Wednesday, March 9, 2011

அடையாளம் வாரம் - 5‏

இன்றைய இளம்பெண்களில், காதலிக்கபடாதவர்கள் மட்டுமே தாவணி கட்டாமல் இருந்திருப்பார்கள் என்பது காதல் மரபு. இதில் வெண்ணிலா ஒன்றும் விதிவிலக்கல்ல. இன்று இந்த நிலவுக்கு பிறந்தநாள். ஆம் இந்த மலர் பிறந்து இன்றுடன் பதினேழு ஆண்டுகள் முடிந்துவிட்டன., இனி எத்தனை பையன்கள் தேர்வில் கோட்டை விடபோகிறார்களோ! தாவணியும், நெற்றிக்குருக்கத்தில் வைத்திருந்த வைத்திருந்த பச்சைநிற குட்டி பொட்டும் அழகாய் இருந்தது. பச்சை பொட்டு, தாவணிக்கு நன்றி சொன்னது. இல்லாவிட்டால் சிவப்போ, மஞ்சள் பொட்டோ அவள் இட்டிருந்த்திறுப்பாள். எல்லோருக்கும் இனிப்பு வழங்கினாள், வெற்றியும் அங்குதானிருந்தான். அதுவரை சிரித்து சிரித்து வாழ்த்துக்களை பெற்றுகொண்டவள், இவனை கண்டதும் இனிப்பை கொடுத்துவிட்டு சிறிது மௌனித்திருந்தாள்.. சில வினாடிகள் காத்திருந்தாள், அவன் சொல்லப்போகும் வாழ்த்தின் ஒவ்வொரு எழுத்தின் மாத்திரைகளையும் அப்படியே மனதுக்குள் பிடித்துக்கொள்வதற்காக. காதல் வந்துவிட்டால் எழுத்தும், மாத்திரைகளும் அதன் உச்சரிப்புகளும் எத்தனை சிறப்பு பங்கு வகிக்கின்றன. அவன் அவள் பெயரை சொல்லும் அழகே அழகுதான்.... வெண்ணிலா... என்பதில் தவறியும் வல்லின உச்சரிப்பு வந்துவிடக்கூடாது என்று நாக்கை லாவகமாக்கி காற்றுக்கே வலிக்காமல் மென்மையாக சொல்பவன். இருவரும் கண்களால் சந்தித்துகொண்டது இந்த மணித்துளியில்தான். ""நீ ரெம்ப நாளைக்கு இதேமாதிரி அழகாவே இருக்கணும், வாழ்த்துக்கள்"" இப்படியும் வாழ்த்து சொல்வார்களா? நன்றி, நீங்க இது மாறி எத்தன வருஷம் சொல்வீங்க? ளுக்கு வேலை இல்லாமல் கண்களில் சிறிதே சிரித்து நகர்ந்தாள். வெற்றிக்கு சென்றவுடன் முதன்முறையாக கண்ணாடி பார்த்தான், உற்று நோக்கினான்... ச..ச்சே.. கொஞ்சம் நல்லா சட்டையை தேய்த்து போட்டிருக்கலாமோ... உதட்டுக்கு கீழே ஒரே ஒரு மீசைமுடி நீண்டுகொண்டிருக்கிறதே... கவனிச்சிருக்கலாம்..... நாடிக்கு கீழே இடது பக்கம் கொஞ்சம் சரியாக மழித்திருக்கலாம்...சென்றவன்... திரும்பி தன் பின்புறம் நோக்கினான்... இடது தோள்பட்டையின் கீழ்... அவள் கொடுத்த இனிப்புக்கலவையின் கரை பட்டிருந்தது. மனதின் வேறுக்குள் எதற்கோ மகிழ்ச்சி பானம் சுருக்கென்றது கிள்ளியது. அவள் கேள்வி புரியவில்லையா இல்லை நம்பமுடியவில்லையா? பசித்தது... சாப்பிட்டான்.. பசித்தது, தூக்கம் வந்தது படுத்தான்... தூக்கம் வரவில்லை..(குறிப்பு: இங்கே எழுத்துப்பிழையோ அல்லது பொருள்பிழையோ இல்லை... சரியாகத்தான் எழுதுகிறேன்...பசித்தது... சாப்பிட்டான்.. பசித்தது, தூக்கம் வந்தது படுத்தான்... தூக்கம் வரவில்லை..) புதிய உணர்வாக பட்டது.... நான் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்..கல்லூரிக்கு போறதுக்கு முன்னால அவள பாத்திரனும்... என்ன சட்ட போடலாம்... என்ன பேசலாம்... வெண்ணிலா.. ரெம்ப பிடிச்சிருக்கு..... இல்ல இல்ல உனக்கு பிடிச்சிருக்கா.. ம்..ம் இல்ல நேத்து என்ன சொன்ன சரியா புரியல மறுபடியும் கேட்கணும் போல இருந்துச்சு... இல்லேனா கவிதையா சொல்வோமா... ""நான் ஏறும் ஒவ்வாரு படிக்கட்டிலும் நீ தோளுக்கருகே இருக்கவேண்டும்... """" கவிதை எழுதவேண்டுமென தோன்றியது. இயந்திரவிலும், தாமரைக்கண்ணனின் வரலாறும் கசந்து தமிழும், இலக்கியமும் படிக்கவேண்டும்போல தோணியது வெற்றிமாறனுக்கு.

தனிம மூலக்கூறுகள் பூக்களால் பின்னப்பட்டதுபோல்...
கணினி கண் சிமிட்டியதுபோல்...
வரைபடங்கள் வாழ்த்துமடலானதுபோல்...
பொறியியல் வாய்பாடுகள்
புள்ளியில்லா கோலமிட்டதுபோல்....
பாதி பழுதான மகிழுந்துபோல்....
என் மனம் மாற்றமடைந்துவிட்டது!!

எனக்கு தெரிந்ததெல்லாம் வேதிவினை மாற்றங்கள் மட்டுமே
தெரியாத வினையூக்கி ஒன்று
அமிலத்தில் புகுந்து வினைமாற்றம்
செய்துவிட்டதைபோன்ற ஒரு குழப்பம்.

இதயக்குழியில்
மின்காந்த அலைகள் கோர்த்துக்கொண்ட உணர்வு

புவியின் மொத்த ஈர்ப்புவிசையும்
உன் கண் நோக்கி இழுத்த சக்தி

இதுதான் காதலின் விளைவுகளா?- இல்லை
காதலின் இயற்ப்பன்புகளா?

என்ன இருந்தாலும்
மனதின் மையத்தில் மகிழ்ச்சி


உண்மையில் எனக்கு இது புது உணர்வு, முற்றிலும் நான் பார்க்காதது. எனக்கு புரியவில்லை நன்மைக்கா... என்று. எப்படி இருந்தாலும் உன்னுடன் பேசணும் போல இருக்கு... உன்ன பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு. உன் கூடவே வாழ்க்கையின் எச்சம் வரை இருக்கணும் போல இருக்கு. என்னை உனக்கு பிடித்திருந்தால்...நாளைவரும்போது கருநீல பச்சை ஒன்று அடிக்கடி உடுத்துவாயே.. அதை உடுத்திக்கொண்டு வா. இல்லையென்றால்...உன் விருப்பங்களில் என் பார்வைகளை முடியாவிட்டாலும் தவிர்த்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

வெற்றிமாறன்.

நான்குமுறை கிழித்தெறிந்து ஐந்தாவது முறை வடிவமைத்த கடிதம். பில் கேட்ஸ் மகள் கூட தன் காதலை வெளிப்படுத்த மைக்ரோசாப்டின் இத்தனை
செயற்க
லை பயன்படுத்தியிருக்க மாட்டாள். சேவல் கூவிவிட்டது. வெற்றி இப்போதுதான் தூங்கினான்.

தஞ்சை மாநகரம்:

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - இது ஏன் இப்பொழுது என் மனதில் ஓட வேண்டும். வெற்றிமாறன் சிறிதே சிரமப்பட்டார்... நான் எடுத்த முடியால் என் மக்களுக்கு ஏதும் துயரம் வந்துவிடுமோ என்று விசனப்பட்டார். தான் கும்பிடும் காவல் தெய்வத்தை மணிக்கு நூறுமுறை கூப்பிட்டார்.... காவலுக்கு வருவானா கருப்பசாமி.

கொச்சியிலிருந்து புறப்பட்டால், நூறு கடல்மைல் வேகத்தில் வந்தாலும் இந்தியாவின் INS வகை விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் தமிழக கரையை இன்னும் ஆறு மணி நேரத்தில் தொட்டுவிடும். அதன்பின் ஒவ்வொரு வினாடியும் மரணத்தின் விளிம்பை விட்டு விட்டு தொடும் நிகழ்வுகள்தான். தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல.....என்ற வரிகளை அடிக்கடி ஞாபகபடுத்திகொண்டார்.


கக்கன், திலீபன் இருவரையும் கூப்பிட்டு உடனடியாக தனித்தமிழக வெற்றிவிழாவை கொண்டாட மக்களை அவரவர் ஊர்களிலும், நகரங்களிலும் கூடுமாறு அழைப்பு விட்டார். அதிகாலை எட்டுமணிக்கே அனைவரையும் திரட்டுமாறு பணித்தார்.

அதிகாலை ஊடகங்களிடையே பேசினார்...

வணக்கம். கடந்த தினங்களில் ஊடகங்களின் வாய் பூட்டபட்டதற்க்கு மன்னிக்கவும். என் முடிவுகளை நீண்ட எதிர்ப்புகள் இல்லாமல் தாங்கிகொண்டதற்கு நன்றிகள். உங்களில் சிலர் இந்திய ஆதரவு கூட்டங்கள் இருக்கும் என தெரியும். இருந்தாலும் உங்கள் உணர்வுகளை தரமுடன் எழுத வாழ்த்துக்கள். எனக்கு என் மீதும் என் மக்கள் மீதும் நன்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் ""உரிமைகள் எப்பொழுதும் பொறுப்புகளுடன் கொடுக்கப்படும்"" நீங்கள் உங்கள் பொறுப்புகளையும், நீதியின் எல்லையை தாண்டும்போது வெற்றிமாறன் தன் அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும் என்ற சிறிய எச்சரிக்கையுடன் ஊடகங்களை திறந்துவிட்டார்.


அனைவரும் எதிர்பார்த்தது போல் இந்திய போர்ப்படைகள் INS ரக போர்விமானங்களின் மூலம் கிழக்குகரை வழியாக தமிழகத்திற்குள் புகுந்தார்கள். மாறனின் படைகள் எந்தவித எதிர்ப்புமின்றி வேடிக்கை பார்த்துகொண்டிருந்தது. எளிதாக மைல் மைலாக நகர்ந்தார்கள். காலை எட்டுமணி அளவில், இந்திய போர்ப்படைகள் முன் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்தன. மக்கள் திரளாக வந்தனர். ஒவ்வொருவரின் கையிலும் மாறனின் படமும், புலிக்கொடியும் ஏந்தியிருந்தார்கள். ஆங்காங்கே வைக்கபட்டிருந்த தொலைதிரையில் மாறன் உரையாற்றிகொண்டிருந்தார். தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல.....என்ற வரிகளை அடிக்கடி தொலைத்திரையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் வடமொழியில் ஓடவிட்டிருந்தார்கள். இந்நிகழ்வு உலகம் முழுதும் உள்ள தொலைகாட்சியில் அவசர செய்தியாக அறிவிக்கப்பட்டது.


இந்தியப்படைகள் யாரை சுடவேண்டும் என்ற உத்தரவிற்காக காத்துக்கொண்டிருந்தது. ஆனால் தில்லியோ, அனைத்து தமிழகமும் தங்கள் கட்டுபாட்டில் வந்துவிட்டதாக செய்தி சொன்னது. கூடிய விரைவில், ஆளுநரும், உயர் செயலாளரும் டில்லியிலிருந்து அனுப்பபடுவார்கள் என்று அறிவித்ததது. அமெரிக்காவும், மேற்க்கத்திய அடிவருடிகளும் ஆமாம் நல்லது என்று தலை ஆட்டியது. அடுத்த அரைமணி நேரத்தில் ஊருக்கு ஒரு புலிக்கொடி உயரப்பறந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் ஒவ்வவொரு ஊரிலும், நகரத்திலும், பெருநகரத்திலும், மாவட்ட தலைநகரிலும் ஒருவர் மாறனின் சார்பாக   உயர் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். அனைத்து நிர்வாகங்களும் அவரின் நிழற்குடையின் கீழ் வர பணிக்கப்பட்டது.


பகல் நேர இடைவேளையின் போது மாறன் பேசினார். இன்னும் சில நாட்களில் அனைத்து நிர்வாக அலுவலங்களிலும் ஊழியர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதே அலுவலகங்கள், அதே அதிகாரிகள், அதே ஊழியர்கள். கட்டுப்பாடு மட்டும் வேறுவிதமாக இருக்கும். இந்திய படைகளுக்கோ, அலுவலர்களுக்கோ ஆதரவாக அல்லது இணக்கமாக செயல்படும் மக்கள் இனம் காணப்பட்டு தற்காலிகமாக தடுத்துவைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்திய படைகள் யாரையும் துன்புறுத்தும் நோக்கில், அல்லது வக்கிரமாக, கொடூரமாக, கடினமாக நடந்து கொள்ளும் வேளையில் பொதுமக்கள் உடனுக்குடன் 999 ஐ தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.


இந்திய செய்தி ஒன்று அவசர அவசரமாக வெளியிடப்பட்டது. வெற்றிமாறன் உடனடியாக கட்டுப்பாட்டை "விக்ரம் சிங்" என்பவரிடம் ஒப்படைக்குமாறும், தவறினால் அவரின் கீழ் இருக்கும் இந்திய படைகள் வேறு வழியின்றி ஆயுதங்களை பயன்படுத்தி அலுவலங்களையும், காவல்நிலையங்களையும் கட்டுபடுத்தநேரிடும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக மக்கள் இன்னும் இந்தியர்களே.. எனவே இந்திய கட்டமைப்பு சட்டங்களை மதிக்கவேண்டிய கடமை உள்ளது என்றும், மீறுபவர்கள் சிறையிலிடப்படுவார்கள் என்றும், கடுமையான தண்டனை சட்டம் கையாளாப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

உண்மையில் மக்கள் குழம்பினர். யாரை நம்புவது. யாருக்கு கட்டுப்படுவது என்று. நேரம் மாலை ஆறுமணி முப்பது நிமிடங்கள்...........

தொடர்வோம்......

No comments: