Tuesday, April 5, 2011

அடையாளம் வாரம் - 8‏

அய்யம்பாளையம் பேரூராட்சி:
தாமரைக்கண்ணன் பறையர் குலத்தை சேர்ந்தவர். அப்பா கனகசுப்புரத்தினம்,  தமிழக காவல்த்துறையில் கண்ணியமாக வேலைசெய்த தொப்பை இல்லாத அலுவலர், பணிமுடியும் தருவாயில் மாவட்ட கண்காணிப்பாளராக வேலை செய்தவர், வேலை செய்த மாவட்டம் திண்டுக்கல். அய்யம்பாளயத்திலிருந்து ஒருமணி நேரபயனம்தான். அப்பா தனித்தமிழக கோட்பாடுகள் மீது நன்பிக்கை கொண்டவர். அவருடன் வேலை செய்த நண்பர் சாலமன் ஆரோக்கியசாமி, நெல்லைக்கருகில் முக்கூடல் பேரூராட்சியில் பிறந்து வளர்ந்தவர். சாலமன் ஆரோக்கியசாமி குடும்ப நண்பர். அவர்தான் கனகசுப்புரதினத்திற்கு தமிழ் தேசியம் சொல்லிக்கொடுத்தவர். சாலமன் ஆரோக்கியசாமியின் மகன் சாலமன் மாணிக்கம், தாமரைக்கன்னனின் நெருங்கிய நண்பரானவர், அவரும் சாகும் வரை தமிழக தனிநாடு குறித்து பல கட்டுரைகள் எழுதியவர். இவர் வெற்றிமாறனின் தாத்தாவுடன் படித்தவர். இதுவரை சங்கிலிப்பினைப்புகள் போதுமென நினைக்கிறேன். இந்த பிணைப்புகளை பற்றி மற்றுமொரு தனி ஒரு பதிப்பில் பார்க்கலாம். இந்த பிணைப்புகளை நீட்டிசென்று பார்த்தோமானால், பொன்னம்பலம், தோமையர், மை.பா, அரிமாவளவன் மற்றும் அறிஞர் குணா வரை நீள்கிறது. அய்யம்பாளையம் ஒரு நல்லாசிரியரை இழந்த ஊர். அரசியலில் தீவிரமாக இறங்கியபின் இப்பொழுதுதான் வெற்றிமாறன் இரவை இங்கு கழிக்கிறார், இந்தபுன்னிய மண்ணில். தான் வளர்ந்த, வாழ்ந்த ஊர். அம்மாவும், அப்பாவும் தன்னை தாமரைக்கன்னனுக்கும், தமிழகத்திற்கும் தத்து கொடுத்துவிட்டு பழநியிலிருக்கும் நூர்ப்பாலையை கவனிக்க சென்றபின் வாடிப்பட்டி தாண்டி வந்து வாழ்ந்த ஊர். வாடிபட்டியிலிருந்து சில மைல்கள் தான் என்பதால் தன் மண்ணை விட்டுவிட்டு வந்தோம் என்ற நினைப்பே இல்லாமல் போனது மாறனுக்கு. தன் கண்கள் பார்த்து மூலையில் பதிவு செய்தவை அய்யம்பாளையம், மருதாநதி மற்றும் சுற்றியிருக்கும் மலைகளும், மலை சார்ந்த தென்னந்தோப்புகளும், பச்சை வெளிகளும்.

இந்த மண்ணில் காதல் பிறப்பது ஒன்றும் ஆச்சர்யமானது அல்ல.இந்த ஊரில் வாழ்ந்துவிட்டு காதலிக்காமல் போனால்தான் குற்றம். கவிதை எழுதுவதற்காக நதி ஒன்று தவழ்கிறது என்றால் அது மருதாநதியாகத்தான் இருக்கவேண்டும். இடுக்கில் ஓடும் நீரோடை, வெள்ளைப்பூக்கள் போல நீரலை, காலிடுக்கில் கடிக்கும் குட்டி குட்டி மீன்கள், வார்த்தைகளாக அள்ளித்தரும் துள்ளல் ஓசைகள். இந்த ஆற்றங்கரைதான் மாறனுக்கு கவிதை எழுத சொல்லிக்கொடுத்தது.

அய்யம்பாளயத்தின் தென்கோடியில் இருப்பது குட்டிகரடு. சத்தமில்லாத குட்டிமலை, மருதாநதியின் வாய்க்கால் அதனருகில் ஓடியதற்கு சான்றாக கோடு போட்டாற்போல் ஒரு தடமிருக்கும் இன்றும். குட்டிகரட்டிலிருந்து பார்த்தால் தெரியும் மூன்றாம் வீடுதான், தாமரைக்கண்ணனின் வீடு. யாரவது ஒருவர் அங்கே ஏதாவது ஒரு பாடம் கற்றுகொண்டிருப்பார்கள் எப்பொழுதும், அது அரசியலோ, தமிழோ, அல்லது தமிழரின் வரலாறோ. வீட்டின் முதல்மாடம் பெரியது, அங்கே பிள்ளைகள் படிப்பது வழக்கம். வீட்டின் முற்றம் அதன்பின் அழகிய தோட்டம், அங்கே சிலருக்கு மட்டும் அனுமதி உண்டு. அதில் முதலாமாவன் வெற்றிமாறன். வகுப்பு முடிந்ததும் வெண்ணிலாவுடன் பேசுவதும் அங்கேதான். தோட்டத்தின் தென்கிழக்கு மூலையில் ஒரு கொய்யா மரமுண்டு, இப்பொழுது....அங்கே உட்கார்ந்திருந்தார் மாறன். "கொஞ்ச நேரம் பேசணும்" பதினைந்து வருடமிருக்கும் அந்த குரலை கேட்டு "நல்ல இருக்கியா வெண்ணிலா?" இருக்கேன்... நீ?... நீங்கள்? தடுமாறினாள். ரெம்ப பிரச்சினையா இருக்குன்னு கேள்விபட்டேன்... எங்க வீட்ல சொன்னாக! பாத்து இரு மாறா..அந்தப்பிள்ள எப்பிடி இருக்கு?நல்லா.. வச்சிகிறையா? எல்லோரும் நல்லா இருக்கோம்... நம் ரெண்டுபேருக்கும் திருமணம் நடந்திருந்தா எப்படி இருப்போமோ தெரியல? ஆனா, இப்ப ரெண்டு பேருமே நல்லா இருக்கோம். அந்த நேரத்தில் வந்த வெண்மதி, வெண்ணிலா இருவரும் நலம் விசாரித்துவிட்டு மாறன் வீட்டில் அனைவரும் கிளம்பினார்கள்.


செங்கல்ப்பட்டு அரசு மேனிலைப்பள்ளி:

துப்பக்கிக்காரனின் கைபேசி அழைத்தது. கக்கன், கட்டளைத்தளபதி பேசியது. கைபேசி உதயகுமாரிடம் கொடுக்கப்பட்டது. வணக்கம் தம்பி. நல்லா இருக்கீங்களா? நல்லா பாத்துக்கிட்டங்களா பசங்க? நம்ப பசங்க தான்... ஒன்னும் செய்ய வேண்டாமுன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன். நடிப்பு வேலைய விட்டுட்டு வேற ஏதோ செய்றதா கேள்விப்பட்டேன்... அதேன்... செங்கல்ப்பட்டில் காபி சாபிட்டுட்டு போவீங்கன்னு இறக்க சொல்லியிருந்தேன்.... காபி சாப்பிட்டாச்சா? உதயகுமாரின் கை லேசாக நடுங்கியது. ஒன்னும் பிரச்சினை இல்ல... அந்த துப்பாகித்தம்பி ஒரு கடுதாசி குடுப்பாப்பில... அதுல இருப்பது போல கூட்டத்துல பேசுங்க....எல்லாம் சரியாகிவிடும்.

உதயகுமாருடன் சென்னையிலிருந்த வந்த காவலர்கள் அங்கேயே விடப்பட்டு கக்கனின் ஆட்களுடன் விருத்தாச்சலம் புறப்பட்டது உலங்கூர்தி. கூட்டம் அலைமோதியது. என் இனிய தமிழ் மக்களே... எல்லோருக்கும் சோதனை காலம் வரும், போகும். நமக்கும் வரும்... அது பனிபோல விலகிவிடும். உளறினான். பின், பேசினான்... இல்லை படித்தான். தனித்தமிழகம் என்பது நம் இனத்தின் விடுதலை., இது தெரியாமல் நம்மிடம் இந்தியா விளையாடுகிறது. நான் பேட்டி கொடுத்தது ஒரு தற்பாதுகாப்புக்காகத்தான் என்பது என்னை சுற்றி நெருங்கி இருக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்... துப்பாக்கிமுனையில் என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டித்தான் இந்தியா என்னை அந்த பேட்டி கொடுக்கச்சொன்னது., நானும் வேறு வழி இல்லாமல் பேசிவிட்டேன். நீங்கள் போட்ட பிச்சைதான் என் வாழ்க்கை, நான் உங்களுக்கு துரோகம் செய்வேனா? நீங்கள் என் படம் பார்த்து என்னை ரசித்தற்க்காக நான் கடன்பட்டுள்ளேன், மும்பையிலிருந்து வந்த என்னை உயரே உட்கார வைத்து அழகு பார்த்தவர்கள் தமிழர்கள், உங்களுக்கு நல்லது என்றால் நான் துணை நிற்ப்பேனே தவிர எதிர்ப்பேனா?

எனவே, என் ரசிக சிங்கங்களே...உங்களால் முடிந்த அளவுக்கு தலைவர் வெற்றி மாறனுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கேட்கவே நான் இந்த கூட்டத்திற்கு வந்தேன். மேலும் அறிவித்தபடி அனைத்து கூட்டங்களிலும் நான் வெற்றிமாறனுக்கு ஆதரவாக பேச முடிவுசெய்துள்ளேன். மீண்டும் நாம் மதுரை கூடத்தில் சந்திப்போம்.

தொடர்வோம்....

No comments: