Tuesday, February 15, 2011

நிறக்கோளாறு.....

வணக்கம்,
ஏ.. புள்ள பேச்சியம்மா, மசாமாருக்கேனு கேள்விப்பட்டேன்.. கறுப்பா பெத்துராதடி..
எங்கடா போற கருவாயா, இண்ட்ர்விக்கா.. மொகறைய கொஞ்சம் கழுவிட்டு போடா..
பொண்ணு ரெம்ப கறுப்பா இருக்கு பரவாயில்லையாடா பாண்டி? இல்லையின சொல்லு செம்பட்டிப்பக்கம் போயி வெளியெடத்துல பொண்ணு பார்ப்போம்.
முனியா.. நம்மவீட்டு பிள்ளவேற கொஞ்சம் கலரு கம்மியா..அதேன்.. மாப்ள வீட்ல கூட ரெண்டு பவுனு கேட்கிறாங்க....
இப்படி தினம் நாம் கேட்டுகொண்டிருக்கும் வசனங்கள், சில உறுத்தல்கள், சிலருக்கு வலிக்கும் ரணங்கள், குறிப்பாக பெண்களுக்கு. அப்படியே சென்னை போன்ற பட்டினத்துரைகளுக்கு சென்றால் பேசும் வழக்கு மாறுமே தவிர ரணங்களும், உறுத்தல்களிலும் கொஞ்சமும் பிழையில்லாமல். அதிலும் இடைக்கிடை ஆங்கிலம் தெளித்து..

he is ok டி,, பட் அவன் ரெம்ப கறுப்புடி.

இதெல்லாம் மனிதர்களின் தாழ்வுமனப்பான்மை என்றும் அவரவர் மனபிரச்சினைகள் என்றும் ஒருபக்கம் அப்படியே ஒதுக்கவும் முடியாது. இன்றும், வேலைக்கு செல்லுமிடத்திலும், தினப்பழக்கவழக்கத்திலும், சமூக குடும்பப் பிரச்சினைகளிலும் தோலின் நிறம் முக்கிய பங்குவகிப்பதை யாரும் இல்லையென்று சொல்லிவிடமுடியாது

இன்றும், முக்கிய சந்திப்புகளிலும், தொழில்நுட்பக்கூட்டங்களிலும் (technical meeting) தேறிய அனுபவமும், கல்வியும் தகுதியுமிருந்தும் நம் கறுப்பு தமிழர்களால் வெள்ளக்கார துறைமார்களிடம் உரக்க பேசமுடிவதில்லையே. மொழிதான் காரணம் என்று ஒத்தவரியில் சொல்லவும் முடியாது. எனென்றால் நம் பக்கத்து மண்ணின் மைந்தர்களிடம் (தெலுங்கு, வடவர்கள்) பேசும்போது சபை கிழிகிறதே. தொழில் மற்றும் அலுவலகரீதியான பிரச்சினைகளை நிறுத்திக்கொண்டு, சமூக பின்னணிகளைப்பற்றி ஆராய்வோம்.

தமிழர்கள்........... ஒரு ஆராச்சியாளர் தமிழர்களை இப்படி விவரிக்கிறார்

The Tamils proper are smaller and of weaker build than Europeans, though graceful in shape. Their physical appearance is described as follows: - a pointed and frequently hooked pyramidal nose, with conspicuous nares, more long than round; a marked sinking in of the orbital line, producing a strongly defined orbital ridge; hair and eyes black; the latter, varying from small to middle-sized, have a peculiar sparkle and a look of calculation; mouth large, lips thick, lower jaw not heavy; forehead well-formed, but receding, inclining to flattish, and seldom high; beard considerable, and often strong; colour of skin very dark, frequently approaching to black

Frequently Black. ஆம்........... அவர் சொல்லவருவது கிட்டத்தட்ட, நிறையப்பேர் கறுப்பானவர்கள். எனவே கொஞ்சம் சிவந்தமேநியுடைய என் தமிழ் நண்பர்கள் கோபித்துக்கொள்ளவேண்டாம்.

முதலில், தமிழர்கள் பிறநிற குறிப்பாக சிவந்தமேநியுடைய மனிதர்களை கண்டு பயந்திருகிறார்கள் அல்லது தேவைக்குமேல் மரியாதை கொடுத்திருகிறார்கள், கொடுத்துக்கொண்டிருகிறார்கள் என்றே கருதவேண்டும். எனென்றால் சுமார் பத்தாம் நூற்றண்டிற்க்குப்பின், பக்கத்து மண்ணின் மைந்தர்கள் கொடிய தண்டனைகைதிகளாகவும், முகலாயர்களின் படையெடுப்பின்போது பயந்து ஓடிவந்தவர்கள், பசி பட்டினி போக்கவும் புலம்பெயர்ந்து தமிழகம் வந்தவர்கள்தான் தெலுங்கர்கள், கன்னடர்கள், உருது பேசும் முஸ்லிம்கள், குஜராத்திலிருந்து வந்த மார்வாரிகள். இதில் முக்கியமானவர்கள் தெலுங்கர்களும், கன்னடர்களும் தான். எனென்றால், வடவர்கள் தங்கள் தாய்மொழியை விட்டுவிடாமல் இன்றுவரை தொடர்ந்தவர்கள். ஆனால், தெலுங்கர்களும், கன்னடர்களும் தமிழை கிட்டத்தட்ட வீட்டுமொழியாகவும் எடுத்துகொண்டவர்கள். அதற்க்கு, இவர்களின் தமிழ் மீது கொண்ட காதலோ, பற்றோ கண்டிப்பாக இல்லை. தெலுங்கும், கன்னடமும் தமிழை தழுவித்தொன்றிய மொழிகள். அதனால் அவர்கள் எளிதாக கற்றுக்கொண்டு தமிழர்களை போல் வாழ்ந்து தமிழ் போர்வை
போர்த்திக்கொண்டவர்கள். இவர்கள் தமிழர்களைப்போல் தோற்றம் கொண்டவர்கள் இல்லை. கொஞ்சம் சிவந்தமேனியை பெற்றவர்கள்

நாம் பயந்த, அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்த மாமனிதர்களை!!!!!! வரிசைப்படுத்துவோம்,

கட்டபொம்மு நாயக்கர் (நாயக்க குறுநில மன்னன்)
திருமலை நாயக்கர் (கிருஷ்ண தேவராயரின் ஆளுநர் மதுரை)
அச்சுதப்ப நாயக்கர் (கிருஷ்ண தேவராயரின் ஆளுநர் தஞ்சாவூர்)
ஈ.வே.ராமசாமி நாயக்கர்
பி.எஸ்.குமாரசாமி ராஜா (தெலுங்கர்-முன்னாள் முதல்வர்)
அண்ணாதுரை (அம்மா தெலுங்கர்)
கருணாநிதி (தெலுங்கர்)
எம்.ஜி. ராமசந்திரன் (மலையாளி)
ஜெயலலிதா (கண்னடர்)
ரஜினிகாந்த் (கண்னடர்)
விஜயகாந்த் (தெலுங்கர்)
வை.கோ (தெலுங்கர்)

மேற்ச்சொன்னவர்களில் யார் நல்லது செய்தார்கள், யார் செய்யவில்லை, ஒவ்வாருவரையும் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார் யார் என்பதை வரிசைப்பட்டுத்துவது நம் நோக்கம் அல்ல. மாறாக, இவர்கள் இருந்த இடத்தில் காமராஜர் போன்றொரு தலைவன் இருந்திருந்தால்..............இதை ஆய்வு செய்யும் பணியும் நமதில்லை.
ஏன் இல்லை. எதற்காக நாம் தெரிவு செய்யவில்லை. நமதினத்தில் தலைவர்கள் இல்லாமல் போய்விட்டார்களா........ இல்லை. தலைவர்கள் மக்கள் மத்தியில் கொண்டுவரப்படவில்லை, அதற்கான அவகாசமோ, வாய்ப்போ கொடுக்குக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. புரிகிறது..யார் கொடுக்கவேண்டும் எனக்கேட்கிறீர்கள்.

மேற்ச்சொன்ன பட்டியலில் யாரும் தமிழர்கள் இல்லை. வேறுஇனத்தவர்கள் தலைவனாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் நமக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள் என்பதே உண்மை. எ. கா. திரு. நெடுஞ்செழியன், திரு. அன்பழகன், திரு. மா.பொ. சிவஞானம், இப்படி சொல்லிக்கொண்டே நீளலாம். இவர்கள் அனைவரும் கறைபடியாத கைகொண்டவர்கள் (கிட்டத்தட்ட) எனலாம்.

சரி, இப்பொழுது நிறப்பிரச்சினைக்கு வருவோம், எம்.ஜி. ராமசந்திரன் போன்றோர்கள் வெறும் நிறத்தை வைத்தே ஆட்சி செய்தார் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், வேறு இனத்தவர்கள் மற்றைய மொழிகளில் பேசி நமவர்களிடம் எளிதாக நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ளமுடிகிறது என்பதும் நாம் தினந்தோறும் சாலைகளிலும், வேலை இடங்களிலும் நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளாகும்.

நிறம் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மிக நீடதூரம் பாதித்ததும் நம் இனத்தவர்களிடம் தான்.

எனவே நிறம் தமிழனின் அடையாளங்களில் ஒன்றாக கலந்தது. தமிழ்த்திரைப்படங்களில் காண்பிப்பதுபோல் அல்லாது தமிழனின் அடையாளம் என நினைத்து வழிகளில், வாழ்க்கையில் இனைந்து நிற்ப்போம்... தமிழனாக.
அன்புடன்,
இரா. த. ஜெயக்குமார்

1 comment:

Unknown said...

கறுப்பர்கள் பெரும்பாலும் சூரிய ஒளியில் தலைமுறை தாண்டி வேலையாளாய் இருந்ததும் காரணம்.தமிழன் அதற்கு உதாரணம்.தமிழனிடம் ரத்தத்தில் ஊறிய ஒன்று,அக்கறை பச்சை என்ற தீயெண்ணம். அங்கு ஓர் தமிழன் தலை எழுவதை அவனே தடுப்பான். காமராஜர் தோல்வி ஓர் உதாரணம்.