருக்கென்றது கிள்ளியது. அவள் கேள்வி புரியவில்லையா இல்லை நம்பமுடியவில்லையா? பசித்தது... சாப்பிட்டான்.. பசித்தது, தூக்கம் வந்தது படுத்தான்... தூக்கம் வரவில்லை..(குறிப்பு: இங்கே எழுத்துப்பிழையோ அல்லது பொருள்பிழையோ இல்லை... சரியாகத்தான் எழுதுகிறேன்...பசித்தது... சாப்பிட்டான்.. பசித்தது, தூக்கம் வந்தது படுத்தான்... தூக்கம் வரவில்லை..) புதிய உணர்வாக பட்டது.... நான் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்..கல்லூரிக்கு போறதுக்கு முன்னால அவள பாத்திரனும்... என்ன சட்ட போடலாம்... என்ன பேசலாம்... வெண்ணிலா.. ரெம்ப பிடிச்சிருக்கு..... இல்ல இல்ல உனக்கு பிடிச்சிருக்கா.. ம்..ம் இல்ல நேத்து என்ன சொன்ன சரியா புரியல மறுபடியும் கேட்கணும் போல இருந்துச்சு... இல்லேனா கவிதையா சொல்வோமா... ""நான் ஏறும் ஒவ்வாரு படிக்கட்டிலும் நீ தோளுக்கருகே இருக்கவேண்டும்... """" கவிதை எழுதவேண்டுமென தோன்றியது. இயந்திரவிலும், தாமரைக்கண்ணனின் வரலாறும் கசந்து தமிழும், இலக்கியமும் படிக்கவேண்டும்போல தோணியது வெற்றிமாறனுக்கு.

தனிம மூலக்கூறுகள் பூக்களால் பின்னப்பட்டதுபோல்...
கணினி கண் சிமிட்டியதுபோல்...
வரைபடங்கள் வாழ்த்துமடலானதுபோல்...
பொறியியல் வாய்பாடுகள்
புள்ளியில்லா கோலமிட்டதுபோல்....
பாதி பழுதான மகிழுந்துபோல்....
என் மனம் மாற்றமடைந்துவிட்டது!!

எனக்கு தெரிந்ததெல்லாம் வேதிவினை மாற்றங்கள் மட்டுமே
தெரியாத வினையூக்கி ஒன்று
அமிலத்தில் புகுந்து வினைமாற்றம்
செய்துவிட்டதைபோன்ற ஒரு குழப்பம்.

இதயக்குழியில்
மின்காந்த அலைகள் கோர்த்துக்கொண்ட உணர்வு

புவியின் மொத்த ஈர்ப்புவிசையும்
உன் கண் நோக்கி இழுத்த சக்தி

இதுதான் காதலின் விளைவுகளா?- இல்லை
காதலின் இயற்ப்பன்புகளா?

என்ன இருந்தாலும்
மனதின் மையத்தில் மகிழ்ச்சி


உண்மையில் எனக்கு இது புது உணர்வு, முற்றிலும் நான் பார்க்காதது. எனக்கு புரியவில்லை நன்மைக்கா... என்று. எப்படி இருந்தாலும் உன்னுடன் பேசணும் போல இருக்கு... உன்ன பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு. உன் கூடவே வாழ்க்கையின் எச்சம் வரை இருக்கணும் போல இருக்கு. என்னை உனக்கு பிடித்திருந்தால்...நாளைவரும்போது கருநீல பச்சை ஒன்று அடிக்கடி உடுத்துவாயே.. அதை உடுத்திக்கொண்டு வா. இல்லையென்றால்...உன் விருப்பங்களில் என் பார்வைகளை முடியாவிட்டாலும் தவிர்த்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

வெற்றிமாறன்.

நான்குமுறை கிழித்தெறிந்து ஐந்தாவது முறை வடிவமைத்த கடிதம். பில் கேட்ஸ் மகள் கூட தன் காதலை வெளிப்படுத்த மைக்ரோசாப்டின் இத்தனை
செயற்க
லை பயன்படுத்தியிருக்க மாட்டாள். சேவல் கூவிவிட்டது. வெற்றி இப்போதுதான் தூங்கினான்.

தஞ்சை மாநகரம்:

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - இது ஏன் இப்பொழுது என் மனதில் ஓட வேண்டும். வெற்றிமாறன் சிறிதே சிரமப்பட்டார்... நான் எடுத்த முடியால் என் மக்களுக்கு ஏதும் துயரம் வந்துவிடுமோ என்று விசனப்பட்டார். தான் கும்பிடும் காவல் தெய்வத்தை மணிக்கு நூறுமுறை கூப்பிட்டார்.... காவலுக்கு வருவானா கருப்பசாமி.

கொச்சியிலிருந்து புறப்பட்டால், நூறு கடல்மைல் வேகத்தில் வந்தாலும் இந்தியாவின் INS வகை விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் தமிழக கரையை இன்னும் ஆறு மணி நேரத்தில் தொட்டுவிடும். அதன்பின் ஒவ்வொரு வினாடியும் மரணத்தின் விளிம்பை விட்டு விட்டு தொடும் நிகழ்வுகள்தான். தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல.....என்ற வரிகளை அடிக்கடி ஞாபகபடுத்திகொண்டார்.


கக்கன், திலீபன் இருவரையும் கூப்பிட்டு உடனடியாக தனித்தமிழக வெற்றிவிழாவை கொண்டாட மக்களை அவரவர் ஊர்களிலும், நகரங்களிலும் கூடுமாறு அழைப்பு விட்டார். அதிகாலை எட்டுமணிக்கே அனைவரையும் திரட்டுமாறு பணித்தார்.

அதிகாலை ஊடகங்களிடையே பேசினார்...

வணக்கம். கடந்த தினங்களில் ஊடகங்களின் வாய் பூட்டபட்டதற்க்கு மன்னிக்கவும். என் முடிவுகளை நீண்ட எதிர்ப்புகள் இல்லாமல் தாங்கிகொண்டதற்கு நன்றிகள். உங்களில் சிலர் இந்திய ஆதரவு கூட்டங்கள் இருக்கும் என தெரியும். இருந்தாலும் உங்கள் உணர்வுகளை தரமுடன் எழுத வாழ்த்துக்கள். எனக்கு என் மீதும் என் மக்கள் மீதும் நன்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் ""உரிமைகள் எப்பொழுதும் பொறுப்புகளுடன் கொடுக்கப்படும்"" நீங்கள் உங்கள் பொறுப்புகளையும், நீதியின் எல்லையை தாண்டும்போது வெற்றிமாறன் தன் அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும் என்ற சிறிய எச்சரிக்கையுடன் ஊடகங்களை திறந்துவிட்டார்.


அனைவரும் எதிர்பார்த்தது போல் இந்திய போர்ப்படைகள் INS ரக போர்விமானங்களின் மூலம் கிழக்குகரை வழியாக தமிழகத்திற்குள் புகுந்தார்கள். மாறனின் படைகள் எந்தவித எதிர்ப்புமின்றி வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது. எளிதாக மைல் மைலாக நகர்ந்தார்கள். காலை எட்டுமணி அளவில், இந்திய போர்ப்படைகள் முன் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்தன. மக்கள் திரளாக வந்தனர். ஒவ்வொருவரின் கையிலும் மாறனின் படமும், புலிக்கொடியும் ஏந்தியிருந்தார்கள். ஆங்காங்கே வைக்கபட்டிருந்த தொலைதிரையில் மாறன் உரையாற்றிகொண்டிருந்தார். தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல.....என்ற வரிகளை அடிக்கடி தொலைத்திரையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் வடமொழியில் ஓடவிட்டிருந்தார்கள். இந்நிகழ்வு உலகம் முழுதும் உள்ள தொலைகாட்சியில் அவசர செய்தியாக அறிவிக்கப்பட்டது.


இந்தியப்படைகள் யாரை சுடவேண்டும் என்ற உத்தரவிற்காக காத்துக்கொண்டிருந்தது. ஆனால் தில்லியோ, அனைத்து தமிழகமும் தங்கள் கட்டுபாட்டில் வந்துவிட்டதாக செய்தி சொன்னது. கூடிய விரைவில், ஆளுநரும், உயர் செயலாளரும் டில்லியிலிருந்து அனுப்பபடுவார்கள் என்று அறிவித்ததது. அமெரிக்காவும், மேற்க்கத்திய அடிவருடிகளும் ஆமாம் நல்லது என்று தலை ஆட்டியது. அடுத்த அரைமணி நேரத்தில் ஊருக்கு ஒரு புலிக்கொடி உயரப்பறந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் ஒவ்வவொரு ஊரிலும், நகரத்திலும், பெருநகரத்திலும், மாவட்ட தலைநகரிலும் ஒருவர் மாறனின் சார்பாக   உயர் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். அனைத்து நிர்வாகங்களும் அவரின் நிழற்குடையின் கீழ் வர பணிக்கப்பட்டது.


பகல் நேர இடைவேளையின் போது மாறன் பேசினார். இன்னும் சில நாட்களில் அனைத்து நிர்வாக அலுவலங்களிலும் ஊழியர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதே அலுவலகங்கள், அதே அதிகாரிகள், அதே ஊழியர்கள். கட்டுப்பாடு மட்டும் வேறுவிதமாக இருக்கும். இந்திய படைகளுக்கோ, அலுவலர்களுக்கோ ஆதரவாக அல்லது இணக்கமாக செயல்படும் மக்கள் இனம் காணப்பட்டு தற்காலிகமாக தடுத்துவைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்திய படைகள் யாரையும் துன்புறுத்தும் நோக்கில், அல்லது வக்கிரமாக, கொடூரமாக, கடினமாக நடந்து கொள்ளும் வேளையில் பொதுமக்கள் உடனுக்குடன் 999 ஐ தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.


இந்திய செய்தி ஒன்று அவசர அவசரமாக வெளியிடப்பட்டது. வெற்றிமாறன் உடனடியாக கட்டுப்பாட்டை "விக்ரம் சிங்" என்பவரிடம் ஒப்படைக்குமாறும், தவறினால் அவரின் கீழ் இருக்கும் இந்திய படைகள் வேறு வழியின்றி ஆயுதங்களை பயன்படுத்தி அலுவலங்களையும், காவல்நிலையங்களையும் கட்டுபடுத்தநேரிடும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக மக்கள் இன்னும் இந்தியர்களே.. எனவே இந்திய கட்டமைப்பு சட்டங்களை மதிக்கவேண்டிய கடமை உள்ளது என்றும், மீறுபவர்கள் சிறையிலிடப்படுவார்கள் என்றும், கடுமையான தண்டனை சட்டம் கையாளாப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

உண்மையில் மக்கள் குழம்பினர். யாரை நம்புவது. யாருக்கு கட்டுப்படுவது என்று. நேரம் மாலை ஆறுமணி முப்பது நிமிடங்கள்...........

தொடர்வோம்......

Monday, March 7, 2011

அடையாளம் வாரம் - 4‏

தொண்ணூற்றி ஒரு வயது கிழட்டு சிங்கம் தாமரைக்கண்ணன் வீடு. குழந்தை பிறப்பிற்கு காத்திருக்கும் புது கணவனைப்போல் முற்றத்தில் சுற்றி சுற்றி வந்தார். நல்ல செய்தி கேட்காம இந்த கட்ட வேகாது... மனசுக்குள்ளே பேசிக்கொண்டார்......காதல் கடிதம் குடுத்துவிட்டு காத்திருக்கும் அரும்புமீசை காதலனைப்போல்.... ஆம். நான் சாகமாட்டேன்.... இன்று நான் நினைத்தைது நடக்கப்போகிறது.... தள்ளாதவயதில் தஞ்சையை நோக்கி பயணித்தார்... தானும் ஒரு சாதாரண குடிமகனைப்போல் சட்டசபை அலுவலகம் முன் காத்திருந்தார்...

தி.பி.2139 ம் ஆண்டு சுறவம் மாதம் அறிவன் தினம் தலைப்பு செய்தி வெளிவந்து சரியாக நாளை முப்பது நாட்கள் காலை கதிர் முளைத்தால். கும்பம் மாதம் முதல் நாள். வெற்றிமாறன்.... தேர்ந்தெடுக்கப்பட்ட வானொலி பன்பலைவரிசையிலும், தொலைக்காட்சிகளிலும் புன்முறுவலுடன், கொஞ்சம்கூட பதற்றமின்றி தோன்றினார்.

வணக்கம். கும்பம் மாதம் காலை கதிரவன் உதயதிற்குபின் நாம் ""தமிழகம்""" தனி நாடாக பிரிகிறோம். இந்திய கூட்டச்சியின் கீழ் இருந்தபோது எங்களுக்காக நீங்கள் செய்த சிறு சிறு உதவிகளுக்காக நாங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். தமிழக எல்லை என்பது 1956 ஆம் ஆண்டு வெளியிட்ட மாநில மறுசீர்திருத்த சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். எங்கள் எல்லைக்குள் இருக்கும் எல்லாவளங்களும் எங்களுக்கு மட்டுமே சொந்தம். எங்கள் எல்லைக்குள் இருக்கும் நடுவணரசின் சொத்துக்களும், பாதுகாப்பு கருவிகளும், துப்பாக்கிகளும், கவசவானங்களும், வான்படைகளும், கடற்படைகளும் எங்களுக்கே சொந்தம். இதில் யாரும் சொந்தம் கொண்டாட உரிமை மறுக்கபடுகிறது. எங்கள் அறிவிப்பை தொடர்ந்து குறைந்தது இருபது நாடுகளாவது எங்களை அங்கீகரிக்கும் என நம்புகிறோம். எனவே எங்களுடன் இந்தியா எதுவும் பேசுவதற்கு முன்வரும் என்றால் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தையாகவே எடுத்துக்கொள்ளமுடியும். இன்னும் சிறிது வினாடிகளில் இந்தியா தனது வலிமையான ஆயுதங்களினால் எங்களை தாக்க முற்படும் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அண்டை நாடுகளும், வல்லரசுகளும், மக்களாட்சி நாடுகளும் எங்களை பாதுகாக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். இது எங்கள் மக்களின் நீண்ட கால விருப்பம், வேண்டுமென்றால் ஐ.நா சபை முன்னிலையில் நாங்கள் மக்கள் வாக்கெடுப்பை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இந்திய தலைநகரம். புதுடில்லி. பிரதமர், ஜனாதிபதி முக்கிய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள் என்று பெரும் பட்டாளமே கூடியது தனிதமிழக அறிவிப்பை விவாதிப்பதற்க்காக. விவாதம் என்பதைவிட எள்ளி நகையாடியதுதான் அதிகம், சாம்பார்க்காரனுக்கு கொழுப்பை பார்த்தாயா.. தனிநாடு வேணுமாம்.. சட்டசபையை கலைத்துவிட்டு ராணுவத்தை அனுப்புங்கள், ஆளுனரை மாற்றுங்கள். மாறனையும் அவர் அட்ட்களையும் கைது செய்து திகார் சிறையில் போடுங்கள். இப்படித்தான் பேசப்பட்டது. யாரும் மாறனின் வலிமை என்ன என்பதை கேட்ககூட மறுத்தார்கள் என்பதே உண்மை. கூட்டம் கலைந்தது. சட்டசபை கலைக்கப்பட்டது.

விடிவதற்குள் மாறன் சிறையில் இருப்பார் என வடவர் நம்பினார். மாறாக, தன் அழகான மனைவி போட்டுகொடுத்த காபியை ருசித்துகொண்டிருந்தார். டில்லிக்கு போனது செய்தி. மாறன் காபி குடித்துகொண்டிருக்கிறார் கைது செய்யப்படவில்லை என்று இல்லை.... முடியவில்லையாம். டில்லி ஆட்டுக்கூட்டம் இப்பொழுதுதான் விழித்தது. ஏன் என்று கேட்கையில், மொத்த கட்டுப்பாட்டையும் மாறன் கையில் வைத்திருந்தார். யார் கைது செய்வது... காவல் அதிகாரியா? ஆளுநர் காலை முதல் விமானத்திலேயே டில்லி அனுப்பபட்டுவிட்டார். முதன்மை செயலாளர் முதல் கடைசி காவலர் வரை அனைத்தும் மாறனின் ஆட்கள்.

டில்லி கொஞ்சம் அதிர்ச்சியானது. எப்படி முடியும். சரி நடுவணரசின் கட்டுபாட்டுக்குள்ளிருக்கும் அனைத்துத்தரப்பு அதிகாரிகளையும் முயன்று பார்த்தது, ஒருசில அதிகாரிகள் வடவராக இருதபோதும் பயந்தார்கள். மொத்தம் ஐம்பது குழு கொண்ட ஒரு பெரிய அதிகார வர்க்கத்தை தேர்ந்தெடுத்து அடுத்த இரண்டுமணிநேரத்தில் கட்டுபாட்டை கையில் எடுக்குமாறு உத்தரவு பிறந்தது. அனைவரும் பறக்க தாயாரானார்கள். அதற்குள், கக்கன் ஒரு அவசர அறிவிப்பை வெளிட்டார்... அதில் இந்தியாவே கதிகலங்கியது. இது மாறன் பேசிமுடித்து ஒரு மணிநேரத்திற்குள் நடக்கும் நிகழ்வுகள். அந்த அறிவிப்பானது, நாங்கள் முன்னெடுக்கும் இந்த பயணமாவது எந்த தரப்பினருக்கும் வலிக்காமல், குருதி சிந்தாமல் இருக்கவேண்டுமென நினைக்கிறோம். ஆனால், எங்கள் பழைய கல்வெட்டுகள் சொல்லும் வரலாற்றின் படி இந்தியர்களை நம்புவதற்கில்லை, கழுத்தறுப்பவர்கள். எனவே, உலகின் எந்த மூலையிலிருக்கும் ஒரு தமிழனுக்காவது தனிநாடக பிரிவதை ஒட்டி கன்னடனோ, மலையாளியோ, தெலுங்கனோ அல்லது மற்ற இந்திய இனத்தவர்களாவது வன்முறையில் ஈடுபட்டால், விளைவுகள் நல்லதாக இருக்காது. தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல. எனவே பெங்களூரிலோ, மும்பையிலோ, தில்லியிலோ என் தமிழன் அடிக்கபட்டால்...... இங்கே குடியிருக்கும் மார்வாரிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், வடவர்கள், மராத்தியர்கள் போன்றோரின் பாதுகாப்புக்கு தமிழகம் பொறுப்பாகாது. சுமார் ஒரு கோடிக்கும் மேல் வந்தேறிக்கூட்டம் இங்கே இருக்கிறது... அவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திலோ, பள்ளிகூடத்திலோ பாதுகாப்பாக அழைத்துசென்று அமரவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்துகொண்டிருக்கிறோம். அனைத்து பிரச்சினைகளும் நல்லபடியாக தீர்ந்தபின் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்கபடுவார்கள் அல்லது பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கபடுவார்கள். எனவே, கூடுதல் புத்திசாலித்தனமாக இந்தியாவினர் நடந்துகொண்டு அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக ஆக்கவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


காலவரையற்ற அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலி, பண்பலைவரிசைகள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அடுத்த அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாட்களில் வெளியிடப்படும் என அறிவிப்பு ஒட்டப்பட்டது. கவச வாகனங்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் அணி அணியாக தெருவுக்குள்ளும், சாலைகளிலும் தெரிந்தனர். விமானங்கள், அலுங்கு ஊர்திகள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும், தைரியமாக ஒரு விமானம் ஐம்பதுபேர் கொண்ட அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு தரை இறங்க நினைத்தபோது, அறிவிக்கப்பட்டது. தரை இறங்கினால் சுடபடுவார்கள் என்று, ஜன்னல் வழியே விமானி நோக்கியபோதுதான் நிலைமை டில்லிக்கு புரிந்தது. ஐயையோ... சாம்பர்க்காரன் விளையாடிட்டானே என்று. அனைத்து விமான நிலையங்களிலும் கவச வாகனங்களும், விமானத்தை சுட்டுத்தள்ளும் போர்க்கருவிகளும் குவிக்கப்பட்டிருந்தன என்று. ஆனால், இந்தியா, கடல்வழி உள்நுழையும் ஒரு சோதனை இருந்தது. ஐம்பது அதிகாரிகளும் மதிய சாப்பாட்டுக்கு தில்லி திரும்பினார்கள். அதுவரை தமிழகம் மாறனின் கையில் இருந்தது. நேரம் ஆக ஆக மேலும் கட்டுக்குள் வந்தது. பிழை இல்லாமல் போட்ட திட்டம். இந்தியா வேறு வழி இல்லாமல் பேசலாம் என்றது. மாறன் சிரித்துக்கொண்டே தொலைபேசியை வைத்தார். காலம் கடந்துவிட்டது என் இனிய இந்தியாவே.


வழக்கம்போல் உலகப்பெரும் நாடுகள் இந்தியாவுக்கு இனிப்பாக செய்தியை வெளியிட்டது. எதுவாக இருந்தாலும் பேசித்தீர்த்துகொள்ளுமாறு... சில நாடுகள் கண்டனம் கூட செய்ததது. பள்ளிகூடங்களில் தடுத்துவைக்கபட்டிருக்கும் வெளிமாநில மக்களை விடுதலை செய்யும்மாறு பணித்தது. மாறன் மசியவில்லை. எத்தனை ஆண்டுகள் நீங்கள் என் தமிழினத்தை முட்கம்பிவேளிக்குள் குடிக்க கஞ்சி இல்லாமல் தடுத்துவைத்திருந்தீர்கள்... அப்பெல்லாம் எங்கடா போனீர்கள்... நாய்களா.... என்று மனதுக்குள் பேசிக்கொண்டார். மேலும் வாய்கிழிய பேசும் எந்த ஒரு மாநில அரசாவது அந்தந்த மாநிலத்தில் வசிக்கும்  தமிழனுக்கு பாதுகாப்பு கொடுக்கமுடியுமா? இவர்களை நான் விடுவிக்கிறேன். உங்களை நம்பி எத்தனை தமிழர்களை நாங்கள் காவுகொடுத்தோம். இனியும் நாங்கள் முட்டாள்கள் இல்லை.


ஆட்சியும் கட்டுப்பாடும் கைக்குள் வந்தாயிற்று. இனி எப்படி தக்க வைத்துகொள்வது.... நாம் எத்தனை நாட்களுக்கு தாங்குவோம் வலிமையான இந்தியாவிற்கு முன். படைகளை அனுப்பி மக்களை கொல்ல ஆரம்பித்துவிட்டால்.... எத்தனை நாட்களுக்கு ஒரு கோடி மக்களை பிணை பிடித்து வைத்துக்கொள்ளமுடியும். இரவு ஒருமணி... இன்னும் தூக்கம் வரவில்லை... உலாதிக்கொண்டிருந்தார்...அப்பப்ப... தொலைபேசி உரையாடல்கள்.... அப்பொழுதுதான் ஊடகங்களை சந்திக்கும் முடிவுக்கு வருகிறார். நாளை காலை ஒன்பது மணிக்கு ஊடகங்களை சந்தித்து பேசுகிறார், அதன்பின் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பூட்டியிருந்த ஊடக வாய் திறக்கப்படும் என்று எதிபார்க்கப்படுகிறது.

அடையாளம் வாரம் - 3‏

விவரம் தெரிந்த பத்து ஆண்டுகளாக பார்த்த அதே நிலைக்கண்ணாடிதான்.... இருந்தாலும் அதிகாலை பூத்த மலரின் மேல் அமர்திருக்கும் பணித்திவலைபோல் புதிதாய் வந்து உட்கார்திருந்த குட்டிப்பரு...கண்டு நிலைத்தது..இல்லை நிலை குலைந்தது... குட்டை பாவடையில் என் முன் நின்றவள்.... அழுகையை சரி செய்வதற்காக என்முன் கான்பிக்கப்பட்டவள்.... இவளா இத்தனை அழகுடன்... அப்பாட... என்னை இந்த வீட்டிற்க்குள் கொண்டுவந்ததன் பலன் பெற்றுவிட்டேன்.... இனி நான் உடைந்தாலும்..... இல்லை பதிவுக்குச்சிக்குள் இருக்கும் கோப்புகளைப்போல் என் ஒவ்வொரு மூலக்கூறிலும் உன்முகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கும். ஆம் இனி நான் உடைத்தாலும் உடையேன்.


இவள் பெயர் வெண்ணிலா. பத்தாம் வகுப்பு முடிந்து இன்றுதான் மேனிலை முதலாம் ஆண்டு பள்ளி செல்கிறாள். வரலாற்றை  முதன்மை பாடமாக எடுக்கும் அளவுக்கு இவளை இட்டுசென்ற மனதுதான் என்ன? ஒன்றும் இல்லை.... வேறு கிடைக்கவில்லை. நல்லவேளை இவள் அப்பா அறிவழகி என்று பெயரிடவில்லை, இட்டிறிந்தால்... பாவம் பாதி வருத்தப்பட வேண்டியிருக்கும். படிப்பு என்றாலே பாவக்காய்... இருந்தாலும் வீட்டிலிருந்தால் அம்மா ஏதாவது வேலை சொல்லுவாங்களே...... பள்ளிக்கூடம் போனாலாவது பிள்ளைகள் கூட விளையாடலாம்... என்பதற்காக போறவள். பள்ளி முடிந்ததும்   தாமரைக்கண்ணன் ஆசிரியர் வீட்டுக்கு பாடம் கற்றுக்கொள்ள எப்போவாவது போவதுண்டு...


வழக்கம்போல் இன்றும் போனாள்.... இவர் பேசாம இருந்தாலும் அந்த பய சும்மா இருக்கமாட்டானே... பெரிய பொறுப்புவெளக்கென்ன.... வைதுகொண்டே போனாள். அதேகுரல்... ஆனால் கொஞ்சம் தட்டையாக தென்பட்டது அவளுக்கு... நிமிர்ந்து பார்த்த நேரம்.... அவன் தலை குனிந்திருந்தான்...நேர்கொண்டு நோக்கமுடியவில்லையோ அவளின் புதிய பொழிவை.... அவன் அதற்க்கு முன் அந்த படபடப்பை சந்தித்தது இல்லை... சந்திக்க சந்தர்ப்பம் அமைந்தது இல்லை....அவன் பார்க்க எத்தனித்த போது... அவளுக்கு தெரிந்துவிட்டது... இவன் வீழ்ந்துவிட்டான் என்று.. எனக்கு காலைல கண்ணாடி பாக்கும்போதே தெரியுண்டா... எவனோ இன்னிக்கு கவுருவான்னு... அது நீயா...? ஆம் வீழ்ந்தவன் இவன் என்பதில் ஒரு மகிழ்ச்சி... அது அவனை பிடித்ததாலா? அல்லது அவனை பிடிக்காததாலா? என்பதன் விடை... அந்த வயசிலிருப்பவர்களுக்கும், அந்த வயதை தாண்டி, சின்ன சின்ன இதுபோன்ற சாரலில் நனைந்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்... மற்றவர்கள் பதின்ப வயதினர் என்றால் முயலுங்கள்...இல்லை என்றால் பெருமூச்சுவிட்டுக்கொள்ளுங்கள்.


அந்தப்பையன்... முதலாம் ஆண்டு இயந்திரவியல் படிக்கின்றவன். இதுவரை அரும்பு மீசைக்கும், நிலைக்கண்ணாடிக்கும் சிரமம் ஒன்றும் கொடுக்கவில்லை. இவனுக்கு பிடித்தது இரும்பும் இரும்பு சார்ந்த பொருட்களும், படிப்பதும் அதுவே, வரலாறும் அரசியலும் அவன் பிறக்குமுன்பே ஊட்டிய தந்தைப்பால்... ஒழுக்கமும், தமிழும் தமரைக்கன்னனின் வளர்ப்பு.... மொத்தத்தில் நல்ல உலையில் தயாரிக்கப்பட்டஎஃகு இரும்பு. இரும்பின் குணம் இவனுக்கு. நிமிர்ந்து நிற்பதும், அடித்தால் எதிர்படுவதும், உடைத்தால் திமிர்வதும்...... வகுப்பில் முதலில் வரவேண்டும் என்று யாரும் இவனுக்கு கட்டாயபடுத்தவோ கற்றுதரவோ இல்லை. முடிந்தவரை புரிந்து படி என்பதுதான் இவன் கற்றது. இரும்படிப்பதும், கையில் மசை ஆவதும் கேவலம் என துரும்பளவும் நினைக்க தெரியாதவன். முரட்டு மேனியும், அடர்ந்த மயிர்கார்களும், சாதாரண உயரமும், மாநிரக்காரன்.

படித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவும்... பின் விளையாட்டையும் , அரசியலையும் லாவகமாக வாழைப்பழத்தில் ஊசி சொருகுவதைப்போல் ஏற்றிவிடவும்  தாமரைக்கன்னனின் கட்டளை. ஓடிப்பிடித்து விளையாடும் வயதை தாண்டி, அரும்பு மீசை, குறு குறு பார்வை வயதை தொட்டுவிட்டவன். இவன் ஆளப்பிறந்தவன்... இல்லை ஆள்வதற்காக வளர்க்கப்பட்டவன்... இவன்தான் வெற்றிமாறன். இவன் ஆளுமையும், அரசியல் தெளிவும். கூர்மையும், நேர்மையும் எப்படி வார்க்கப்பட்டதென்பதை... சற்று பின் பார்ப்போம்.

கதை களம் தஞ்சையை நோக்கி நகர்கிறது. இது கக்கனின் அறை. இது அலுவலகமா இல்லை பூந்தோட்டமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு இருக்கும் ஒரு அழகான இடம். இவனின் மிரட்டல் பார்வைக்கும், கணீர் கண்களுக்கும், மின்னல் பறக்கும் கட்டளை சொற்றொடர்களுக்கும் இந்த இடம் சம்பந்தமே இல்லாதது போல் ஒரு பிரமிப்பான வித்தியாசம். ஐம்பது வயது தோற்றமுள்ள அழகிய சுந்தரேசன் காத்திருந்தார்..... கக்கன் இருக்கையை விட்டு எழுந்து வரவேற்றார். இவர் எழும்புவது மிகச்சில மனிதர்களுக்காக மட்டுமே. இது காதும் காதும் வைத்தாற்போல் நடக்கும் சந்திப்பு..... தம்பி.. என்று இழுத்ததும்... கக்கன் கனைத்தார்... ஐயா... எந்த எந்த இடத்தில் சிக்கல் என்று மட்டும் சொல்லுங்கள்... மற்றதை நானும், அண்ணனும் (மாறனை அண்ணன் என சிலர் அழைப்பர்) பார்த்துக்கொள்கிறோம். அனைத்து காவல் நிலையங்களும் பெரிதாக ஒன்றும் சிக்கல் இல்லை, ராசபாளையம், சாத்தூர், விருத்தாசலம், சென்னை வடக்கு, ஓசூர் இது மாதிரி இருபது காவல் நிலையங்களில் முரண்டு பிடிக்கும் அதிகாரிகள்... உங்களுக்கு விவரம் மின்மடலில் இந்நேரத்துக்கு வந்திருக்கும் தம்பி... வேற ஏதாவது இருக்கா... இல்ல தம்பி... ஐயா மன்னிக்கணும் ரெம்ப நேரக்குறைவு... அடுத்து மகாலிங்கம் இந்திய விமான கட்டுபாட்டு ஆணைய மூத்த அதிகாரி வராப்புல.. சரி தம்பி சொல்லிட்டு கெளம்பறேன்... அவர் கதவை திறக்குமுன் மின்மடலில் என்ன என்ன செய்ய வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது... இருபது இடத்திற்கு மாறனின் நம்பகமான அதிகாரி நாளை கதிர் முளைக்குமுன் இருப்பார்கள்.

வணக்கம் மகாலிங்கம்... நிலைமை எப்படி இருக்கு... எவனாவது மோப்பம் பிடிச்சானா இல்லையா...... கொஞ்சம் கவனம். இல்ல தம்பி... அண்ணனை பாக்க்கலாம்மு வந்தேன்... அவர பிடிக்கமுடியல.... அதேன் தம்பிய பாக்க வந்தேன்.... இழுத்தார். பரவாஇல்ல மகாலிங்கம்... ஏதாவது செய்யனுமா சொல்லுங்க.... அப்பறமா கடைசி நேரத்துல அங்க சிக்கல் இங்க சிக்கல்னு இழுத்துக்கிட்டு திரியகூடது... மாறன் கொன்னு செல வச்சுருவாறு... இல்ல தம்பி எல்லாம் சரியா போய்க்கிட்டு இருக்கு.. எல்லா நெலயத்துலேயும் கட்டுப்பட்டு அதிகாரிகள் நம்ம ஆளுக தான்.... ஆனா ஒரு சிக்கல்... டில்லிக்காரன் நினைத்தால் கட்டுபாட்டு கணினியை அங்கிருந்து கட்டுபடுத்தலாம்... அதெல்லாம் தெரியுதுண்ணே... ஆவடியிலிருந்து...... இல்ல தம்பி.. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, சேலமுன்னு எல்லா எடத்துக்கும் டாங்கிகளை கெளப்பறது..... அது எங்களால முடியாதுன்னே... சரி மகாலிங்கம்.... அண்ணன்கிட்ட பேசுறேன்..


இன்னும் ஒரு வாரமே இருக்கும் பட்சத்தில், கக்கனும், திலீபனும் (மூத்த கட்டளை அதிகாரி) மாறனை சந்திக்க இருக்கிறார்கள். இருவரும் ஆளுக்கொரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தார்கள்... அது தெளிவாக மாறனுக்கு விவரிக்கப்பட்டுவிட்டது. மூத்த கட்டளை அதிகாரி திலீபன், முப்படைகளின் கட்டுபாடுகளை கவனித்துகொண்டார், அதிலிருக்கும் சறுக்கல்கள், சிக்கல்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டது. மாறனுக்கென்று தனியாக செயல்படும் உளவுத்துறை வினாடிகொரு தகவல்களை தட்டிதெரித்து கொண்டிருந்தது, ஒவ்வொருவரும் ஐ பேசி யில் மொத்தகட்டுபாடையும் வைத்திருந்தனர்.

நூறு ஆண்டுகளுக்கு (சுமார் 2011 இருக்கும்) முன் விக்கியில் வந்த ஒரு செய்தி மாறனை பாதித்தது. அது அணுமின் சக்தி குறித்த ஒரு புள்ளிவிவரம். About 70% of the electricity consumed in India is generated by thermal power plants, 21% by hydroelectric power plants and 4% by nuclear power plants.[1]

As of June 2010 the installed capacity of wind power in India was 12009.14 MW, mainly spread across Tamil Nadu (4132.72 MW), Maharashtra (1837.85 MW), Karnataka (1184.45 MW), Rajasthan (670.97 MW), Gujarat (1432.71 MW), Andhra Pradesh (122.45 MW), Madhya Pradesh (187.69 MW), Kerala (23.00 MW), West Bengal (1.10 MW), other states (3.20 MW) [32] It is estimated that 6,000 MW of additional wind power capacity will be installed in India by 2012.[33] Wind power accounts for 6% of India's total installed power capacity, and it generates 1.6% of the country's power.[34] - நன்றி விக்கிபீடியா.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சக்திகளில் வெறும் நான்கே விகிதம் மட்டுமே அணுவை பயன்படுத்தி தயாரிக்கபடுகிறது. அதற்காக தமிழ்நாட்டை சுடுகாடாக ஆக்கவேண்டுமா... என்ன இது பைத்தியக்காரத்தனம். நன்றாக யோசித்தால், காற்றாலைகளினால் எடுக்கப்படும் மிண்ணின் அளவு சுமார் ஒன்றை விகிதம், காற்றாலைகளையும், கதிர்வெப்ப சக்தியையும், இயற்க்கை வாயு சக்தியையும் அதன் உற்பத்தி திறனையும் உயர்த்தினாலே சுமார் இருபது விழுக்காடு கூடிவிடும் என்பது அறிவியலார் கருத்து. எனவே, மாறனுக்கு மின்சாரம் உற்பத்தித்துறையில் பெரும் மாற்றம் கொண்டுவரவேண்டும் என பெரிதும் விருபினார், அதற்காக, அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும், எழுதிய தொழில்நுட்ப கட்டுரைகளும் ஏராளம். அதன் பாதிப்பு, தனி தமிழக அறிவிப்பில் முக்கிய இடம் பெரும், அதற்காக நான்கு பேர் கொண்ட ஒரு குழு வரைவுரை தயரித்துகொண்டிருகிறது.


மாறனின் உளவுத்துறையும், சுற்றுலாத்துறையும், உள்ளூர் ஆட்சியாளர்களின் உதவியுடன் ஒரு பட்டியல் கொடுத்தனர். அதுதான் புரட்சியின் ஆணிவேர் என்றால் மிகையாகது. தில்லியும், ஆட்சியாளர்களும் ஏன் எந்த ஒரு நாடும் எதிர்பார்க்காத ஒரு கிடுக்கிபிடி. நாலு பக்கமும் சிங்கமா... பூனை போல் சொன்ன இடத்தில் உட்காரும் நிலைக்கு தில்லி ஆட்சியினரை கதி கலங்கவைக்கும் மாபெரும் சக்தி...

தொடர்வோம்....