Sunday, July 3, 2011

அடையாளம் வாரம் - 14

அனணவரும் எதிர்பார்த்தது போலவே, வெற்றிமாறனின் தமிழ் குடியரசு கட்சி அணைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. தமிழ்செல்வனின் தொலைக்காட்சி உரை......"" வணக்கம், தமிழக மக்கள் அணைவருக்கும் நன்றி, இது உலகின் முதல் தமிழ் அரசு., பத்துக்கோடி மக்களின் மனது, ஆளுமை ஏக்கம், ஆன்மை, விருப்பம் இன்று நணவாகியது. இது உங்கள் வெற்றி, உலக தமிழ் மக்களின் வெற்றி. இந்நன்நாளில் நம் வேந்தர், முதல்வர், தமிழரசிற்கு அடிக்கல் இட்ட மாமேதை வெற்றிமாறன் அவர்கள் சிறைவாசமாகியிருக்கிறார், அவரை உடனடியாக இந்திய அரசு விடுதலை செய்யுமாறு, எங்கள் கட்சிக்கு வாக்கிட்ட அணைவரின் சார்பிலும், மக்களின் தீர்ப்பை மதித்து, மக்களாட்சிக்கு வழிவிடுமாறு இந்திய அரசை வலியுருத்துகிறோம்.

இந்நேரத்தில், இந்திய அரசின் கைகளில் எங்கள் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். இந்திய அரசிற்கு மட்டுமின்றி அணைத்துலக நாடுகளின் தலைவர்களுக்கும் கிட்டியிருக்கும். அக்கடித்ததில், மக்கள் வாக்கெடுப்பு நடந்தவிதம், ஒவ்வொரு சின்னத்திற்க்கும் கிடைத்த வாக்குகள், மொத்தம் கிடைத்த வாக்குகள் என அனைத்து விவரங்களும் உள்ளடக்கி மிக நீண்ட கடிதம் அனுப்பியிருக்கிறோம், கடைசி வரியாக எங்கள் தமிழரசை அனைத்து நாடுகளும் அங்கீகரிக்க வேண்டியுள்ளோம், இந்திய அரசையும் கேட்டுக்கொண்டுள்ளோம். மக்களின் தீர்ப்பை எத்தனை நாடுகள் மதித்து நம்மை ஏற்றுக்கொள்கின்றன என நாமும் பார்ப்போம். நம் தமிழரசு நாளை பதவி ஏற்க்கிறது. வெற்றிமாறன் வரும்வரை நான் குடியரசு தலைவராக இருப்பேன், மேலும் முக்கிய அமைச்சர்கள் பெயர்கள் நாளை வெளியிடப்படும்.

இந்திய அரசு தங்கள் குழுக்களை அனுப்பி பேச முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எல்லை, அரசு, படையனிகள், பொருளாதாரம், சொத்து போன்ற முறைப்படியான பரிமாற்றங்களுகாக நிறைய பேசவேண்டியுள்ளது என்பதை இந்திய அரசே அறியும் என நினைக்கிறோம்.

மீண்டும் ஒருமுறை நன்றிகளை கூறி விடைபெறுகிறேன்""".

அதேநாள் மாலைக்குள், நானூறு பேர் கொண்ட குழு 202 நாடுகளுக்கு, குழுவிற்கு இருவர் வீதம் பறந்தனர். அனைவர் கைகளிலும் ஒரு வரைவு எடுத்துச்சென்றனர். எத்தனை நாள் காத்துக்கிடந்தாவது ஒவ்வொரு நாட்டின் தலைவர்களை சந்த்தித்துவிட்டுதான் வரவேண்டும் என்பது பனிக்கப்பட்ட கட்டளை. வரைவு கூறுவதாவது, ""ஒரு நாட்டின் அங்கீகாரம் என்பது, உருகுவே-வில் இருக்கும் மோண்டிவிடிடோ (1933ம் ஆண்டு) மாநாடு தத்துவப்படி, ஒரு நாடு தனனை ஒரு தனிகுடியரசாக அறிவிப்பதற்க்குண்டான மிக முக்கிய தகுதிகளாக நான்கை வகுத்துள்ளன, அவைகளாவன, 1. வரையருக்கப்பட்ட எல்லைகள் 2. நிரந்தரமான, தொடர்ச்சியான மக்கள் தொகை 3. அரசாங்கம் 4. ஏனைய நாடுகளுடன் பேசுவதற்க்கோ, அலுவலகரீதியான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய தகுதி. இந்த நான்கும் இருந்து, ஏதெனும் ஒரு ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடு தங்களை அங்கீகரிக்கும் என்றால், உலக சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்பது தத்துவம். எனவே, எல்லா தகுதியும் இருக்கும் எங்களுக்கு ஏன் தத்தம் நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள், அதனால் தான் என்னவோ சீனா தனது அங்கீகாரத்தை முதலில் கொடுத்தது, அதனை தொடர்ந்து பாகிஸ்தான், ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளும் (அசர்பைஜான், கஜகஸ்தான், துர்க்மினிஸ்தான்,கிரைகிஸ்தான்)
, யுகோஸ்லொவியாவிலிருந்து பிரிந்த நாடுகளும் (சுலொவெனியா, குரொசியா, போஸ்னியா, மோண்டிநிக்ரோ, கொசொவா) உடனடியாக அங்கீகரித்தன. மேற்குலகமும், ஜப்பானும், இங்கிலாந்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுரை கூறின. இதுவரை வாய் திறவாமல் மௌனித்துக்கொண்டிருந்த இந்தியா, பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மட்டுமில்லாமல், உடனடியாக வெற்றிமாறனை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்க்கு ஒத்துக்கொண்டது. அதன் கருப்பொருளாக, இந்தியா என்ற கூரையில் தமிழகம் ஒரு தன்னாட்சி பெற்ற நாடாக விளங்கும், எ.காட்டாக தைவான், ஸ்காட்லாந்து, ஹாங்க்காங்க் போன்ற நாடுகளை சுட்டிக்காட்டியது.

இப்பொழுது, பந்து தமிழரசின் கோட்டையில்.......

No comments: