Monday, May 19, 2008

இந்திய விவசாயி

தான் இந்தியன். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம். ஆண்டாண்டு காலமாக பெருமையடித்துக்கொண்டிருகிறோம்.கொஞ்சம் இயல்பு நிலை பற்றிக்கொஞ்சமே பார்ப்போமே.

ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் சாதரண விவசாயி எப்படி நடத்தப்படுகிறான். ஒரு விலங்கினைவிட கேவலமாக பார்க்கபடுகிறான். ஒரு தமிழ் விவசாயி என்பவன், களைத்த முகமும், வியர்வை நாற்றமும், கருகிய முகமும், கொஞ்சம் வளைத்து முறுக்கிய மீசையும், திறந்த மார்பும், செருப்பில்லாக் கால்களும், தனக்கேயுள்ள பிராந்தியத் தமிழும், மழை மற்றும் வெயில் குறித்து மனசுக்குள் பேசிக்கொண்டே செல்ல்பவர்கள். மாறாக., வங்கியில் பனி செய்வது தன் பிறவிப்பயன் என்று நினைக்கும் அதிகார வர்க்கம். எங்கே பெய்தால் என்ன, யார் அழுதால் என்ன, மாதமானால் கையில் சம்பளம். அரசாங்க கடனில் ஒரு வீடு, செத்தால் மகனோ, மகளுக்கோ மறுவேலை. அவர்களுக்கு சமூக அக்கறையோ, விவசாய முன்னேற்றமோ குறித்து யோசிக்கக்ககூட நேரமில்லை. அதையும் மீறி வங்கிகடனோ, நகைகடனோ வேண்டும் எனக்கேட்டால், அவன் படும்பாடு., ஐயோ இறைவனே., ........... அலையோ அலை என்று அலைந்து திரிந்து, கையூட்டு கொடுத்து அவர்கள் வந்து கடன் கிடைக்குமுன், அடுத்த அறுவடையே வந்துவிடும்.

பேருந்தில் ஏறினால், ஏற, இறங்க பார்க்கும் பொதுமக்கள், அதிலும் அவர் கையில் மஞ்சபையோ, கொஞ்சம் பூச்சிமருந்தோ (நீங்கள் கோகோ கோலா என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல) வைத்திருந்தால், அவரை போயா, யோவ், வா, போ என்று ஒரினையில் அழைக்கும் நடத்துனர். அவரும், நான் ஒரு ஓரமாக நின்றுவிட்டுப் போகிறேன்னையா என்று ஒதுங்கிக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட ஓரினம்

இதுஒருபுறமிருக்க, நாங்கள் ராக்கெட் விட்டோம், தகவல் தொழில் நுட்பத்தில் நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று ஓலம். இதையெல்லாம் விளம்பரமக்கி வெளிநாட்டு முதலாளிகளைக் கவரும் ஊடகங்கள். இதெல்லாம் தாண்டி நம்பும் பொதுமக்கள். நீங்கள் வளர்ந்துவிட்டது உண்மைதான். அதன் பயன்பாடுகள் கிடைப்பது யாருக்கு. அரசு வருமானத்தில் 60% விவசாயத்தில், தகவல் தொழில்நுட்பத்தில் இல்லையே. அப்படியே வந்தாலும் இன்னைக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறீர்கள். உணவுப்பொருட்களின் விலை கூடிவிட்டது என்று ஓலைமிடுபவர்களே, இதுதான் உண்மை. இதுதான் இயல்புநிலை. பெட்ரோலுக்கு பின்னால் திரிந்தவனேல்லாம் பெருத்த வியபாரரீதியான விளைச்சலில் புகுந்துவிட்டால், அரிசிக்குகூட அமெரிக்கனை கையேந்தும் நிலை வெகு தூரத்தில் இல்லை.

சரி, இதெல்லாம் எப்படியோ போகிறதென்று பயிரிட்டால், கன்னடனும், மலையாளியும் தண்ணீரைத் தடுக்கும் அவலம்.

ஆமாம். யாரையா அவர்கள்? இந்தியப்பெருங்குடி மக்கள்தானே. இந்தியா என்பது என்ன? பல இன மாநிலங்களின் கூட்டசிதானே. இல்லை ஓரின மக்களின் ஒரே ஆட்சியா? புரியவில்லை. பல இனங்கள் என்றால், ஓரினம் மற்றொன்றை மதிக்கவேண்டும். அவன் அடையாளங்கள் பாதுகாக்கப்படவேண்டும். மொழி காக்கபடவேண்டும். எனக்குத் தெரிந்து இல்லை. இல்லாத ஒன்றுக்கு (ஒன்றியத்திற்கு) நாம் இட்ட பெயர் இந்தியா. ஓரினம் என்ற போர்வையில், தமிழ் பேசினாலே தமிழன். தமிழ் படத்தில் நடித்தால் தமிழன். ஒரு போர்வைத்தமிழன் விஜயகாந்த், சிங்கள பேரினவாத இலங்கைக்கு பேராயுதம் கொடுக்க ஆதரவு கொடுத்தானாம்.
என்ன பெருமையோ. என்ன இந்தியாவோ............!!!!!!

அன்புடன்,

இரா. த. ஜெயக்குமார்