Saturday, April 23, 2011

அடையாளம் வாரம் - 10‏

தேர்தல் அறிவிப்பு:
தலைவர் வெற்றிமாறனின் அறிவுறுத்தலுக்கிணங்க, கட்சியின் தகவல் செயலாளராகிய நான், குமரன் வாசிக்கும் முறைப்படியான தேர்தல் அறிவிப்பு.

வருகின்ற மீனம் மாதம் முதல் நாள் தனி தமிழகத்தின் முதல் தேர்தல் நடைபெறும். நாம் இதுவரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து இந்திய கட்சிகளுக்கு வாக்களித்துக்கொண்டிருந்தோம், நாமும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்து, தமிழக மாநிலத்தின் தலைவராக வெற்றிமாறன் இருந்து வந்தார்கள். இனி அதற்க்கு அவசியம் இல்லாததால், நாம் நமக்கென்று ஒரு கட்சியை உருவாக்கியுள்ளோம். தமிழ் குடியரசு கட்சி என்ற பெயருடன், புலி சின்னத்துடன், சிவப்பு வண்ணத்தில் நடுவில் சீரிய புலியுடன் கொடியை கொண்டு இருக்கும். நமது கட்சி மட்டுமல்லாது, மக்களாட்சி தத்துவத்தில் இயங்கும் அனைவரும் தேர்ததில் கலந்துகொள்ள வரவேற்க்கப்படுகிறார்கள். இது முதல் தேர்தல் என்பதால், சில இந்திய கட்சிகள் களத்தில் நிற்க விரும்பும் வேளையில், அவர்களும் தேர்தலில் நிற்க அனுமதிக்க படுவார்கள். தேர்தல் தமிழ் குடியரசு கட்சியை காட்டிலும் இருபது விகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பெரும் நிலையில், இந்திய கட்சிகள் அடுத்த தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப்படுவார்கள். ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் பதிமூன்றாம் நாள் வாக்கு தினமாக இருக்கும். தேர்தல் ஒருங்கிணைப்பாளராக அரிமாவேந்தன் இருப்பார், தேர்தல் முறைப்படி, நேர்மையான முறையில், மக்களாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில் நடைபெறுவதை உறுதி செய்வதன் பொருட்டு ஐ.நா. சபையின் உறுப்பினர் ஒருவரின்மேற்பார்வையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம், ஐ.நா. சபை உறுப்பினர்கள் வர விருப்பமில்லாத பட்சத்தில், நோர்வே, சுவீடன், சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சமூக ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களது மேற்ப்பார்வையில் நேர்மையான தேர்தல் நடத்த ஏற்ப்பாடு செய்யப்படும். சில அவசியமான கட்டுபாடுகள் தமிழக தேர்தலில் கடைபிடிக்கப்பட வேண்டும். அவற்றில் சில இங்கே வாசிக்கிறேன், முழுமையான விவரங்கள் தேர்தல் ஆணையத்திடமிருந்து வேட்பாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

1. கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு பின்பும் அதே கூட்டணியில் நிலைக்கவேண்டும்.
2. இலவச அறிப்பிவிப்புகள் தடை செய்யப்படுகின்றன
3. வேட்பாளர்கள், தலைவர்கள், கட்சிகள் தத்தம் சொத்து விபரங்களை தெரிவிக்கவேண்டும். விபரங்கள் தவறாக இருப்பின், நிரூபிக்கபட்டால் மீண்டும் தேர்தலில்
    நிற்கமுடியாது.
4. சுவரொட்டிகள், படவெட்டுகள், கூப்பாடுகள் தடைசெய்யப்படும். 
ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தேர்தல் கூட்டங்கள் நடத்தவேண்டும்.

இந்தியாவும், இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தலை தவிர்க்கும் பட்சத்தில், தனித்தமிழகதிற்கு புலிச்சின்னமும் இந்திய ஆதரவு கட்சிகளுக்காக இந்திய அரசின் சின்னமாக அசோக சின்னமும் வாக்கு இயந்திரத்தில் பொறிக்கபட்டிருக்கும். இந்தியாவுடன் சேர்ந்து இருக்க விரும்புபவர்கள் அசோக சின்னத்திற்கு வாக்களிக்கலாம். வாக்குகள் கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு அனைத்து நாடுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் அனுப்பிவைக்கப்படும். நாளை  வெற்றிமாறன் அவர்கள் தொலைக்கட்சியில் உரைநிகழ்த்துவார்கள், இதில் அரசின் நோக்கங்களும், கோட்பாடுகளும், அடங்கும்.

மாறன் வீடு:புற்களும், பூக்களும் கூட ஆழ்ந்து தூங்கும் இரவு மணி மூன்று. ஒரு காவலர் அவசரமணி பொத்தானை அழுத்தினார், அனைவரும் துப்பாக்கியை நேர்முனைபடுத்தி விறைத்து  நின்றனர். இந்தியபடையனியினர் சூழ்ந்தனர்...ஒரே ஒரு காவலதிகாரி பேசினார் "என்ன வேண்டும்? ஏன் இந்த நேரத்தில் உங்கள் முயற்சி? காலையில் பேசலாம், இந்திய படையணியினர் எதையும் கேட்கவில்லை, உட்புக முனைந்தனர்.... கொஞ்சம் பொறுக்கவும் நாங்களே கூப்பிடுகிறோம். ஒரு அதிகாரி கூப்பிட்ட அடுத்த பத்து மணித்துளியில் வந்தார் மாறன். கிட்டத்தட்ட இதே நிலைதான் திலீபன், கக்கன், குமரன் மற்றும் உயர் மட்ட தலைவர்கள் அனைவரின் வீட்டிலும். காவலர்களின் எந்தவித எதிர்ப்பையும் சந்திக்காமல், இந்திய படையணியினர் கைது ஏற்பாட்டை முடித்தனர்.
மாறன் கொண்டுசெல்லப்ப்படும்போது, வாகனம் சட்டென்று நின்றது, ஒரு அதிகாரி வந்து, மாறனின் முகத்தில் பளேரென்று அறைந்தார், "யார் நீ" முகத்தை கிள்ளி திரை கிளிக்கப்பட்டது, எங்கே மாறன்? வந்தவன் வாய் திறக்கவில்லை. திலீபன், கக்கன், குமரன் மூவரும் ஆள்மாறாட்டம் செய்திருந்தனர்.

காலை அவசர கூட்டம்:
திலீபனும், கக்கனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர கூட்டத்தில் யாருக்கும் தெரியாத சிலரும் கலந்து கொண்டனர். இன்னும் ஆறு மணி நேரம் நாம் அவசர நிலையை சமாளிக்கலாம். அதன்பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கூட்டமே இது. கூட்டத்தில் சில திட்டங்கள் பற்றி பேசினார். கூட்டத்தில் 800 பேர் இருந்தனர். இவர்களில் தமிழகம் அதிகம் பார்க்காத அழகிய, சிரித்த முகத்துடன் ஒருவர் அடிக்கடி பேசினார், அவர் பெயர் தமிழ்ச்செல்வன் என்றும், மாறன், திலீபன், கக்கன் இல்லாத போது அல்லது கைது செய்யபட்டால் கட்சியின் தற்காலிக தலைவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்ச்செல்வன், வயது 52, படித்தது சேதமுறா சோதனை துறையில், பட்டமேற்படிப்பு, அணு ஆராய்ச்சியில் முனைவர் பட்டம், கட்சியில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாதவர், முப்பது நாடுகளில் பெரிய பொறுப்புகளில் வேலைசெய்த அனுபவசாலி, ஆங்கிலம், ரஷ்ய மொழி, பிரஞ்சு மொழி நன்றாக பேசக்கூடியவர். மேடை பேச்சில் அவ்வளவு திறம் இல்லாவிட்டாலும், ஆலோசனை கூட்டம், மாநாடு, கலந்துரையாடல் போன்றவற்றை வழிநடத்தும் திறமை பெற்றவர். எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் சிரித்துக்கொண்டே சமாளிக்கும் பக்குவம் கொண்டவர், 
தமிழக அரசின் பொறியியல் கல்வி ஆணையகத்தில், திட்ட மேம்பாட்டு பிரிவில் தலைவராக வேலை செய்துகொண்டிருக்கிறார். பொறியியல் துறை மறுசீரைமைப்பு கொள்கை வகுப்பாளராக மாறனுக்கு துணை புரிபவர். இப்பொழுது அணுமின் கொள்கை மற்றும் பாதுகாப்பு பற்றி தீவிரமாக ஆய்வு செய்து மாறனுக்கு அறிக்கை செய்ய இருக்கும் வேளையில் தான், இப்பொழுது புதிய பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது.
அடுத்து பால்.புகழேந்தி. கல்வித்துறையில் இருப்போர் மட்டும் தெரிந்த முகம். அனைத்து பல்கலைகழகங்களின் வேந்தர், அண்ணா பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப்பபிரிவின் ஆலோசகர். வயது 44. கட்டுமான துறையில் பட்ட மேற்படிப்பு மற்றும் கட்டுமானத்துறை - இரும்பியல் துறையில் முனைவர் பட்டம், ஆழிப்பேரலையை தாங்கு திறன் கொண்ட எக்கிரும்புகள், நிலநடுக்கம் தாங்கும் திறன்கொண்ட கட்டுமானங்கள் போன்றவை இவர் ஆராய்ச்சியினால் சொல்லிகொள்ளதக்கது, மாறனுக்கு கட்டுமானத்துறையில் செய்யவேண்டிய சீரமைப்புகளை இவர்தான் ஆலோசனை வழங்குவார். திலீபன் கைது செய்யப்பட்டால் அவரது பொறுப்பை தற்காலிகமாக எடுத்துக்கொள்வார். தற்காலிக கட்டளை தளபதி (நிர்வாகம், சட்டம், தேர்தல், கூட்டங்கள், காவல் துறை மற்றும் சில).

நடேசன் செல்வா. வயது 38. பொருளாதார நிர்வாகம் துறையில் பட்ட மேல்படிப்பு. பொருளாதார அடிக்கட்டமைப்புகள், உள்நாட்டு பொருளாதாரம், விவசாய பொருளாதாரம், வெளிநாட்டு முதலீடுகள் போன்றவற்றில் மாறனுக்கு உதவி செய்தவர். புதிய அரசின் பொருளாதார கொள்கை வகுக்கும் செயல் திட்டத்தை  அமுலாக்கும் தொட்டு அனைத்து அறிக்கைகள், திட்டங்கள் தயாராக வைத்திருப்பவர். இளங்கன்று, கொதிக்கும் ரத்தம் கொண்டவர், கக்கன் கைது செய்யும் பட்சத்தில், நடேசன் செல்வா., அவரது கட்டளை பணிகளை தொடர்வார்.

தொலைக்காட்சி நிலையம்:
மாறன் தன தேர்தல் அறிக்கையை பதிவு செய்துகொண்டிருந்தனர். இந்திய படையணியினர் நுழைந்து கொண்டிருந்தனர்....

தொடர்வோம்...

No comments: