Monday, May 9, 2011

அடையாளம் வாரம் - 11‏

சரக் சரக் என்ற சத்தத்துடன் வந்த ஒரு மிடுக்கான அலுவலர், மாறனின் கைது செய்யும் ஓலையை நீட்டினார். அந்த சிரிப்பில் எதிரியும் வீழ்வானே...அதே புன்முறுவலுடன் சொன்னார்.. ""ஒரு பதினைந்து நிமிடங்கள் கொடுத்தால், என் வேலையை முடித்துவிடுவேன், அதன் பின் நானே உங்களுடன் வருகிறேன், ஒன்றும் பயப்பட வேண்டாம்"" ஏற இறங்க, சுற்றும் முற்றும் நோக்கியபின் தலை அசைத்தார். ஒலி, ஒளிப்பதிவு தொடர்ந்தது... ""இன்னும் சில நிமிடங்களில் நான் கைது செய்யப்படப்போகிறேன், நான் மீண்டும் உயிருடன் வருவேனா அல்லது விதைக்கபடுவேனா என்பது எனக்கே தெரியாது, அல்லது காலவரை இன்றி ஏதேனும் ஒரு கடுஞ்சிறையில் அடைக்கப்படலாம்... எதுவாக இருந்தாலும்., இது போர்...விதைப்பதும், முளைப்பதும் கண்டு ஆவேசப்படாமல் தொடர்ந்து போராடுவோம்.... இறப்பதும், பிறப்பதும் இயல்பு, இதற்கிடையில் நம் இனத்திற்காக, சிறு விதையையோ, பெரும் போரையோ நான் அல்லது என் செயல்கள் செய்திருக்குமென்றால், மக்களாகிய நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நான் சொல்வதற்கில்லை. இருந்தாலும், பெரும்பாடுபட்டு உருவாக்கிய தனித்தமிழகம் தொடர்ந்து இயங்குவதற்காக, நான் இல்லாத போது யார் யார் எந்த பொறுப்பில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்க்கனவே சொல்லியிருக்கிறோம், எனவே அவர்களுக்கு உங்கள் ஆதரவை எனக்கு கொடுத்தது போல் தர வேண்டுகிறேன். நான் உயிருடன் மீண்டும் சந்தித்தால் தனிதமிழகத்தில் மட்டுமே. நன்றி"" சரியாக பதினான்கு நிமிடத்தில் முடித்துவிட்டு கைது செய்ய பணித்தார். அதே நேரத்தில் கக்கன், தீலீபன், குமரன் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கும்பம் மாதம் பிறந்த தனித்தமிழகம், பிறந்து ஒரு சில வாரங்களிலேயே தன் தலைவனை சிறைக்கு தள்ளியது. மீனம் முதல் நாளில் தேர்தலை நடத்தி வெற்றிபெற்றுவிட்டால், ஐ.நா. வையும் உலக நாடுகளையும் ஒத்துகொள்ளவைப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது என்று நன்பிக்கை கொண்ட மாறன், சிறையிலிடப்பட்டார். இதுவும் எதிர்பார்த்ததுவே. அனைத்து கட்டுபாடுகளையும் சில மணி நேரங்களுக்குள் விக்ரம் சிங் கைக்குள் கொண்டுவந்தான்.

பெங்களூர்:
மிகவும் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு திருமண கூடத்தில் கூட்டம் நடந்தது. அரிமாவேந்தன் (தேர்தல் ஒருங்கிணைப்பாளர்) தலைமையில், தமிழ்ச்செல்வன் (தற்காலிக தலைவர்) முன்னிலையில், பால். புகழேந்தி (மூத்த கட்டளை தளபதி-பொறுப்பு), நடேசன் செல்வா (கட்டளை தளபதி-பொறுப்பு) ஆகியோர்கள் இருக்க காலை எட்டு மணிக்கே தொடங்கியது அந்த மிக முக்கிய கூட்டம். மேலும் நானூறு தலைகள் காணப்பட்டன. அனைவர் கையிலும் மடிக்கனினி, முதலில் அரிமா பேசினார். ""வணக்கம், மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோம் என்பது நாம் அனைவரும் தெரிந்த உண்மை, எனினும் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வரங்களே இருக்கும் இவ்வேளையில், இரண்டு செயல் திட்டங்கள் குறித்து நான் பேச இருக்கிறேன் . முதலில், மாறன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடர் பேரணி, தினமும் எல்லா இடங்களிலும் நடக்கவேண்டும், அதைவிட முக்கியம் தேர்தல் ஏற்பாடுகள். முதல் பொறுப்பு நடேசன் தலைமையில் நடக்கும், இரண்டாம் பொறுப்பு புகழேந்தி தலைமையில் நடக்கும், இருவரும் தங்கள் செயல் திட்டங்களை இப்பொழுது விளக்குவார்கள்.

நடேசன் செல்வா:
இந்திய படைகள் குழுமியிருக்கும் இத்தருணத்தில் பேரணி நடத்துவது சிரமமாக இருந்தாலும், என் திட்டம் இதுதான்.
1. முதலில் மாறனின் பேச்சை அனைத்து இடங்களிலும் காண்பிப்பது, இதனால் பொதுமக்கள் சிலர் கூட்டத்திற்கு வர வாய்ப்புண்டு.
2.  கல்லூரிகள், பள்ளி மாணவர்களிடம் அவரவர் மாணவர் தலைவர்களிடம் பேசி பேரணிக்கு வரவழைப்பது, இதன் முடிவை நன்றாக இருக்கும் என நண்பிக்கையாக இருக்கிறேன். எனக்கு தெரிந்து அனைத்து மாணவர்களும் வருவார்கள். நமக்கு எப்பொழுதும் மாணவர்கள் செல்வாக்கு உண்டு. மாணவர்கள் பெரும் தொகையாக வந்தால், அவர்களை பின் தொடர்ந்து பொதுமக்கள் நிறைய பேர் வருவார்கள் என்பதும் நம் கணிப்பு.
3. அனைத்து பேரணிகளும் நேரலை மூலமாக இணையத்திற்கு அனுப்பப்படும், நம் தொலைகாட்சி, துணைக்கோள்கள் அனைத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துகொள்ளப்பட்டதால், நாம் இணைத்தை மட்டுமே நம்பி உள்ளோம்.
துணைக்கேள்வி: இணையமும் துண்டிக்கப்பட்டால் என்ன செய்யப்போகிறீர்கள்?
பதில்: இணையம் துண்டிக்கும் சாத்தியம் மிகவும் குறைவு, ஏனென்றால் ஏதேனும் ஒரு ஐ.பேட் இருந்தாலே போதும்.

பால். புகழேந்தி:
தேர்தல் ஏற்பாடுகள் சாத்தியமே. ஒன்றும் குழப்பம் வராது. யாரும் பீதி அடையவேண்டாம். முதலில் தேர்தல் மீனம் முதல் தேதி என்பது அனைவருக்கும் சென்றடையவேண்டும்.இதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்று நம்புகிறேன். தேர்தல் பாதுகாப்பாக நடக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். எப்படி பாதுகாப்பை உறுதி செய்யப்போகிறோம் என்பதுபற்றி நான் இங்கே முழுமையாக சொல்லமுடியாது. அதற்காக பணிக்கப்பட்ட நபர்களிடமும், தமிழ்ச்செல்வனிடமும் அதற்க்கான வரைவு சமர்பிக்கப்பட்டு, அனுமதியும் வாங்கப்பட்டுவிட்டது. எனவே,
1 . தேர்தல் தேதி மக்களிடம் சென்றடையவேண்டும்
2 . வாக்குப்பெட்டி கையில் கிடைத்ததும், ஒரு மணி நேரத்திற்குள் சின்னங்கள் உள்செலுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதற்க்கான பொறியாளர்களை தேர்வுசெய்யும் பனி முடுக்கிவிடப்பட்டுவிட்டது.
துணைக்கேள்வி: பொறியாளர்கள் தவறு செய்யும் பட்சத்தில் மொத்தம் தவராகிவிடக்கூடும், எப்படி இதை உறுதி செய்யப்போகிறீர்கள்?
பதில்: நன்று. இதற்கான மென்பொருள் பதிவுக்குசியில் இறக்கப்பட்டு பத்துநிமிடங்களில் செயல்படதொடங்கிவிடும். எனவே மிகப்பெரிய தொழில்நுட்பவாதிகள் தேவை இல்லை.

No comments: