Thursday, May 19, 2011

அடையாளம் வாரம் - 12

நரோரா , புலந்சாகார் மாவட்டம், உத்திரபிரதேசம்:
புது தில்லியிலிருந்து 141.6 கி.மி., கங்கை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சிறு நகரம். மக்களில் 14% ஆறு வயதிற்கும் கீழிருக்கும் குழந்தைகள். பாவம் செய்துவிட்டு கங்கையில் குளித்தால் தீரும் என்று நம்பும் இந்துக்கள் இங்கேயும் வருவது வழக்கம். சங்க்வேத சமஸ்க்ருத பல்கலைகழகம் கங்கை ஆற்றின் மறுபுறம் உள்ளது. இதெல்லாம் விட சிறப்புவாய்ந்த அம்சம் என்னவென்றால், இந்திய அணுமின் கழகத்திற்கு சொந்தமான அணு உலை மின்சாரம் தயாரிப்பிற்காக நிறுவப்பட்டுள்ளது.
220  மெ.வாட் திறன் கொண்ட இரண்டு உலைகள் இங்குள்ளது. அதைவிட சிறப்பு, அணுமின் தயாரிப்பின் கழிவு நீரும், கங்கையில் தான் கலக்கிறது, யார் செய்த பாவத்தை தீர்ப்பதற்கோ!!.. கங்கையில் கரைத்தாலும் தீராத பாவங்கள் அல்லவா தில்லி அரசு செய்தவைகள்....ஒன்றா இரண்டா கழுவிவிட, எத்தனை லட்சம் மனித உயிர்கள்...... கங்கையை திருப்பி பாரளுமன்றதிற்க்குள் தான் விடவேண்டும்....கங்கையே நின்றுவிடும்., பாவத்திற்கு பயந்து.

என்ன காரணத்திற்காக, இங்கே வந்து (அணுமின்) உலை வைத்தார்கள் தெரியவில்லை. வடிவமைக்கப்பட்ட காலத்தைவிட சுமார் 20 ஆண்டுகள் கடந்தும் இந்திய அரசு இன்னும் உலையை மூடவில்லை. மேற்கு நாடுகள் அணுமின் திட்டங்களை விடுத்து இயற்க்கைக்கு உகந்த மின் தயாரிப்பு அமைப்புகளை நிர்மாணிக்கும் நேரத்தில், இங்கே அணுஉலைகள் முளைத்துக்கொண்டு இருக்கின்றன. ஆம்.. செய்த அணுஉலைகளையும் அதன் உதிரி பாகங்களையும் மேற்குலகம் கடலிலா கரைத்துவிடும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் தானே வாங்கவேண்டும், இல்லை வாங்க வைக்கப்படவேண்டும்!!

காற்றும் தூங்கிக்கொண்டு வீசும் அதிகாலை மூன்று மணி. மீனம் மாதம் முதல் நாளில் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும், மக்கள் பயமின்றி வரிசையில் நிற்க  தொடங்கலாம், வெற்றிமாறன் மீண்டு வருவார், மக்களே வாருங்கள் வரிசையாக, வந்து சொல்லுங்கள் தீர்ப்பை, நாளை வாக்கு தினம் போன்ற வாசகங்கள் தாங்கிய பலகைகள், தட்டிகள், அட்டைகள் அங்கங்கே கிடந்தன. இன்னும் ஐந்து மணி நேரமே மிச்சமிருக்கும், அதிகாலை மூன்று மணி..........

பார ஹோதி: 
முன்னால் உத்திரபிரதேசத்தின் சீன எல்லையோர பகுதி. பெரிதும் காதுகளில் தென்படாத ஒரு ஊர். சீன-இந்திய போர்களிலும், சண்டை மூளும் நேரங்களில் மட்டும் இந்திய அரசு கவனிக்கும் பகுதி. இமயமலையின் கணவாய் போன்ற பகுதி. சீனா இப்பகுதியை வு-ஜே (Wu-Je) என்றழைக்கிறது. இந்தியா திபத்தில் போய் உட்கார்ந்துகொண்டு சேட்டை செய்யலாம் என்றெண்ணி, சீனாவிடம் அடிவாங்கியது இந்தப்பகுதியில்தான். மனிதர்கள் வாழ தகுதியற்ற இந்த பனிப்பாலைக்குத்தான் இரண்டு நாடுகளும் முட்டிக்கொண்டன. குளிர் காலங்களில் படைகளை திரும்பப்பெறுவதும், கும்பம், மீனம் மாதங்களில் மீண்டும் அனுப்புவதும் வழக்கம். எல்லையோர மீறல்களும் அப்போதுதான் நடக்கும். மிகவும் சிரமத்திற்கு இடையில் ஏவுகணைகளை இங்கே எடுத்து செல்வதுண்டு. பினாகா, பல்குழல் எறிகணைகள் வழக்கமாக பயன்படுத்தப்படும்.

"தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை, ஆனால் தமிழனுக்கென்று நாடில்லை", "நாதி இல்லை" என்று நொந்துகொண்டோர்களுக்கு இங்கே இருந்து கிளம்புகிறது அம்பு....புலிக்கொடி ஏந்தி.......இன்னும் ஐந்து மணி நேரமே மிச்சமிருக்கும், அதிகாலை மூன்று மணி.....காற்றும் தூங்கும் நேரம்...நாங்கள் தூங்கவில்லையடா...நாங்கள் நிறைய தூங்கி விட்டோமடா...எத்தனை நூற்றாண்டுகள் தூங்கினோம்....தூங்கியவன் மீதே மிதித்தீர்களே..ஞாபகம்  இருக்கிறதா? எத்தனை மனிதர்களை கொன்றீர்கள்....செத்தவனை கூட கொன்றீர்கள், பிணத்தை பிராண்டினீர்கள், கருவை கொன்றீர்கள்.... தாயின்  முலையை அரிந்தீர்கள்...இதோ எங்கள் அம்பு உங்கள் கைகொண்டு....இதோ இன்னும் பதினைந்து நிமிடங்களில் நரோரா, அணுமின் நிலையத்தில் விழும்....அடுத்து வீழ்வது நீங்கள். இனி நாங்கள் விழோம்! அங்கிருந்த இரு தமிழர்கள் பினாகா, பல்குழல் எறிகணை பொத்தானை அழுத்திவிட்டு ஆர்ப்பரித்தார்கள் "வாழ்க தமிழகம், விடுதலை மண்ணில் சந்திப்போம். அடிமையாய் இனி நான் வாரேன்! அடிமையாய் இனி நான் வாழேன்! எறிபடை 50 கிலொ எடையுள்ள வெடிபொருளை சுமந்துகொண்டு, 400 முதல் 600 கி.மி தூரம் பாயவல்லது. பார ஹோதி லிருந்து சாதாரமாக நரோரா வை அடைய சாத்தியமுடையது.

ஒவ்வொரு அணுமின் நிலையமும் இந்திய அரசின் சிறப்பு படையினரால் பாதுகாக்கப்படுகிறது, அதிலும் சில முக்கிய உலைகள் தடுப்பு ஏவுகனை, எறிகணை வசதி பொருத்தப்பட்டிருக்கும்., மேலும் இவை தனிச்சையாக செயல்படும் அசாத்தியமும் பெற்றது. ஆனால், நரோராவில் தனிச்சையாக செயல்படும் பாதுகாப்பு செய்யப்படவில்லை என்பது குறிப்பு. இவைகளை, பாதுகாப்பு படையினர் ரேடார் கருவிகள் மூலம் கண்காணித்து பின் தடுப்பு எறிகணைகளை எரியூட்டுவார்கள். இங்கேதான், இவர்களது சறுக்கல். வழக்கம்போல், ரேடார் பார்ப்பவன் ஒருவன், படையணியை கட்டுப்படுத்துவது ஒருவனாவே இருப்பார்கள். பார்ப்பவன் பார்த்து செய்பவனிடம் செயல்படுத்த சொல்லவேண்டும்.

அதிகாலை 03. 05. காற்றும் தூங்கும் நேரம்... காற்றை கிளப்பிக்கொண்டு சீறிப்பாய்ந்து வந்துகொண்டிருந்தது ஒரு எறிகணை. இன்னும் பத்து நிமிடங்களில் நரோராவை அடையும். ராடார், மின்காந்த அலைகள் வானில் அனுப்பப்பட்டு, பொருட்களின் மீது படுவதால் பெறப்படும் மீளலைகளை பிரதிபளிபதே, அதே சம அளவுள்ள அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகள் ஒருவழிப்பாதையில் அனுப்பப்பட்டு ராடாரின் மீது பட செய்யும்போது, மீளலைகளை குழும்பிவிட செய்வதும் சாத்தியமே, இது மின்னணு படைக்கருவி எனவும் கூறலாம், இம்முறையில், நரோராவில் வெற்றிமாறனின் ஆட்கள் ராடரை இருட்டடிக்க செய்தனர். இரு அனுஉலைக்கும் இடையில் இருக்கும் போதிய இடைவெளியில் விழும்....

அதிகாலை 03.18. இந்திய தலைமை அமைச்சர், குடியரசுத்தலைவர், தலைமை செயலர் உள்ளிட்ட அனைத்து உயர்மட்ட தலைவர்கள் கூடினார்கள், தலைமைசெயாளர் நரோராவிலிருந்து வந்ததாக ஒரு மின்மடலை அனைவரின் பார்வைக்கும் வைத்தார், அதில் அழகிய தமிழ், ஆங்கிலம், இந்தி என் மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது, "மேதகு இந்திய தலைமை அமைச்சர் அவர்கட்கு வணக்கம், இந்திய மக்களுக்கோ, அரசாங்கத்திற்க்கோ சிரமம் கொடுப்பது எங்கள் திட்டம் இல்லை என்பது, எறிகணை வந்து விழுந்தும் வெடிக்காதது கண்டவுடன் உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம், எறிகணை ஏவும் எங்களுக்கு அதில் வெடிகுண்டிட வெகுநேரம் ஆகாது என உங்கள் படையணியினர் சொல்லாமல் இருக்கமாட்டார்கள். எங்கள் நோக்கம், அறிவித்தபடி தேர்தல் எங்கள் தனிதமிழகத்தில் நடக்கவேண்டும் என்பதே அன்றி வேறில்லை. எங்கள் தலைவர் வெற்றிமாறனை சிறையிலிருந்து வெளியிடவேண்டும் என நாங்கள் இரஞ்சவில்லை, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை எங்களுக்கு பல நூற்றாண்டுகளுக்கு தேவையானதை அறிவுறித்திவிட்டு, வழிநடத்திவிட்டுதான் சென்றிருக்கிறார். அவர் எப்படியும் வெளிவருவார் என்பதை நாங்கள் அறிவோம், அவரை சிறையும், மரணமும் ஒன்றும் செய்யமுடியாது என்பதை நாங்களும், எங்கள் மக்களும் அறிவோம். இந்த வினாடியில் இல்லாமல் இருக்கலாம், அவர் இருந்திருந்தால் ஒரு தலைவர் மட்டுமே, அவர் இல்லாதபோது அத்தனை மக்களும் தலைவரே, எனவே அவர் இல்லாத நேரத்தில் எங்களுக்கு நடந்த சிறு சிறு சறுக்கல்களை கொண்டு எங்கள் இனத்தின் விடுதலை வேட்கையை தராசிடவேண்டாம், அதற்க்கு உங்களிடம் அளவுகோலும் இல்லை, நிறுக்கும் ஆட்களும் இல்லை.

எனவே, தேர்தலை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தும் திட்டம் விடுத்து, தமிழக தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் அத்தனை மின்னணு வாக்கு பெerட்டிகளை அந்தந்த மாவட்ட தலைநகருக்கும், வாக்கு சாவடிகளுக்கும் உடனடியாக கொடுத்தனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்னும் உங்களுக்கு நடந்த நடவடிக்கைகளை நினைத்து செரித்திருக்கமாட்டீர்கள் அல்லது நம்ப மாட்டீர்கள் என எங்களுக்கு நன்றாகவே தெரியும், எனவே இந்த கடிதம் படித்து பத்து நிமிடங்களுக்குள் முப்பத்துரெண்டு லட்சம் சதுர கிலோமீட்டருக்குள் மண்ணிக்கனும், தமிழக பரப்பளவை கழித்துக்கொள்ளவும் எங்கேனும் மற்றுமொரு எறிகணை விழும், மீண்டும் நீங்கள் வாக்குபெட்டிகளை நகர்த்தாமல் வேறு ஏதேனும் காய்நகர்த்த முற்ப்பட்டால் பத்து நிமிடத்திருக்கு ஒரு எறிகணை வீதமாக எங்கேனும் ஓரிடத்தில் விழுந்துகொண்டிருக்கும், இனிமேல் விழுவது பூச்சாண்டியாக இருக்காது, குறைந்ததது ஐம்பது கிலோ எடைகொண்ட வெடிகுண்டை தாங்கி வரவல்லது உங்கள் பினாகா என்பதை நாங்கள் சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை.

நேரம் இப்பொழுது சரியாக 03.38, நான்கு மணியளவில் நீங்கள் வாக்குபெட்டிகளை நகர்தினால்தான் சரியான நேரத்தில் நாங்கள் வாக்குப்பதிவை ஆரம்பிக்கமுடியும். உங்கள் படையணிகள் அங்கே காவலுக்கு நிற்கலாமே தவிர, தேர்தல் கூட்டங்களை நடத்தவிடாமல் செய்தததை போல் ஏதேனும் இடைஞ்சலாக செயல்படக்கூடாது என அறிவுறுத்துகிறோம். சொன்னது போல், 03.48  மணிக்கு மும்பை சட்டசபைமுன் ஒரு எறிகணை விழுந்தது, அதிலும் புலிக்கொடியுடன் ஒரு செய்தி கடிதமே இருந்தது. அந்த செய்தி குண்டைவிட பலமாக வெடித்தது.....................

No comments: