Sunday, July 3, 2011

அடையாளம் வாரம் - 13

நாங்கள் இரத்தின சுருக்கமாக சொல்லவிரும்புகிறோம் நாங்கள் பார ஹோதியில் மட்டும் இருந்து செயல்படவில்லை, நீங்கள் எங்கள் மண்ணை கட்டுக்குள்  கொண்டுவந்துவிட்டோம் என்ற ஆர்ப்பரித்தவுடன் நாங்கள் எங்கள் கள நடவடிக்கைகளை மாற்றிவிட்டோம், எங்கள் மண்ணை நீங்கள் ஆட்சி கொள்ள இயலாது, எங்களை கட்டிவைத்திருக்கவும் முடியாது, எங்கள் விலங்குகளை அவிழ்த்துவிடுவீர்கள். இனி நாங்கள் அடிமைகள் அல்ல. எங்கள் ஆட்கள், உங்கள் படையணிக்குள் புகுந்திருக்கிறார்கள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றுள்ளோம். அதற்குள், நீங்கள் சின்ன கணக்கு ஒன்றை போட்டுவிடுங்கள், எங்களின் எல்லா ஆட்களையும் கட்டுக்குள் கொண்டுவர எத்தனை நாழிகை அல்லது நாட்கள் பிடிக்கும், அதுவரை நாங்கள் பொறுமை காத்துகொண்டிருப்போம் என நீங்கள் கணவு ஏதும் காணவேண்டாம், நான்கு மணிக்குள் வாக்குபெட்டிகள் நகர ஆரம்பிக்கவேண்டும் இல்லையென்றால் எங்கே வெடிக்கும் என எங்களுக்கே தெரியாது, இனி வெடிக்கப்போவது வெறும் காகிதங்களும், செய்திகளும் அல்ல என்பதை நினைவுபடுத்தவிரும்புகிறோம்.

ஒருதுளி குருதிகூட சிந்தாமல் எங்கள் உரிமையை பெற்றுவிடுவதுதான் எங்கள் நோக்கம், அதே நேரத்தில் மக்களின் எண்ணங்களை தொட்டுப்பார்க்க விரும்பாமல், பயந்துகொண்டு... எங்கே அனைத்து மக்களும் இந்திய ஆட்சியை வேண்டாம் என கூறிவிடுவார்கள் என பயந்துகொண்டு, தேர்தலை நடத்தவிடாமல் இடையூறு செய்ய நினைக்கும் மனிதாபிமானமற்ற அரசை இசையவைப்பதற்க்காக, எங்கள் இனத்தை கூறுபோடும்போது வேடிக்கை பார்த்துகொண்டிருந்த மக்களில் சிலரின் குருதியோ, உயிரோ போய்த்தான் ஆகவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதை செய்வதற்கு சிறிதும் கவலைப்படமாட்டோம், மேலும் எங்களைவிட இந்தியர்கள் மீது உங்களுக்குத்தான் அக்கரைவேண்டும். உலகின் அதிக மக்கள்தொகை உங்கள் நாட்டில் இருப்பதால், உங்கள் மக்களின் உயிர் மீது உங்களுக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு பரிதாபம் இருக்கிறது. எனவே அந்த ஒரு நிலைக்கு, முடிவெடுப்பதற்கு இந்திய அரசு எங்களை தள்ளப்படும் பட்சத்தில் இந்திய மக்களிடமும், உலக சமுதாயத்திடமும் நாங்கள் மன்னிப்புகேட்கிறோம்.


நாங்கள் கேட்பது மக்களை முடிவு எடுக்கவிடுங்கள்...என்பதுதான். உங்கள் ஆட்சி மீதும், உங்களின் ஒருமைப்பாட்டின் மீதும் உங்களுக்கு நன்பிக்கை இல்லையா? உலக நாடுகளே ஏன்
மௌனித்திருக்கிறீர்கள்? இந்தியாவின் மாபெரும் வியாபார சந்தை வேண்டுமென்றா? உலக நாடுகளே உங்களின் குரல் உரக்க ஒலிக்கும் என நாங்கள் காத்திருக்கிறோம்.

தமிழக தேர்தல் களம்:
இந்திய படையணிகள் மேலும் தாக்குதல் முகம் கொள்ளாது இருந்ததால் காலை ஏழுமணிக்கெல்லாம் மக்கள் வரிசைவரிசையாக வர ஆரம்பித்தனர். கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. மாறனின்
செயல்வீரர்கள் பத்து மணித்துளிகளுக்கு ஒருமுறை தேர்தல் நல்லபடியாக நடக்கும், அனைவரும் வாருங்கள், பயப்படவேண்டாம், தேர்தல் நடக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறும் அறிவிப்பு செய்துகொண்டே இருந்தனர். 07.30 மணிக்கெல்லாம் வாக்குப்பெட்டி வந்தது, அடுத்த பத்து மணித்துளியில் சின்னங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மக்கள் சரியாக எட்டு மணிக்கெல்லாம் வாக்களிக்க ஆரம்பித்தனர். அனைத்து வாக்கு பதிவுகூடங்களும் நேரலை செய்யப்பட்டன, பதிவும் செய்யப்பட்டன. ஒரு மணிக்கொருமுறை பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட்டன. அனைத்தும் நேரலை செய்யப்பட்டது.
மாலை 5.00 மணி. சராசரியாக 92 விழுக்காடு வாக்குகள் பதிவு
செய்யபட்டிருந்தது, 120 தொகுதிகளில் 100 விழுக்காடு பதிவு செய்யபட்டிருந்தது. வெற்றிமாறன் தேர்தல் அறிவிப்பிற்கு பின் கைது செய்யப்பட்டதால் அவர் தேர்தலில் நிற்கமுடியவில்லை. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்யப்பட்டது, அதன்பின் ஒரு அறிவிப்பில், இந்திய அரசின் உதவிக்கு நன்றி எனவும், வாக்கு எந்திரங்களை வாக்குகள் எண்ணும்வரை தாங்கள் வைத்திருக்க நினைப்பதாகவும், அதற்க்கு இந்திய அரசின் உதவி தேவை எனவும் முறைப்படி கேட்கப்பட்டது, விருப்பமில்லைஎன்றால் வாக்கு எந்திரங்களை உடனே திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டது. இந்திய அரசு எந்த முடிவும் எடுக்காததால் பேட்டிகள் அனைத்தும் இரவு, பகல் நேரலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டது.
நாளை அதிகாலை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது

No comments: